அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் !

நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர்.

ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண் இச்சாதாரி நாகத்தை ‘நாகினி’ என்றும் கூறுவர். நாகங்களை பற்றி உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இச்சாதாரி நாகங்கள் பாதி மனித உருவம் பாதி பாம்பு வடிவம் கொண்டவர்கள்; பாதாள லோகத்தில் வாழ்பவர்கள்: ஆழியின் ஆழத்திலும் வசிப்பவர்கள்; கானகத்தில் ஏகாந்தமாக இருப்பவர்கள்; தீவுகளில் திரிபவர்கள் என்று அவர்களைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்.

இன்றளவும் நிலைத்து நீடித்த வண்ணம் உள்ளன. கனவில் பாம்புகள் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்பதை நாக சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்வோம். கனவுகளில் இரவில் காணும் கனவுக்கு மட்டுமே பலன் உண்டு. இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு மாதத்திலும், மட்டும் சூரிய உதயத்திற்கு முன் கண்ட கனவு வெகுவிரைவில் பலிக்கும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது.

கனவு பலிக்குமா? நாகங்கள் கனவுகளில் வருமா? அப்படி நாகங்கள் கனவில் வந்தால் அதற்கான பலன் என்ன? கூறுகிறேன். காத்திருங்கள்.

 – நாக சாஸ்திர ஏடுகளில் இருந்து –

திருச்சி மாம்பழத் தெரு !

“ஆ”…. என்று அலறிக்கொண்டே எழுந்தான் அரவிந்த்.

அரவிந்தின் அலறல் சத்தத்தைக் கேட்ட நந்தனும் பதட்டத்துடன் கண் விழித்தான்.

“டேய்! என்னடா ஆச்சு? ஏன் அப்படி கத்துன?”

நந்தனின் வார்த்தையை கேட்டு பேச முடியாமல் வாயடைத்து நிலையில் அச்சத்தில் உறைந்திருந்தான், அரவிந்த்.

அரவிந்தின் நிலையைக் கண்டு சற்று பதட்டமடைந்த நந்தன், அவர்கள் வீட்டில் ஈசான்ய மூலையிலுள்ள பானையிலிருந்து ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு வந்து,

கொஞ்சம் தண்ணீரை அரவிந்தின் முகத்தில் தெளித்தான்.

நந்தன் தண்ணீரை தெளித்த சில நிமிடங்களில் சுயநினைவுக்கு திரும்பிய அரவிந்த் பேச ஆரம்பித்தான்.

“ந… ந… நந்தா….”

“டேய்! முதல்ல இந்த தண்ணியைக் குடி” என்று நந்தன் கூறினான்.

அரவிந்தும் ‘கல்ப்..கல்ப்…’ என்ற சத்தத்துடன் தண்ணீரை அருந்திவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவன் கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது, அவன் முகமெங்கும் அச்சத்தின் ரேகை படர்ந்திருந்தது.

“டேய்… இப்ப சொல்றா ஏதாவது கெட்ட கனவு கண்டியா…?”

“ஆமாண்டா.”

“என்னன்னு விளக்கமாக தான் சொல்லேண்டா.”

“நந்தா… எனக்கு ஒரு கனவு வந்துச்சுடா. நீயும் நானும் கொல்லிமலை ‘ஆகாய கங்கை’ அருவியில் குளிச்சிட்டு, அருவிக்கு பக்கத்துல போற ஒரு ஒத்தையடி பாதையில் நடந்து போகிறோம். சுமார் 3 மணி நேர பயணத்துக்கு அப்பறமாக ஒரு கோயிலை அடைஞ்சோம். அந்த கோயிலை சுத்தி வெறும் பாம்பு கிடந்தது.”

“என்னது பாம்பா?”

“முதல்ல நா சொல்றத முழுசா கேளுடா.”

