கோடீஸ்வரராக இருந்து திடீரென ஏழையாய் மாறிய மனிதர்

ஆஸ்போர்ன் மார்ச் 6, 1939 இல் தாய்லாந்தின் பாங்காக்கில் ஒரு பிரிட்டிஷ் தந்தை மற்றும் போலந்து தாய்க்குப் பிறந்தார். அவரது தந்தை, ஆர்தர் ஆஸ்போர்ன், கிழக்கத்திய மதம் மற்றும் தத்துவம் ஆசிரியராகவும், சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் விரிவுரையாளராக வும் இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர்களாக இருந்தனர். அவர் தனது தாயுடன் இரண் டாம் உலகப் போரை தென்னிந்தியாவில் கழித்தார்.

அவர் 6ஆம் வகுப்பு வரை கொடைக்கானலில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் பயின்றார்.  1950இல், ஆஸ்போர்ன் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. 11 வயதி லிருந்து, அவர் வார்விக்ஷயரில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் படித்தார். ஆனால் 1954 முதல் 1957 வரை ராயல் லீமிங்டன் ஸ்பாவில் உள்ள சிறுவர்களுக்கான இலக்கணப் பள்ளியான லீமிங்டன் கல்லூரியில் மாணவராக இருந்தார். அங்கு அவர் சதுரங்கம் விளையாடினார்.

ஆடம் ஆஸ்பர்ன்

1961இல் இங்கிலாந்தில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். மேலும் 1968இல் டெலவேர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். அமெரிக்காவில் வசிக்கும்போதுதான் கணினி குறியீடு எழுதக் கற்றுக்கொண்டார்.

ஆடம் ஆஸ்பர்ன். பெற்றோர்கள் இருவரும் ரமண மகரிஷியின் தீவிர பற்றாளர்கள். திருவண்ணா மலையில் ரமணாஸ்ரமத்தில் தங்கிவிட்டவர்கள். எனவே இவரும் குழந்தை பருவத்தில் தமிழ் சூழ்நிலையில் வளர்ந்தார்.

பின்னர் அமெரிக்கா சென்று படித்து அங்கேயே வேலை செய்ய ஆரம்பித்தார். 1980களில் கணிப்பொறி கள் பரவலாக அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முதலியன பெரிய அளவி லான கணிப்பொறியை நிறுவி பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். தவிர பொதுப் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. இவர் அந்தத் துறையில் ஈடுபட்டு அறிவை வளர்த்துக்கொண்டு சொந்தமாக ஒரு கணிப்பொறியை வடிவமைக்கத் தொடங்கினார்.

இவர் வடிவமைத்த பஸ் எஸ்-100 எனும் மைக்ரோ கம்ப்யூட்டரையும் 1981ல் ஆஸ்பர்ன்-1 எனும் முதல் கையடக்க கம்ப்யூட்டரையும் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக வெளியிட்டார். அன்றைய சந்தையில் மிகவும் வெற்றிகரமாக இது விற்பனை ஆனது.

பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆர்டர்கள் குவிந்தவண்ணம் இருந்தன. எனவே பெரிய அளவில் தொழிற்சாலை நிறுவி தட்டுப்பாடின்றி எல்லோருக் கும் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதிக அளவில் உற்பத்தி யைத் தொடங்கினார். அதேசமயம் அந்த அளவிற்கு மக்களும் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கினர்.

நன்றாகக் கவனிக்க வேண்டும். இதெல்லாம் ஐ.பி.எம். நிறுவனம் கணிப்பொறி வெளியிடுவதற்கு முன்பு நடந்தது. அதிக அளவு பணம் சம்பாதித்து மில்லிய னராக உயர்ந்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில், தான் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டரை உருவாக்கி வருவதாகவும், இப்போது சந்தையில் இருக்கும் தன்னுடைய கணிப்பொறியைவிட இரண்டுமடங்கு அதிகம் திறனுடனும் பாதி விலையில் இருக்கும் என்று அறிவித்தார். அவ்வளவுதான், மக்கள் யாரும் தற்பொழுது சந்தையில் இருக்கும் கணிப்பொறியை வாங்கவில்லை. வெளிவரப்போகும் அவரின் அடுத்த கணிப்பொறிக்காகக் காத்திருந்தனர். இவர் தயாரித்து அடுக்கி வைத்திருந்த அத்தனையும் விற்பனையாகாமல் தேங்கிவிட்டது.

கையிருப்பு முழுவதும் அதில் முடங்கிவிட்டது. அந்த இழப்பிலிருந்து அவரால் கடைசி வரையில் மீளவே முடியவில்லை. அவரது கனவுத் திட்டம் நிறைவேற வில்லை. அதனால் அதைக் கைவிட வேண்டியதாகிவிட்டது. இந்தச் சூழ் நிலையில் ஐ.பி.எம். கணிப்பொறிகள் வெளிவரத் தொடங்கி சந்தையில் எந்த எதிர்ப்பும் இல்லாததால் நன்கு விற்பனையாகத் தொடங்கியது. இவர் நினைத் தபடி மீண்டும் இவரால் சந்தைக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது.

மீதி இருந்த பணத்தை எல்லாம் உடன் இருந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு இந்தியாவில் வந்து கொடைக்கானலில் அமைதியாக ஒரு இடத்தில் வாழத் தொடங்கினார். அந்த ஊரில் இருந்தவர் களுக்கு அவர் யார் என்பதோ, என்ன செய்து கொண்டிருந்தார் என்பதோ எதுவும் தெரியாது. அவரும் யாரிடமும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையைக் கடைசி காலத்தில் வாழ்ந்து சில வருடம் முன்பு தூங்கும்போது இறந்து போனார். இப்படி ஒரு மனிதர் இங்கு வந்து இருந்தார் என்பதும் அவர் எப்படிப்பட்ட ஒரு புரட்சியைக் கணிப்பொறி உலகில் செய்தார் என்பதும் நம்மில் நிறைய பேருக்குத் தெரியாத ஒரு வரலாறு.

பொருளாதார அளவில் அவர் சரிந்திருக்கலாம். ஆனால் மனதளவில் அவர் விரும்பிய வாழ்க் கையை கடைசி காலத்தில் மிகச் சாதாரணமாக வாழ்ந்து மறைந்தவர்தான் ஆடம் ஆஸ்பர்ன்.

இன்று பல நிறுவனங்கள் தன்னுடைய புதிய பொருட்களைச் சந்தைப்படுத்து வதற்கு முன்பாகவே தன்னிடமிருக்கும் பழைய பொருட்களை முற்றிலும் விற்றுத் தீர்த்துவிடுகின்றன. இந்த உத்தியை உலகிற்குக் கற்றுக்கொடுத்தவர் ஆடம் ஆஸ்பர்ன். ஆனால் இதைக் கற்றுக்கொள்வதற்கு தன் னுடைய கோடீஸ்வர வாழ்க்கையை, கணிப்பொறி தயாரிப்பில் இருந்த முன்னணி இடத்தை அவர் இழக்க வேண்டியிருந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...