ஆட்டத்தின் நாயகன் | கவியரசு வைரமுத்து…
படித்ததில் பிடித்தது…
கள்ளிக்காட்டு நாயகன் கவிதைகளை விதைப்பதில் மட்டுமல்ல கவிதைகளை சுவைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஒரு சுவை அறியப்படும்போது அதன் ருசியை தன் நாவரும்புகள் மட்டும் உணர்ந்தால் போதாது அது பிறர் அறிய அமுது படைத்த விரல்களுக்கு ரொக்கமாய் விருந்து படைத்திருக்கிறார். ஆம் ! கவிவள்ளல் தன் வைரவரிகளால் இளங்கவிக்கு வாழ்த்துரைத்திருக்கிறார்.
சொல்வனத்தில் முளைத்த சுவை மிகு கவிதை ஆட்டத்தின் முடிவில் செளவியின் மைவரிகள். சிறார்களின் உழைப்பின் உச்சத்தை கடைசி துளி தேநீர் உதடுகளைத் தாண்டி உள்ளிறங்கிய போதிலும் அது இனிப்பதும் இல்லை கசப்பதுமில்லை வறுமையின் சிறுமையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. அணைக்கப்பட்ட விளக்குகளின் இருள் கூட அச்சிறார்களின் வயிற்றுப்பசி இன்னும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அற்புதமாக படைத்திருக்கிறார்.
சொல்வனத்தில் துளிர்த்த செளவியின் வார்த்தைகளுக்கு வாழ்த்துக்கள் ! தமிழாற்றுப்படை தந்து தரணியை வியக்க வைத்து சிறுதுளியும் நாளை பெருவெள்ளமென பெருகும் என்று செயல் விளக்கு ஏற்றி ஒளிபெற செய்த வைரவிரல்களை சுமந்திருக்கும் கள்ளிக்காட்டு நாயகரே ! தங்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் !
2 Comments
அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் நிச்சயம் சிறு துளியும் நாளை பெரு வெள்ளமாக மாறும்
மகிழ்ச்சி… நல்ல விஷயம்