“அந்தக் கோயிலை சுத்திலும் நாகலிங்க மரமும் கருங்காலி மரமும் இருந்தது. அங்கங்கே சில இடத்தில் தாழம்பூவும் வளர்ந்து கிடந்தது. நாம ரெண்டு பேருமா கோயிலுக்குள் நுழைஞ்சோம். கோயில் சுற்றுப் பிரகாரத்துல ஜோடி ஜோடியாக நாக மாணிக்கத்து வெளிச்சத்தில பாம்புகள் மெய்மறந்து கெடந்துச்சு.”

“என்னது நாக மாணிக்கமா? நீ எந்த காலத்துலடா இருக்க? இச்சாதாரி பாம்புகள், நாகமாணிக்கம் இதுவெல்லாம் காதுல பூ சுத்துற விஷயம்டா?”

நந்தனின் பேச்சில் கேலியும் கிண்டலும் விளையாடியது.

“நந்தா, ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ! ‘நாம கண்ணால பாக்கறது எல்லாமே உண்மையும் இல்லை! பார்க்கமுடியாதது எல்லாம் பொய்யுமில்ல!’ சில விஷயங்களை அனுபவிச்சு உணர்ந்தால்தான் புரியும்.”

“சரி! சரி! மீதி கதையை சொல்லு.”

அரவிந்த் தொடர்ந்தான்.

“அந்தக் கோயிலில் ஒரு வில்வ மரமும் இருந்துச்சு. அதுல சுமார் 21 அடி நீளம் உள்ள ஒரு ‘ராஜநாகம்’ புடலங்காய் மாதிரி தொங்கிட்டு இருந்துச்சு. இப்ப நினைச்சாலும் எனக்கு புல்லரிக்குது!”

“என்னது 21 அடி நீளம் உள்ள ராஜநாகமா? இதெல்லாம் சாத்தியமே இல்லை. கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு ராஜநாகம் குறைந்தது15 அடி வரை வளரும்.”

“நான் இப்ப கதையை முழுசா சொல்லவா, வேண்டாமா?” அரவிந்தன் கோவத்தில் வெடித்தான்.

“சரி, சொல்லித் தொலைடா.”

“அந்தப் பாம்பு மட்டுமில்ல எந்த பாம்பும் நம்ம ரெண்டு பேரையும் எதுவும் செய்யல. கோயிலின் அர்த்த மண்டபத்தில் ஏகப்பட்ட புடைப்பு சிற்பங்கள் இருந்துச்சு. நாம எல்லாத்தையும் கடந்து கோயிலின் கருவறைக் கிட்ட போனோம்.”

“அங்க தங்கத்தால செய்யப்பட்ட 2 ஐந்து தலை நாகங்களின் துவார பாலகர்கள் சிலை பார்த்தேன். நீ சட்டுனு கோயில் கருவறைக்குள் நுழைஞ்சிட்ட. நானும் உன்னைத் தொடர்ந்து உள்ளே நுழைஞ்சேன்.”

“அப்பறம் அந்த கருவறையில ஒரு சிவலிங்கம் இருந்திருக்குமே!”

“ஆ.. ஆ… ஆமாண்டா! எப்படி நான் கனவுல பார்த்ததே நீ நேர்ல பார்த்த மாதிரி சொல்றே” என்று அரவிந்தன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமா… இது பெரிய தேவலோக ரகசியம் நீ சொல்ற கதைதான் எல்லா பாம்பு கதையிலும் வருதே.”

“டேய்! முதல்ல நான் கனவு முழுசா சொல்லி முடிச்சிட்றேன். அப்புறம் மத்ததை பேசிக்கலாம்.”

“அந்தக் கருவறைக்குள் சிவலிங்கத்தை சுத்திலும் ‘அஷ்ட நாக சிலைகள்’ இருந்துச்சு. ஒவ்வொரு நாகமும் படம் எடுத்த நிலையில் எட்டு திசையை நோக்கி இருந்துச்சு. இதெல்லாம் கூட எனக்கு பிரமிப்பு ஏற்படுத்துல! அந்த சிவலிங்கது மடியிலிருந்த ‘ஜீவ சமாதி’ நாகத்தைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாறிப்போட்ருச்சு!”

“என்னது ஜீவசமாதி நாகமா?”

“ஆமாண்டா. பாம்புகளில், பல லட்சத்தில் ஒரு சில பாம்பு மட்டும்தான் தன் உடலை தானே சுத்திக்கிட்டு ஜீவசமாதி அடைஞ்சுடும். அப்படி ஜீவசமாதி அடைஞ்ச பாம்பு ஒரு இச்சாதாரி நாகமாகவோ அல்லது ஒரு சித்தராகவோ இருக்கலாம். அது நினைத்தால் எப்ப வேண்டுமானாலும் அதற்கு உயிர் வந்துவிடும்.”

அரவிந்த் சொன்னதைக் கேட்டு நந்தன் வாயைப் பிளந்து விட்டான். இச்சாதாரி நாகங்கள், பறக்கும் பாம்புகள் மற்றும் நாகமாணிக்கம் போன்ற பல கதைகளை அவன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒரு நாகம் எப்படி ஜீவசமாதி அடைய முடியும் என்ற அந்த கேள்வி அவனை குடைந்தெடுத்தது.

“சரி மேல் சொல்லுடா” நந்தன் அரவிந்தை தூண்டினான்.

“பாத்தியா… பாத்தியா… உனக்கும் ஆர்வம் வந்துடுச்சு” அரவிந்த நந்தனை கிண்டலடித்தான்.

“சரி சொல்லுடா.”

“அந்த ஜீவ சமாதி அடைஞ்ச நாகத்தை நாம ரெண்டு பேரும் தொட்டோம். உடனே, அந்த இடமே அசாதாரணமாக மாறிடுச்சு. கருவறை முழுக்க வெண்புகை மாதிரி சாம்பிராணி வாசத்தோடு பரவ ஆரம்பிச்சது. அப்புறம் நாம ரெண்டு பேரும் நம்ம கையால புகையை விரட்ட ஆரம்பிச்சோம். புகைமூட்டம் சில நிமிடங்களில் முற்றிலும் விலக ஆரம்பிச்சுது. ஆனா… ஆனா…” அரவிந்தால் தொடர்ந்து பேச வார்த்தைகள் வரவில்லை.

“என்னடா… சொல்லித் தொலைடா” நந்தன் அரவிந்தை நிமிண்டினான்.

“நந்தா! அந்தப் புகை மூட்டம் முற்றிலும் விலகினதுக்கு அப்பறம், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிவலிங்கத்தை சுற்றி இருந்து அஷ்ட நாகங்கள் சுமார் 3 அடி உயரத்துக்கு படம் எடுத்த நிலையில் நம்ம ரெண்டு பேரையும் சுத்தி இருந்துச்சு. அந்த எட்டு நாகங்களும் சீறிக்கிட்டு இருந்துச்சு. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு விஷயமும் நடந்துச்சு.”

“அது என்னடா! ம்… சீக்கிரம் சொல்லு.”

“இதுவரை ஜீவசமாதியாக இருந்த நாகம், ஒரு நாக கன்னியாக உருமாறி நம்ம முன்னாடி நின்னுட்டு இருந்தாள்!”

“அவளோட அழகை வர்ணிக்க வரிகளே இல்லை. அவளோட அங்கமெங்கும் தங்கமா மின்னுச்சு. பால் நிலா வண்ணம். பவளத் திருமேனி. எனக்கு ஏற்பட்ட பரவச உணர்வுல, அவளோட இரு தோளையும் என்னையறியாமலே இறுக்கி பிடிச்சிட்டேன். அவள முதல்ல நம்ம ரெண்டு பேரையும் பார்த்து மென்மையாக சிரிச்சா. கொஞ்சம் கொஞ்சமா அவ முகம் சிவக்க ஆரம்பிச்சுது. டக்குன்னு அவ தன் பிளவுபட்ட பாம்பு நாக்கை என் கழுத்தில் பாய்ச்ச பார்த்தாள். நான் உடனே பயத்துல ‘ஆ…’ன்னு கத்க்கிட்டு எழுந்தேன்.”

