வாகினி – 1 | மோ. ரவிந்தர்

 வாகினி – 1 | மோ. ரவிந்தர்

1990ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மாலை நேரம் ஆறு மணி இருக்கும். அந்த நேரத்தில் ஆல் இன்டியோ ரேடியோவில் புத்தம் புதுக் கீதமாக என்ற நிகழ்ச்சியில் “இணைந்த கைகள்” திரைப்படத்தில் இருந்து.

“அந்தி நேர தென்றல் காற்று

அள்ளி தந்த தாலாட்டு…

தங்கமகன் வரவைக் கேட்டு

தந்தை உள்ளம் பாடும் பாட்டு…

அந்தி நேர தென்றல் காற்று

அள்ளி தந்த தாலாட்டு…”

 – என்ற பாடல் ஒரு வீட்டிலிருந்து மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த வீட்டின் எதிர் திசையில் இருந்து இன்னொரு வீட்டை நாம் கவனித்தோமானால், ஒரு பெண் ஏதோ பெரும் துயரத்தோடு கண்ணில் நீர் வடிய டைரியில் ஏதோ ஒன்றை அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

அவள், எதற்காக அப்படி அழுகிறாள், டைரியில் என்ன எழுதுகிறாள் என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், அவள் மனதில் ஏதோ ஒரு பெரும் துயரம் குடியிருந்தது. அது என்னவாக இருக்கும் என்று நாமும் காணலாம் வாருங்கள்.

‘என் மகளே!, உனக்காகதான் இந்தக் கடிதம்.

மேலே வானம், கீழே பூமி இவை தவிர இந்தப் பூமியில் நிலையானது என்று ஏதுமில்லை. இந்தப் பூமியிலுள்ள அனைத்து உயிரினமும் ஒருநாள் அழியக்கூடியது தான்.

என் மகளே!, நானும் உனக்கு நிலையானவள் அல்ல, இன்றுடன் நானும் தொலைய போகிறேன். இந்தப் பூமியில் இனி நான் வாழ அருகதையற்றவள். என் சுகத்திற்காகக் குடும்பம் கணவர் என்று பாராமல் தங்கள் வாழ்க்கையும் சேர்த்து சீர் அழித்திருக்கிறேன்.

பெண்களிலே நான் ஒரு தலைக்குனிவு, என் கண்ணீரையும் காயத்தையும் தாங்கி நின்ற கட்டிலையும் களங்கப் படுத்திவிட்டேன். ஒரு தூக்குத் தண்டனை கைதிக்குத் தீர்ப்பு எழுதிய பேனா இறுதியில் உடைக்கப்படுவதைப் போல இந்த நிமிடம் நானும் உடைந்தாகவேண்டும்.’ என்று எழுதிக்கொண்டே பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த வாகினியை பார்த்து திடீரென இரும்பினாள், கஸ்தூரி.

வாகினி, தாய் இரும்புவதைக் கண்டு மருந்து எடுத்து வர வேறொரு அறைக்கு வேகமாக ஓடினாள்.

‘நான் ஒரு பெண், பெண்ணின் மகத்துவத்தைத் தெரிந்தவள். தெரிந்தும், சிரிக்கக்கூடாத இடத்தில் என் சிரிப்பை சிந்திவிட்டேன். எனது மகளே!, இறுதியாக எனக்கு ஒரு ஆசை. உன் கையினால் இந்தப் படுபாவி இறக்கவேண்டும். இந்த ஜென்மத்தில் எனக்கு நான் தரும் தீர்ப்பும் அதுதான்.’ என்று அங்கு வந்த மகள் வாகினியை பார்த்து அசையாமல் கண்ணீர் வடித்தாள், கஸ்தூரி.

“அம்மா, உனக்குக் காலையிலிருந்தே இரும்பலா… இருக்கு. இந்தாம்மா இந்த மருந்த குடி…” என்று கூறிக்கொண்டே அம்மா கையில் மருந்து பாட்டிலை கொடுத்தாள், வாகினி.

மௌனமாக மகள் தரும் மருந்தை கையில் வாங்கினாள், கஸ்தூரி.

‘எனக்கு இரும்பல் என்று நினைத்து என் மகள் எனக்கு மருந்து கொடுக்கிறாள், இன்பமாக அவள் தரும் விஷத்தை குடிக்கிறேன். ஆம்!, நான் அந்த மருந்து பாட்டிலில் எற்கனவே விஷத்தை கலந்துவிட்டேன். அது விஷம் என்று தெரியாது அவளுக்குத் தெரிந்திருந்தால் மருந்து பாட்டிலை கொடுத்திருக்க மாட்டாள். நான் செய்த பாவத்தை எல்லாம் அவள் கைகளாலே கழுவ நினைக்கிறேன், அவ்வளவுதான்.’ என்று.

