மகான் – திரை விமர்சனம்

 மகான் – திரை விமர்சனம்

‘தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல’ என்ற மகாத்மா காந்தியின் தத்துவதோடு படம் தொடங்குகிறது.

விக்ரம் அவர்களின் 60-வது படம் இது. விக்ரமும் துருவும் தந்தை மகனாகவே நடித்திருக்கிறார்கள்.

1960, 1996, 2003 மற்றும் 2016 என நான்கு காலகட்டங்களில் நடக்கும் கதை. இந்த நாலு காலகட்டத்திற்கேற்ப விக்ரம் தனது உடல்மொழியையும் நடிப்பையும் வேறுபடுத்தி காட்டி தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டுமொரு முறை திரையில் காட்டியிருப்பார்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளி வரும் படம் இது.

மற்றவர்களுக்காகத் தனது 40-வது வயது வரை ஒழுக்கமுள்ளவராக வாழும் நாயகன் ஒருநாள் மட்டும் தன் விருப்பப்படி மது, சூதாட்டம் எனக் கொண் டாட்டமாக வாழ்கிறார். இதன் காரணமாக அவரின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களைப் பிரிகிறார். அதன்பின் வாழ்க்கையின் நேரெதிர் திசையில் தன் நண்பனோடு பயணித்து மனம் போன போக்கில் வாழ்ந்து ஒரு சாராய சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கிறார். பிரிந்து சென்ற நாயகனின் மகன் பல வருடங்கள் கழித்து தந்தையின் சாம்ராஜ்யத்தை அழிக்க காவல்துறை அதிகாரியாக வருகிறான்.

நாயகனின் சாம்ராஜ்யத்தை மகன் அழித்தானா? தந்தையுடன் இருக்கும் கூட்டாளிகள் என்ன ஆனார்கள்? இதில் நாயகன் என்ன ஆனார் என்பதே இந்தப் படத்தின் கதை.

விக்ரம் தன் மகன் துருவுடன் நடித்த பல காட்சிகளில் அண்டர் பிளே செய்து அடக்கியும் வாசித்திருப்பார். துருவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந் தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் ஓவர் ஆக்டிங் செய்வதை போல தான் எனக்கு தெரிந்தது.

துருவ் அடுத்தடுத்த படங்களில் தன் தந்தையை காப்பி அடிக்காமல் அவருக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் ஜொலிக்க வாய்ப் பிருக்கிறது.

படத்தின் நாயகியான சிம்ரனுக்கு பெரியளவில்கூட முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து இயக்குநர் சொன்னதைச் செய்து விட்டுப் போகிறார்.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

துருவ் விக்ரமின் ஓவர் ஆக்ட்டிங். டெக்னிக்கல் அம்சங்கள் சிறப்பாக அமைந்தும் திரைக்கதையை சுவாரஸ்யமாகக் கொண்டுசெல்வதில் கோட்டை விட்டுள்ள தால் ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தியில்லை. ஜிகர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம் போன்ற படங்களில் வரும் கதாபாத் திரங்களின் சாயல் இந்தப் படத்திலும் நிறைய காட்சிகளில் தென்படுகிறது.

கார்த்திக் சுப்பாராஜின் படம் என்றாலே ஒரே மாதிரி டெம்ப்பிளேட் (Template) தானோ என்று கண்டிப்பாகப் படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால் தமிழ்த் திரையுலகின் சிறந்த கேங்ஸ்டர் படங்களின் வரிசையில் இடம் பெற் றிருக்கும் இந்த ‘மகான்’.

படத்தின் கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு, விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா வின் சிறந்த நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் சிறந்த ஒளிப்பதிவு படத்தின் பலம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...