சமந்தா – நாகசைதன்யா விவகாரம்
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா உலகில் இப்போது பெரிய பேச்சு சமந்தா-நாகசைதன்யா திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததுதான். சமந்தா – நாக சைதன்யா இருவரும், ஒரே நேரத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் – மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதை அறிவித்தனர். ஆழ்ந்து யோசித்த பிறகே இருவரும் கணவன் மனைவியாக இல்லாமல் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என்றிருக்கின்றனர்.
இதன் பின்னணி என்ன?
சமந்தா மிகச் சாதாரண குடும்பத்திர் பிறந்தவர். சினிமாவில் நடிக்க வந்து தமிழில் சில படங்களை நடித்துக்கொண்டிருக்கும்போது அவர் பேர் உச்சிக்குச் சென்றது. தெலுங்கில் நாக சைதன்யாவுடன் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அது திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்குப் பின் சினிமா வாய்ப்புகள் வந்தபோது அவர் மறுத்து வந்தார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவுடன் உள்ள போட்டோக்களை பதிவிட்டு வந்தார். சமந்தா முகவெட்டு தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா தரப்புப் படங்களுக்கும் ஏற்றதாக இருந்தது. அதனால் அவருக்கு திருமணத் துக்குப் பிறகும் வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தன. திடீரென ஒரு கட்டத்தில் மனமாற்றம் அடைந்த சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவுடன் உள்ள படங்களைப் பதிவிடுவதைத் தவிர்த்து வந்தார். தன் கவர்ச்சிப் படங்களைப் பதிவிடத் தொடங்கினார்.
தெலுங்கு சினிமாவில் பெரிய குடும்பம் நாகார்ஜுனா குடும்பம். தேவதாஸ் படத்தில் நடித்த நாகேஸ்வர ராவின் மகன்தான் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர். அக்கினேனி குடும்பம் என்றால் ஆந்திராவில் ஒரு நல்ல பெயர் உண்டு. நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகன்தான் நாகசைதன்யா. நடிகை அமலா தமிழில் டி.ராஜேந்தர் திரைப்படத் தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு ரஜினி, கமல் என முன்னணி நடிகர் களுடன் நடித்தவர். இவர் தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடித்தார். அப்போது காதல் ஏற்பட்டது. நாகார்ஜுனாவுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது. இரண்டாவதாக நடிகை அமலாவைத் திருமணம் செய்துகொண்டார். அதே போல் தன் மகன் நாகசைதன்யா காதலுக்கும் பச்சைக்கொடி காட்டினர் நாகார் ஜுனா – அமலா தம்பதி.
சமந்தா – நாகசைதன்யாவுக்கு 2017ல் திருமணம் நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் மணவாழ்க்கையில் குழந்தை ஒரு பிரச்சினையாக வந்தது. சமந்தா இந்த கொளரவமான குடும்பத்தில் சினிமா வில் நடிப்பதை விட்டு குழந்தையைப் பெற்றுக்கொண்டு வாழ நினைத்தனர் அக்கினேனி குடும்பத்தினர். ஆனால் சமந்தா மறுபடியும் சினிமாவில் பிஸியாக இருப்பதை விரும்பினார். அதனால் குழந்தையைத் தள்ளிப்போட முடிவெடுத்தார். அதுதான் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து சண்டை சச்சரவாக மாறியது.
திருமணத்துக்குப்பின் சமந்தா அக்கினேனி என்ற தம் பெயரை இன்ஸ்டாகிராமில் தற்போது சமந்தா ரூத் பிரபு என பதிவிட்டார். அவர் தந்தை பெயர் ரூத் பிரபு. இன்டாகிராமில் நாகசைதன்யா கவிழ்ந்தடித்து உறங்கும் போட்டோவைப் பதிவிட்டு வெறுப்பைக் காட்டினார். பகல் வரை தூங்க நேரம் போதவில்லை என்று குறிப்பிட்டார். இதற்கிடையே வெப்சீரிஸ் பேமிலிமேன் தொடரில் நடித்தார். அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கதாபாத்திரம் என்பதால் தமிகத்தில் பல எதிர்ப்பு சமந்தாவுக்குக் கிளம்பியது. அதைப் பொருட்படுத்தாமல் நடித்தார். அந்த சீரிஸ் சூப்பர்டூப்பராக, கோடிகளை அள்ளியது. சமந்தாவுக்கும் பல கோடிகள் சம்பளம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சமந்தாவுக்கு தமிழ், இந்திப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அவர் முழுவதுமாக களத்தில் இறங்கி திருமணமானவர் என்பதைக்கூட கவலைப்படாமல் கிளாமர் வேடங்களில் நடிக்கத் தொடங் கினார்.
இந்த நிலையிலும் நாகார்ஜுனா மனம் தளராமல், ‘‘இது கணவன், மனைவி சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் தலையிட முடியாது. இருவருக் கும் மனவலிமையை இறைவன் தரவேண்டும். சமந்தாவுக்கு நாங்கள் எப் போதும் துணையாக இருப்போம். அவர் எங்களோடு இருந்த நாட்களை மறக்க முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத் தியிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் நாகார்ஜுனா, சமந்தா – நாகசைதன்யா வோடு பேச்சு நடத்துவார் என்ற செய்தியும் பரவியது. ஆனால் அவர்களோடு நின்று பேச நேரமில்லாமல் படப்பிடிப்புக்கு ஓடிக்கொண்டே இருந்தார் சமந்தா. இது ஒரு கட்டத்திற்குமேல் குடும்பத்தில் புகைச்சலை ஏற்படுத்தியது. தொடர்ந்து சமந்தா இணையத் தொடரில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது நாகார்ஜுனா அக்கினேனி குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. இது குறித்து வீட்டுக்குள் வாதங்களும் கருத்து மோதல் களும் ஏற்பட்டிருக்கின்றன.
திடீரென நாகசைதன்யா தம் டுவிட்டர் பக்கத்தில் நட்புடன் பிரிகிறோம் எனப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நாகசைதன்யா ஜீவனாம்சமாக ரூ. 200 கோடி கொடுக்க முடிவு செய்ததாகவும், அதை சமந்தா மறுத்ததாகவும் செய்தி பரவியது. இது குறித்து சமந்தாவோ நாகசைதன்யாவோ வெளிப்படை யாகக் கருத்து எதுவும் சொல்லவில்லை. ஆழ்ந்து யோசித்த பிறகே இருவ ரும் கணவன் மனைவியாக இல்லாமல் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என்றிருக்கின்றனர் டுவிட்டர் பக்கத்தில். இன்னும் சில தினங்களில் கத்திரிக்காய் முற்றி பேப்பர்களில் வரும். அப்போது முழுவதும் தெரியும். பல சினிமா முன்னணி நடிகர்களின் காதல் திருமணங்கள் பிரிவில் முடிவது தொடர்கதையாகவே இருக்கிறது. அதற்கு சமந்தா – நாகசைதன்யா காதலும் விதிவிலக்கல்ல என்பது மீண்டும் ஒரு உதாரணம்.