விழுந்தும் மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்ளும் ஏரழிஞ்சில் மர விதை பற்றித் தெரியுமா?

 விழுந்தும் மரத்திலேயே ஏறி ஒட்டிக்கொள்ளும் ஏரழிஞ்சில் மர விதை பற்றித் தெரியுமா?

தாவரங்கள் தந்த வரம் தாவரம் என்றார் ஒரு கவிஞர். அந்தத் தாவரங்கள் உயிர்ப் புடன் இருந்தால்தான் மனித உயிர்கள் ஜீவித்திருக்க முடியும். அதை அழித்தால் மனித உயிர்களும் மண்ணில் உயிர்பெற முடியாது என்பது கண்கூடு.

தாவரங்கள் மனிதனின் சுவாசக் காற்றாய் வாழ்கிறது, பசியைப் போக்குகிறது, பிணியை நீக்குகிறது, தெய்வீக அருள் வழங்குவதற்குத் துணையாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தாவரங்களில் அதிசய மூலிகைச் செடி, கொடி மரங்கள் உள்ளன.

குறிப்பாகக் காற்றில் உயிர்வாழ்ந்து வளரக்கூடிய தாவரம் உள்ளது. விதை  இல்லா மல் செடியை மண்ணில் நட்டத்தாலே வேர் பிடித்து வளரும் மரம், செடிகளும் உள்ளன. ஆனால் ஒரு மரத்திலிருந்து விழுந்த விதை அதே மரத்தில் ஏறி ஒட்டிக் கொள்ளும் அதிசய மரமும் இருக்கிறது. அதுதான் ஏரழிஞ்சில் மரம்.

இந்த மரம் தமிழகத்தில் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக் கின்றன. இந்த மரத்தின் பால் நம் உடம்பில் பட்டுவிட்டால்,அது புண்ணாகி நான்கு மாதங்கள் வரை ஆறாது என்பது ஒரு பிரச்னை. ஆனால் நன்மைகள் ஏராளம்.

இயற்கையின் படைப்பில் ஏரழிஞ்சில் மரம் ஒரு வரப்பிரசாதம்.. இந்த மரத்திலிருந்து மாந்திரீக மை, வசிய மை தயாரிக்கிறார்கள். மாந்திரீக நாட்டம் உடையவர்கள் இந்த மரங்களைத் தேடி அலைவார்கள். ஏனென்றால்,மாந்திரீக வேலைகளில் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மை ராஜ மையாகப் பயன்படுத்தப்படுகிறதாம்.

அதோடு, இந்த மரத்தின் விதைகளோடு,இன்னும் சில விதைகளைச் சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இந்தக் காய கற்பத்தை சாப்பிட்டால், நம் உடல் நீண்டகாலம் நலமாக இருக்கும். தொடர்ந்து இந்தக் காயகற்பத்தைச் சாப்பிட்டு வந்தால், அதிக வயது வரை நாம் உயிர் வாழலாம் என்பது நம்பிக்கை.

அதேபோல், இந்த மரத்தின் இலைகள், மரப்பட்டைகளை எடுத்து அரைத்துப் பவுட ராக்கி உண்டு வந்தாலும், நம் உடம்பில் உள்ள சகலப் பிரச்னைகளும் நீங்கி நாம் அதிக நாள்கள் உயிர் வாழலாம்.

இந்த ஏரழிஞ்சில் சின்னக் கன்றாக இருக்கும்போதே மரத்தில் பழம் பழுக்கும். பெரிய சைஸ் மரமாக வளரும். இந்த மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிட்டு, கீழே போட்டால், அது மரமாகும். ஆனால், ஏரழிஞ்சில் மரத்திலிருந்து தானாகக் கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் முளைக்காது. பழங்கள் கீழே விழுந்த மூன்று நாள்களில் அந்தப் பழத்தில் உள்ள விதைகள் தானாக நகர்ந்து போய், ஏரழிஞ்சில் மரத்தில் ஏறி அடிமரங்களில் ஆங்காங்கே ஒட்டிக் கொள்ளும்.

அது எப்படி என்றால், மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகளுக்குள் குறிப்பிட்ட ஒரு பூச்சியினத்தின் புழுக்கள் உள்ளே போயிரும். அந்தப் புழு ஏரழிஞ்சில் விதைகளை நகர்த்திக் கொண்டு போய் மரத்தில் ஏற்றி, அடிமரங்களில் ஒட்ட வைக்கும். பிறகு கூட்டுப்புழுக்கள் போய் இருந்துவிட்டு, பின்பு மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளிலிருந்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறி பறந்து போய்விடும். அந்த விதைகள் மட்டும் ஏரழிஞ்சில் மரங்களில் ஒட்டிக்கொண் டிருக்கும்.

நாளடவையில் அந்த விதைகள் வெறும் விதைக் கூடுகளாக மாறி, மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இப்படி அதிசயங்களும், அற்புத மருத்துவக் குணங்களையும் கொண்ட இந்த ஏரழிஞ்சில் மரத்தை எல்லா இடங்களில் பயிர் செய்யவேண்டும் என்பது அனைவரது கோரிக்கையும். தாவர விரம்பிகள் இந்த மரத்தைத் தேடிப்பிடித்து வாங்கிவந்த வளர்க்கலாமே.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...