“நந்தன், நீ கண்டது கனவா இருந்தாலும் சுவாரஸ்யமா இருக்குடா. அந்தக் கனவு பலிக்காமல் இருந்தா சரி!”

அரவிந்தன் கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஐந்து பதினைந்து ஆகியிருந்தது.

உடனே, நந்தன் தன் காலை கடன்களை முடிப்பதற்கு பாத்ரூம் நோக்கி சென்றான்.

ஆனால், அரவிந்தன் கடிகாரத்தைக் கண்ட பின் அதிர்ச்சி அடைந்தான். ஏனெனில், விடியற்காலையில் கண்ட கனவு விரைவில் பலிக்கும் என்பார்கள். அதை உணர்ந்தவனாக பயம் கலந்த குழப்பத்தில் காணப்பட்டான் அவன்.

அரவிந்தன் கனவு பலிக்குமா? காத்திருந்து பார்ப்போம்.

-தொடரும்…

கமலகண்ணன்

32 Comments

  • நந்தன், அரவிந்தன் கதை அமைப்பு மிக பிரமிப்பாக உள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் பயம் எதை நோக்கி நகரம் என்று தெரியவில்லை. மிகப்பெரிய பயத்தை கொடுத்த நண்பர் பிரதாப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்தடுத்த பயங்களை காண ஆவலாக உள்ளேன்!!💐💐💐

    • மிக்க நன்றி எழுத்தாளர் நண்பர் மோ‌.ரவிந்தர் அவர்களே ! மகிழ்ச்சி.

    • அருமை, வணங்குகிறேன். கண்டிப்பாக தொடர்வேன்.

  • இறைவன் அருளால் நான் எழுதும் அஷ்டநாகன் தொடர் வெற்றி பெற வாசக நெஞ்சங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்று மனதார நம்புகிறேன்…மின் கைத்தடி குழுமத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

  • நாகங்கள் ஜீவ சமாதி அடையுமா? சுவாரசியமாக நகர்கிறது கதை. அடுத்து எப்பொழுது வெளியிடுவீர்கள். அதாவது தினமுமா அல்லது வாரத்திற்கு ஒரு முறை என்ற நடைமுறையிலா…

    • வணக்கம் தோழி ! நாகங்கள் அரிதாக ஜீவ சமாதி அடையும்.அதற்கு ஆதாரம் உண்டு.இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வருகிறேன்… வாராவாரம் ஞாயிறு தொடர் வெளியாகும்… தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன்… நன்றி.

  • அருமையான தொடக்கம் நண்பரே. விறுவிறுப்பான தொடர் நந்தனை போல் நானும் ஆர்வமுடன் …. விடியற்காலை கனவு விரைவில் பலிக்கும் என கூறியுள்ளீர்.. பார்ப்போம்… சிவாயநம

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே…இந்த கதை தங்களுக்கு பிடித்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி…. ஓம் நமசிவாய

  • அரவிந்தன் கனவு பலிக்குமா? காத்திருக்கிறேன், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு…

    • மிக்க நன்றி தோழி ! மனம் மகிழ்கிறேன்… மகிழ்ச்சி

  • ஆபாரம் நண்பரே. ஆரம்பமே மிக அமர்க்களமாக இருக்கிறது. தொடருங்கள். வாசிக்க வாசிக்க பிரமிப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே… ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக இருக்கும்… மகிழ்ச்சி.

