உருளை மசாலா சாதம்

 உருளை மசாலா சாதம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2,
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
மாங்காய்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் .

செய்முறை

  • முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
  • உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்கை சேருங்கள்.
  • அத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
  • உருளைக்கிழங்கு வெந்ததும் மற்ற தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.இப்போது சுவையான உருளை மசாலா சாதம் தயார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *