இந்தியாவிலேயே பெரிய Boxing, MMA, UFC விளையாட்டு அரங்கு திறப்பு

 இந்தியாவிலேயே பெரிய Boxing, MMA, UFC விளையாட்டு அரங்கு திறப்பு

குத்துச்சண்டை, MMA, UFC, மல்யுத்தம், ஜூடோ போன்ற போட்டிகளை நடத்தும் இந்தியாவிலேயே பெரிய உள் விளையாட்டு அரங்கு (Indoor stadium) சென்னை, மதுரவாயலில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அனைத்துவித மான ஆபத்தான விளையாட்டுகளுக்கான ஒரு உள் அரங்கு தொடங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்றுநராக உள்ளார் மாஸ்டர் பாலி சதீஷ்வர். உலக தொழில்முறை சாம்பியனும் குத்துச்சண்டை வீரருமான பாலி சதிஷ்வர் மற்றும் சிலரின் கூட்டு முயற்சியில் 7500 சதுர அடியில் சென்னை மதுரவாயலில் உரு வாக்கியிருக்கிறார்கள். எவர்லாஸ்ட் பிரேவ் இன்டர்நேனல் என்கிற இந்த உள் அரங்கில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் சர்வதேசத் தரத்தில் நடைபெற இருக்கிறது.

11-2-2022 அன்று காலை இந்த அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார் முன்னாள் காவலர் துறை அதிகாரி ஜாங்கிட் ஐ.பி.எஸ். திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் அறியப்பட்ட பீடி தாத்தா என்கிற கஜபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பேசும்போது, “இந்தத் தொழிலுக்கு நான் புதுசு. இப்பதான் வந்து பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. எளிய குடும்பத்தி லிருந்து இந்தத் துறைக்கு வந்து சாதித்திருக்கிறார் தம்பி பாலி சதீஷ்வர். எங்களுக்கெல் லாம் பள்ளி, கல்லுரி படிக்கிற காலத்தில் புரூஸ்லிதான் ஹீரோ. அவர் ஒரு நொடியில் 9 குத்துகள் விட்டு சாதனை செய்ததை தம்பி பாலி சதீஷ்வர் ஒரு நொடியில் 13 குத்துக்கள் விட்டு அதை முறியடித்து சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பதைப் பார்த்தேன்.

நம் ஊரில் இருக்கிற ஒருவர் இந்தச் சாதனை யைச் செய்திருக்கிறார் என்கிறபோது உண்மையிலேயே பெருமையான விஷயம். அவர் ரொம்ப ஆர்வமாக இங்கு எங்கள் முன்னால் எல்லாவிதமான சண்டைப் பயிற்சியையும் செய்து காட்டினார். இந்த அரங்கு எல்லாவிதமான சண்டையையும் பயிலும் இடமாக உள்ளது. இந்த உள்அரங்கை உருவாக்க சிலர் உறுதணையாக இருந்தார்கள் என்பதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களையும் பாராட்டுகிறேன்.

மல்யுத்தம், ஜூடோ, ஜிஜீசு போன்ற போர்க்கலை விளையாட்டுகளை தேசிய, சர்வதேசிய அளவில் சாதித்த இந்தியாவின் தலைசிறந்த வீரர்களின் மூலம் செய்து காட்டப்பட்டது. இங்கு கிக் பாக்ஸிங், மோய்தாய் பாக்ஸிங் போன்ற உலகின் கடினமான தாக்குதல் மூலம் பல உத்திகளைக்கொண்டு தாக்கி வெல் லும் தலைசிறந்த பயிற்சி வீரர்கள் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் உள்ளடக்கிய மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Marshal Arts) கலைக்கூடம்தான் இந்த அரங்கு.

பயிற்சியாளர் பாலி சதிஷ்வர் கூறும்போது. “இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து தனியார், அரசு சார்ந்த குத்துச்சண்டை மற்றும் எம்.எம்.ஏ. போட்டி கள் நடைபெறவுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு உலகத் தில் உள்ள அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் உள்ள ஆர்வ முள்ள இளைஞர்களையும் இளைஞிகளையும் சிறந்த சர்வதேச சாம்பி யன்களாக உருவாக்க வேண்டும் என்கிற கட்டடமைப்புடன் இந்த உள் விளை யாட்டு மையத்தை உருவாக்கியிருக்கிறோம். இதில் பயிற்சி பெற்று வருங் காலங்களில் தமிழக இளைஞர்கள் வீர விளையாட்டுகளில் சாதிப்பார்கள் என்பதில் ஐய மில்லை.

இந்த மாத (பிப்ரவரி) இறுதியில் மாநில அளவிலான தொழில்முறை குத்துச் சண்டை தேர்வுக்கான போட்டி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தொழில் முறை குத்துச்சண்டை போட்டி நடைபெற இருக்கிறது. அடுத்து கிக் பாக்ஸிங் தொழில்முறை சோம்பியன் ஷிப் போட்டியும் நடை பெறவுள்ளது. மே மாதம் எம்.எம்.ஏ., கிக் பாக்ஸிங் சேம்பியன் ஷிப் போட்டி யும் யு.எப்.சி. போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் உள்ள தலைசிறந்த பயிற்சியாளர்களும் வெளிநாடுகளிலிருந்து தலைசிறந்த வீரர்களும் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதன் முறையாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கிக் பாக்ஸிங் பெட்ரேஷன் ஆஃப் இந்தியா டெரேசரர் விஜேன்ந்தர் சிங், சர்வதேச மல்யுத்த வீரர் ராம் பர்வஷ், தமிழ்நாடு ஜூடோ சங்கப் பொதுச் செயலாளர் சதிஷ் மற்றும் தென்னிந்தியாவின் ஜூடோவின் தந்தை சி.எஸ். ராஜகோபால் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடங்கத்தில் மல்யுத்தம் மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர். அதைப் பலரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

குறிப்பு :  என்பது போட்டியாளரை லாக்அவுட் அல்லது பாயின்ட் கணக்கில் வீழ்த்துவது குத்துச்சண்டை, அனைத்து ஆபத்தான சண்டைகளையும் கலந்து போட்டியாளரைத் தாக்குவது MMA, ஒரு கூண்டுக்குள் இருந்துகொண்டு எதிரியை அனைத்து ஆபத்தான சண்டைகளையும் பயன்படுத்தி, தாக்கி வீழ்த்துவது UFC, கை, கால்களால் எதிரியின் உடலை மடக்கிப்பிடித்து முதுகைத் தரையில் மூன்று முறை அழுத்துவது மல்யுத்தம், எதிரியின் கை மற்றும் சட்டையைப் பிடித்துத் தூக்கி வீசுவது ஜூடோ.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...