  • அமர்க்களமான ஆரம்பம். பாம்புகளின் டீடைலிங் சிறப்பு. அரவிந்தன் கனவு பலிக்கும் போது வாசகர்களுக்கு திகிலும் சுவாரஸ்யமும் gurantee. அமானுஷ்ய genreல் எழுதுபவர்கள் குறைவே. மென்மேலும் உயர வாழ்த்துகள்.

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே… உங்கள் நம்பிக்கை பலிக்கும்.மகிழ்ச்சி‌.

  • நன்று.. கதை சுவாரசியமான விதத்தில் செல்கிறது.💐💐. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.😊👍

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி அக்கா… இறைவன் அருளால் நல்லதே நடக்கும்.

  • அருமையான கதைக்களம் 👌👌👌 சிறப்பான தொடக்கம் 👌👌

    முதலில் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் எனதருமை சகோதரரே … ஏனென்றால் நான் இதையெல்லாம் அந்த அளவுக்கு நம்பியது கிடையாது.. எனக்கு ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் 👌👌

    பாம்புகள் ஜீவ சமாதி அடையுமா?? இது நான் முதல் முறையாக கேள்வி படுகின்றேன்!!!

    அடுத்த படைப்பு எப்போது வரும்??

    • ஒவ்வொரு ஞாயிறு தோறும் ஒவ்வொரு அத்தியாயம் வெளிவரும் நண்பரே… தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன்… நன்றி.

  • அருமையான தொடக்கம்,
    படிக்க விறுவிறுப்பாகவும் ஆர்வமாகவும் உள்ளது நண்பரே..
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

  • நல்ல தொடக்கம்.. கனவு கதை நன்கு அவர்களுடன் என்னையும் சேர்ந்து பயணிக்க வைக்கிறது..

    • தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி சகோதரி… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

  • முதல் பந்திலேயே சிக்ஸர் தம்பி !! அட்டகாசம் அடுத்து என்ன என ஆவலை தூண்டிவிட்டாய் . ஒரு வாரம் காத்திருக்கனுமேனு சங்கடமா இருக்கு. எனிவே நாவலை நாகங்கள் வளைந்து நெளிந்து போவது போல் பற்பல அதிர்ச்சி வளைவுகளையும் திடுக் நெளிவுகளையும் நாவலின் ஊடே கொண்டு ஒரு அருமையா நாவலை கொடுப்பாய் எனும் நம்பிக்கை இருக்குப்பா.தம்பி . வாழ்த்துகள். !!

    • மிக்க நன்றி ஐயா…. உங்களின் விமர்சனம் எனக்கு மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்

  • அன்பான நண்பர் பிரதாப் அவர்களுக்கு மிகவும் அருமையான ஆரம்பம் உங்கள் கதை ஓட்டம் கதை வடிவமைப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது நேரில் பார்ப்பது போலவே உங்களுடைய கதை சொல்லும் திறமை மிகவும் அழகாக இருக்கிறது மேற்கொண்டு வரிக்குவரி சுவாரஸ்யங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மேலும் இதுபோல பல கதைகளைப் படைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • மிக்க நன்றி சகோதரரே ! தங்கள் விமர்சனத்திற்கு கண்டு மனம் மகிழ்கிறேன்… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்

  • மிக அருமையாக நகர்கிறது. நிறைய செய்திகளை அறிய காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள்

    • மிக்க நன்றி அக்கா…ஒரு எழுத்தாளர் என் தொடர் கதை வாசிப்பதை பெருமையாக கருதுகிறேன்.

  • நன்றாக உள்ளது சகோ, தொடர்ந்து எழுதுங்கள் விறுவிறுப்பு குறையாமல், நன்றி

    • மிக்க நன்றி சகோதரரே… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

  • கதையின் தொடக்கமே மிக நன்றாக உள்ளது. படிக்க மிகுந்த ஆவலாய் உள்ளேன்.

    • மிக்க நன்றி சகோதரி… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

Leave a Reply to Natarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...