பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிளாரினெட் கலைஞர் மகிழ்ச்சி

 பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிளாரினெட் கலைஞர் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் தனது 90-வது வயதில் மத்திய அரசின் 2022ஆம் ஆண்டுக்கான  பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 73வது குடியரசு தின விழாவில் ஜனாதிபதி இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.

கிளாரிநெட் இசையில் வல்லவரான இவர் நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையிடமும்,  காருகுறிச்சி அருணாசலம் அவர்களிடமும், இசை யைக் கற்றுத் தேர்ந்தவர்.

இவருடைய தந்தை இவர் சிறு வயதில் இருக்கும்போது,  ஒரு ஆங்கிலோ இந்திய இசை குழுவிடம் 200 ரூபாய்க்கு  வாங்கித் தந்த  கிளாரினெட்டை இவர் நமது நாதஸ் வரம் போல பல விதங்களில்  மாற்றம் செய்து, அந்த இசையில்  மிகவும் வல்லுந ராகத் திகழ்ந்து வருகிறார். 2008ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மிகவும் புகழ் பெற்ற சங்கீத கலாநிதி விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்மன்

எத்தனையோ பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தாலும் 1952ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மன் சன்னதியில்,  நாதஸ்வர சக்கரவர்த்தி திருவா வடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கொடுத்த கிளாரினெட் எவரெஸ்ட் (கிளாரினெட் சிகரம்) என்ற பட்டத்தை மிகவும் பெருமையாகக் கருதுகிறார். அந்த அம்பாளின் பரம பக்தரான இவர் கிட்டத்தட்ட 70 ஆண்டு காலமாக ஆடி பூரம் அன்று நீலாயதாக்ஷி அம்பாள் சன்னதியில் இசைக் கச்சேரி செய்து வருகிறார்.

அவர் மேலும் பேசும்போது, “எனது 10-வது வயதிலிருந்து இசை பயின்று வருகிறேன். ஆலத்தூர் வெங்கடேச அய்யரிடம் வாய்ப்பாட்டும், இலுப்பூர் நடேச பிள்ளை மற்றும் எனது தந்தை சின்னிகிருஷ்ண நாயுடுவிடம் நாதஸ்வரமும் பயின்றேன்.

இசை உலகில் நாதஸ்வரத்தில் மாபெரும் மேதைகள் இருந்ததால், தனித்துத் தெரிய வேண்டும் என்ற நோக்கில் பின்னர், கிளாரினெட் இசைக் கருவியைத் தேர்வு செய் தேன். பல ஆண்டு கால உழைப்பின் பலனாக இப்போது எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.

90-வது வயதில் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம். எனவே, எனக்கு இப்போது கிடைத்துள்ளது. பிற துறைகளைப்போல் கலைத் துறையும் சவால் மிகுந்ததுதான். அடிபட்டு, அனுபவப்பட்டால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் கடுமையாக உழைத்த என்னை இந்த நிலைக்கு உயர்த்திய இறைவனுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும், விருதுக்குத் தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தேர்வுக் குழுவுக்கும் மற்றும் எனக்குப் பல்வேறு வகைகளில் உதவிய மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற அவர் தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்தார்.

“கோயில்களைத் தவிர சபாக்களில் தற்போது நாதஸ்வர நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவ தில்லை. திருமணங்களிலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, குடமுழுக்கு உள்ளிட்ட கோயில் நிகழ்ச்சிகள் அனைத்திலும் 2 அல்லது 3 நாதஸ்வர குழுக்களை வரவழைத்து நாதஸ்வரம் இசைக்கவேண்டும். இதன்மூலம் நலிந்த நிலையில் உள்ள நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வருவாய் கிடைத்து மகிழ்ச்சி அடைவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்” என்றார்.

ஏ.கே.சி.நடராஜன் தொடக்கக் காலத்தில் பணியாற்றிய கோயில் நிர்வாகத்தினர் 36 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட கிளாரினெட் இசைக் கருவியை  அவருக்கு அன்ப ளிப்பாக வழங்கினார்கள். அந்த கிளாரினெட்டை 1958-ம் ஆண்டில் திருச்சியில் நடை பெற்ற விழாவில் எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன் ஆகி யோர் அதை எனக்கு வழங்கினர்.

பின்னாளில், சீன – இந்தியப் போர் நடைபெற்றபோது, அப்போதைய முதல்வர் பக்த வத்சலத்திடம் அந்தத் தங்கத்தால் ஆன கிளாரினெட்டை போர் நிதியில் சேர்க்குமாறு வழங்கினார் ஏகேசி நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது..

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...