புத்தகப் பயணம் | Dr. லட்சுமி ப்ரியா 

 புத்தகப் பயணம் | Dr. லட்சுமி ப்ரியா 

நம்மை சுற்றி அளவற்ற திறமையோடும், கற்பனை திறத்தோடும்   இளம் பெண்களும்,  நடுத்தர வயது பெண்களும்,  மாற்றுதிறனாளிகளும்,  நம் இனிய சகோதரிகளான திருநங்கைகளும் உள்ளனர்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் பல கதைகள் உள்ளன.  இவர்களுக்கு சமுதாயத்தைப்  பார்த்து உரத்தகுரலில்  கேள்வி கேட்கும்  ஆசையும்  இருக்கிறது.

இதற்கு ஒரே வழி  பேனாமுனைதான். எழுத்து சுதந்திரம் உள்ள நம் நாட்டில் தான் நினைப்பதை, எங்கே எழுதுவது?  யாரை அணுகுவது ?

பணம் எவ்வளவு செலவாகும்?

பேரறிஞர்கள் மத்தியில்  எழுதுவது எப்படி  என்ற   வினாக்களுக்கெல்லாம்  பதிலாக ,

லட்சுமி ப்ரியாவின்  எண்ணத்தில் உருவானது pachydermtales  இது ஒரு குடும்பம்

இதில்  இளம்பெண்களுக்கு  creative writing பற்றி சொல்லிதருகிறர்கள்.

இந்த நிறுவனத்தில் பசித்தவர்களுக்கு மீன்  அளிப்பதை விட மீன் பிடிக்க கற்றுத்தரவேண்டும்  என்ற பழமொழிக்கேற்ப  இளம்பெண்கள்  இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று  எழுதுவதில் மட்டும் அல்ல, இணையதளங்களிலும்  தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

Pachydermtales ஒரு குடும்பம்.  இதை இலக்கியம், கலை , மொழிப்பற்று உள்ளபெண்கள் இணைந்து   பணிபுரிகின்றனர். இவர்களின் படைப்புகள் பாதுகாப்பாய் மக்களை அடைகின்றன. ஒவ்வொருபெண்ணிற்கும் இங்கு பணிசுதந்திரம் உள்ளது. பொதுவாகவே பெண கள்வாழ்க்கையின் வலிகளை  உணர்ந்தவர்கள். கணவனை இழந்த பெண்களின் மேல் முட்கள் வீசப்படுகின்றன. கணவனால்புறக்கணிக்கபட்ட பெண்கள்  மற்ற பெண்களால் புறம் பேசப்படுகிறாள்

இளம் குழந்தைகள் காமுகர்களால் கசக்கப்படுகிறார்கள் இது போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த நிறுவனத்தின் கதாசிரியர்களால் தீர்வு சொல்லமுடிகிறது.பெண்கள்தன் வலிமையை  அதிகரித்து  கொள்ளவும்தாங்கள் ஒரு போகப்பொருள் அல்ல   . தங்களுக்கும்  திறமை உண்டு என்பதை எந்த வயதிலும் நிருபிக்கவும்  ஒரு பாதையை pachydermtales காட்டுகிறது

சக பெண்களிடையே இருக்கும்  திறமையை கண்டறிந்து அவர்களை எழுத்தாளர்கள்  ஆக்கி அவர்களின்  நூல்களை பிரசுரித்து   மக்களின் கைகளை அடையச் செய்கிறது .

இந்த நிறுவனம்  புத்தகங்களை மொழிபெயர்க்கவும் உதவுகிறது.

நல்ல கதைகளை திரைப்படமாக ஆக்கமுயல்கிறது. மாற்று திறனாளிகளுக்குள் இருக்கும் superheroieneஐ வெளிப்படுத்த மாயா எனும் தளம் உள்ளது. இந்த நிறுவனம் இதுவரை ஆறு ஆங்கில நூல்களையும், மற்றும் ஹிந்தி, தமிழ் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. சாமான்ய பெண்களையும் சாதனை  பெண்களாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள   நிறுவனத்தில் அயராது உழைக்கும் இளம் பெண்களையும் வாழ்த்துகிறோம்.

செப்புமொழி பதினெட்டுடையாள்! இவள் சிந்தனை ஒன்றுடையாள்  என்ற  நம் பாரதியின் கனவை நினைவாக்க  அனைத்து மொழிநூல்களையும்  விரைவில். பிரசுரம் செய்யும்

இதன் நிறுவனர் பற்றிய குறிப்பு

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில்  துப்பறியும் நாவல்களை பற்றி  ஆராய்ச்சிதாளை சமர்ப்பித்து, முனைவர்  பட்டத்தைப் பெற்றுளார்.

வளரும்  சிறந்த எழுத்தாளர். இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, பூடான், நேபாளம் போன்ற  நாடுகளில்  தனது ஆய்வுகட்டுரைகளை பற்றி  பேசியுள்ளார்.  பல நாடுகளில் கல்லூரி விரிவுரையாளராக வாய்ப்பு கிடைத்தும்  பெண்களுக்கு ஏதேனும்  செய்ய வேண்டும்  என இவர் இதை தொடங்கியுள்ளார்.

இதன்நோக்கம் வலிமை உள்ள  பெண் சமுதாயத்தை  உருவாக்க வேண்டும். என்பதுதான்

டாக்டர் லட்சுமி ப்ரியாவின்  இப்பயணத்தில்     வெளிநாட்டில் வசிக்கும்   பெண்கள், மற்றும் இந்தியாவில்  உள்ள  பெண்கள் மதம், அரசியல், மொழி கடந்து உறுதுணையாக இருக்கிறார்கள்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…

கமலகண்ணன்

5 Comments

  • சாதிக்க வயது இல்லை என்ற வாத்தியத்தை தகர்த்தெரிந்து மிகப்பெரிய வெற்றியை கையில் எடுத்து மறைக்கப்பட்ட மனிதர்கள் முகங்களை கண்டெடுத்து முகவரி கொடுக்கும் தோழி லட்சுமி பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐💐💐💐

  • தன்னைதானே ஊக்கப்படுத்திக் கொண்டு, பிறரையும் ஊக்கப்படுத்தும் செயல்பாடு என்பது மிகவும் அரிதானவொன்று…அது உங்களிடம் அமைந்துள்ளது.
    வாழ்த்துகிறேன்.

  • பெண்மைக்கு பெருமை சேர்த்த நீவிர் வாழ்க பல்லாண்டு

  • Dr.R.lakshmi Priya is a wonderful woman.really I appreciate her.God with her and bless her forever.

  • சிறந்த முயற்சி. பாராட்டுகள் அம்மையாரே. கடவுள் உறுதுணையாக இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...