வரலாற்றில் இன்று – 19.06.2021 பிலைசு பாஸ்கல்
உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளர் பிலைசு பாஸ்கல் (Blaise Pascal) 1623ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் பிறந்தார்.
இவர் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் உடையவர். முக்கோணங்கள் குறித்து பல விதிகளை உருவாக்கினார். தனது 16வது வயதில் முதல் ஆராய்ச்சி நூலில் கூம்பு வெட்டுகளைப் (Essay on Conics) பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், பாஸ்கல் தேற்றம் என்று தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.
1642ஆம் ஆண்டு தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதற்கு உதவியாக, கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி தந்தார். மேலும், இவர் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார்.
நிகழ்தகவு கோட்பாடு, பாஸ்கல் விதி, பாய்ம இயக்கவியல் விதி ஆகியவற்றை கண்டறிந்தார். இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக அழுத்தத்தின் ளுஐ அலகிற்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.
தனது தன்னம்பிக்கையால் விடாமுயற்சியுடன் சாதனை படைத்த பிலைசு பாஸ்கல் 1662ஆம் ஆண்டு மறைந்தார்.
சல்மான் ருஷ்டி
உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) 1947ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
1981ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ (Midnight’s Children) புதினம் உலகளவில் பிரபலமாகி, புக்கர் பரிசை (Booker Prize) வென்றது.
இவர் இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். 1988ஆம் ஆண்டு இவர் ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ என்ற நூலை வெளியிட்டார். இவருக்கு இலக்கிய சேவைகளுக்காக 2007ஆம் ஆண்டு (Knight Bachelor) என்ற ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
1945ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13வது இடத்தை ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வழங்கியது. 2005ஆம் ஆண்டு இவரது ‘ஷாலிமார் தி கிளவுன்’ நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஹட்ச் கிராஸ்வேர்டு புக்’ விருது கிடைத்தது.
முக்கிய நிகழ்வுகள்
1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பிறந்தார்.
1993ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் வில்லியம் கோல்டிங் (றுடைடயைஅ புழடனiபெ) மறைந்தார்.
2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி உவமைக் கவிஞர் சுரதா மறைந்தார்.