பாதாம் பருப்புகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பாதாம் பருப்புகளைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரப்படி சாப்பிடுவதால் உங்கள் உடலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தினமும் 5 பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.
பாதாமில் துத்தநாகம், மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒட்டுண்ணி எதிர்ப்பு உணவுகள் உள்ளன.
நார்ச்சத்து என்பது செரிமான மண்டலத்தின் போக்குவரத்து அமைப்பாகும். இது உடலிலிருந்து உணவுக் கழிவுகளை வெளியேற்றுகிறது.
மெக்னீசியம் குறைபாடு கவலை, தசை நடுக்கம், குழப்பம், எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும். பாதாம் சாப்பிடுவது மெக்னீசியம் குறைபாட்டிற்கு நல்லது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் – உடலில் உள்ள அனைத்துத் திசுக்கள் மற்றும் செல்களின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான இந்தக் கொழுப்புகள் புற்று நோயைத் தடுக்கலாம், குறிப்பாக மார்பகப் புற்றுநோய்.
சாப்பிடும் முறை
நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரக்கூடியது இந்த பாதாம் (Almonds). இந்த பாதம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். ஆனால் பாதம் பருப்பை அப்படியே சாப்பிடுவதைவிட ஊறவைத்து சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் என்ற கருத்து உண்மைதான். தூங்கும்முன் இரவில் பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு எளிதில் செரிமானமாகும். மேலும் ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்துள்ளது. பாதாம் பருப்பின் வெளிப்புறத் தோலை நீக்கிச் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். ஏனெனில், சருமத்தில் ஒரு என்சைம் தடுப்பான் இருப்பதால், அது உறிஞ்சுதல் மற்றும் செரிமான செயல்முறையை பாதிக்கும். இந்த ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின்-பி மற்றும் ஃபோலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடு வதற்கு உதவுகிறது.
நன்மைகள்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினை களுக்கும் பாதாம் சிறந்த தீர்வைத் தருகிறது.
பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், தலை மூடிப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்தச்சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
பாதாம் எடு கொண்டாடு.