விஷால் – ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’ தீபாவளி ரிலீஸ்

நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். 

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.  R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் C.S. இசையமைக்கிறார். படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர்.

எனிமி படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.

தயாரிப்பாளர் எஸ். வினோத் ஒரு பேட்டியில் கூறும்போது, “எனிமி’யை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ல வாங்க ரெடியா இருந்தாங்க. ஆனா, நாங்க தியேட்டர்ல வரணும்னு விரும்பினோம். அதுவும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனா, தீபாவளிக்கு ‘அண்ணாத்த’வை மட்டும்தான் எல்லா தியேட்டர்கள்லேயும் வெளியிட திட்டமிடுவதாகக் கேள்விப்படுறேன். எங்க படமும் தீபாவளிக்கு வர்றதுக்கு, தயாரிப்பாளர் சங்கம் உதவி செய்யணும்னு தாழ்மையோடு வேண்டுறேன். ஒரே ஒரு பெரிய படம் (அண்ணாத்த) மட்டும் வெளியானா அது சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயமில்ல. தியேட்டர்கள்ல நூறு சதவிகித இருக்கை வசதியோடு ரெண்டு படங்கள் நாலு நாள்கள் ஓடினாலே ரெண்டு பேருக்குமே போதுமான அளவுக்கு ஷேர் வந்துடும்.

என் படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் தேவையில்லை. எனக்கு 250 தியேட்டர்களே போதும். என் படத்து மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அது சின்ன ஷேர்தான். அதை கண்டிப்பா அடைய முடியும்னு நம்பிக்கை இருக்கு. இந்த 250 தியேட்டர்களும் எல்லா ஏரியாலயும் கலந்து எனக்குக் கிடைக்க சங்கம் உதவணும். அப்படி ரிலீஸ் பண்ண முடியாம போனா, அதுக்கு எதிரா கட்டாயம் போராடுவேன். அது யாராக இருந்தாலும் அவருக்கு எதிராகப் பேசுவேன்.” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...