விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா 2021
2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 25, 26ஆம் தேதிகளில் கோவையில் இவ்விழா நிகழ்கிறது. ரூ 2 லட்சமும் சிற்பமும் அடங்கியது இவ்விருது வழங்கப் படுகிறது.
விழாவில் விக்ரமாதித்யன் பற்றிய ’விக்ரமாதித்யன் – நாடோடியின் கால் தடம்’ என்னும் விமர்சனத் தொகுதி நூல் வெளியிடப்படுகிறது. விக்ரமாதித்யன் பற்றி கவிஞர் ஆனந்த்குமார் இயக்கிய ஆவணப்படம் ’வீடும் வீதிகளும்’ திரையிடப்படும்.
25ஆம் தேதி காலை 9 மணி முதல் விஷ்ணுபுரம் விருந்தினர்களாகிய எழுத்தாளர்களுடன் வாசகர் கள் உரையாடும் வாசகர் சந்திப்புகள் நிகழும். 26ம் தேதி காலை 9 மணி முதல் சிறப்பு விருந்தினர் களுடனான உரையாடல்கள்.
26ம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். விருது விழாவில் சிறப்பு விருந்தினர் களாக ஜெய்ராம் ரமேஷ் [பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர், இலக்கிய ஆய்வாளர், சூழியல் ஆய்வாளர்]
சின்ன வீரபத்ருடு [தெலுங்கு கவிஞர், இலக்கிய விமர்சகர்]
வசந்த் சாய் [திரை இயக்குநர்]
சோ.தர்மன் [சாகித்ய அக்காதமி விருது பெற்ற படைப்பாளி]
ஜெயமோகன் [எழுத்தாளர்]
ஆகியோர் கலந்துகொள்வார்கள். கவிஞர் விக்ரமாதித்யன் ஏற்புரை வழங்குவார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
1 Comment
வாழ்த்துக்கள்!