துணை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர்அரிய வாய்ப்பு
துணை மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும்
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
+2வுக்குப் பிறகு படிக்க மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நீட் (NEET) தேர்வில் தகுதி இருந்தால் தானே மருத்துவப் படிப்பில் சேர இயலும். நீட் தேர்ச்சி பெற்றாலும் தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிது, ஏனெனில் ஒரு சில இடங்களே உள்ளதால். ‘இதற்கு ஒரு முடிவே இல்லையா? விடிவே இல்லையா?’ என்று புலம்ப வேண்டாம். நல்ல முடிவு இருக்கிறது. மருத்துவத் துறையில் பயில மிகப்பெரும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அது எப்படியென்றால், நீட் தேர்வு இல்லாமல் +2 மார்க் அடிப்படையில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில், துணை மருத்துவப் படிப்புகளில் பயில எண்ணற்ற ஏற்றமிகு வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (8-11-2021) கடைசி நாள்.
துணை மருத்துவப் பட்டப்படிப்புகளான
1. B.PHARM.,
2. B.P.T.,
3. B.ASLP,
4. B.Sc. (NURSING),
5. B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY,
6. B.Sc. RADIO THERAPY TECHNOLOGY,
7. B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY,
8. B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY,
9. B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY,
10. B.Sc. CARDIAC TECHNOLOGY,
11. B.Sc. CRITICAL CARE TECHNOLOGY,
12. B.Sc. DIALYSIS TECHNOLOGY,
13. B.Sc. PHYSICIAN ASSISTANT,
14. B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY,
15. B.Sc. RESPIRATORY THERAPY,
16. B. OPTOM,
17. B.O.T
உள்ளிட்ட 17 வகையான மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க
(8-11-2021) இன்று மாலை 5 மணி வரை இறுதி நாள்.
இதைப் பின்வரும் www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யவும். விண்ணப்பக் கட்டணம் ரூ.400
இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்து தகுந்த சான்றுகளுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரியில் 10-11-2021 தேதிக்குள் தபாலில் அனுப்பிவைக்கவும்.
Selection Committee,
Directorate of Medical Education
162, E.V.R. Periyar High Road,
Kilpauk, Chennai-600 010.