வாகினி முகத்தைப் பார்த்துக் கொண்டே அந்த விஷ பாட்டிலில் இருந்த விஷத்தை மெல்ல குடிக்கத் தொடங்கினாள், கஸ்தூரி.

‘இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பதிலாக, அவளிடம் நான் இறக்க போகிறேன் என்று கூறி இருக்கலாமே என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழும். இது அவளுக்கு என்னவென்று தெரியாத வயது, நான் இறக்க போகிறேன் என்று கூறினால் அவளுக்கு என்ன தெரியும்? அதனால்தான் எதுவும் அவளிடம் சொல்லாமல் இதை எழுதுகிறேன்.

எனக்கு இப்போது உறக்கம் வருகிறது இன்னும் சற்று நேரத்தில் நான் இறக்க போகிறேன் என்று நினைக்கிறேன். என் சமூகமே, என் மகளுக்காவது எந்த ஒரு தீங்கும் செய்யாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தச் சமூகத்தின் நீதி தெரியாது அவளுக்கு.

அவளை இந்தச் செயல் செய்யத் தூண்டியதர்க்கு என்னையும், எனக்குத் தீர்ப்பு எழுதிய என் பேனா என் அன்பு மகளையும் மன்னித்துவிடுங்கள்.

‘இப்படிக்கு

இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டாள். – என்று.

கையில் வைத்திருந்த டைரியை எழுதிவிட்டு அதைக் கட்டில் மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்தாள், கஸ்தூரி.

சில நிமிடம் வரை வாகினியின் முகத்தை ஏதோ ஒரு யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

பிறகு முகத்தில் வடிந்த கண்ணீரை எல்லாம் அவசர அவசரமாகத் துடைத்து, போலியான ஒரு புன்னகை முகத்தில் போட்டுக்கொண்டு, பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த வாகினியை இழுத்து கட்டித் தழுவி அவள் கண்ணத்தில் ஆயிரம் முத்தங்களைப் பதித்தாள்.

“வாகினி… நீ, அப்பா எப்ப வருவாரு எப்ப வருவாருன்னு கேட்டுக்கிட்டே இருப்பியே. நான் சாமிக்கிட்ட போய் அப்பாவ கூட்டிக்கிட்டு வந்துடறேன், அதுவரைக்கும் தம்பி, தங்கையே நீ பத்திரமா பாத்துக்கிறியா?”

“ஓ” அதுக்கு என்னம்மா, நீ போய்… அப்பாவ கூட்டிக்கிட்டு வா. அது வரைக்கும் நான் தம்பி, தங்கைய பார்த்துக்கிறே” என்று மழலை பேசும் மொழியால் கூறினாள், வாகினி.

தாயின் அன்பில் மீண்டும் ஆயிரம் முத்தங்கள் வாகினியின் கன்னத்தை அலங்கரித்தது.

“சரிடா அம்மா, நீ போய் விளையாடு அம்மாவுக்குத் தூக்கம் தூக்கமா வருது நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்றாள், கஸ்தூரி.

கபடம் அறியாத பிஞ்சு, அம்மா உறங்க போகிறாள் என்று கையினால் “டாட்டா… டாட்டா…” என்று கூறிக்கொண்டே விளையாடுவதற்கு வெளியே ஓடினாள், வாகினி.

கஸ்தூரி, அப்படியே கட்டில் மீது பெரும் உறக்கத்தோடு விழுந்தாள்.

இப்பொழுது அவளின் உயிர் அந்தப் பொய் உடலைவிட்டு மெல்ல பறந்து கொண்டிருந்தது.

தொடரும்

இரண்டாம் பகுதி >

கமலகண்ணன்

34 Comments

  • அருமையான கதை தொடக்கம். என் கருத்து என்றும் இறப்பு எந்த ஒரு காயத்திற்கும் மருந்தாகாது. இன் றைய சமூகத்தில் அதிகம் நடக்கின்றன ஒரு நிகழ்வோடு உங்கள் தொடக்கம் இருக்கிறது. வாழ்த்துக்கள் 👍

  • அருமையான பதிவு தொடக்கம் இப்படி இருந்தால்தான் இந்த கதைக்கு பலம்

  • தாய் படும் மனோவேதனை எப்படி சரியாக போகிறது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்…

    • நன்றி சார்

  • Super story next week waiting

    • Very interesting story keepit up

      • நன்றி அடுத்தடுத்த அத்தியாயத்தை தொடர்ந்து படியுங்கள்!.

  • உங்கள் கதை மிகவும் அற்புதானது… படிக்க படிக்க அடுத்து என்ன என்ற அளவுக்கு ஆர்வம் தூண்டுகிறது

  • அருமையான கதை தொடக்கம். விரைந்தே முடிந்து விட்டது முதல் அத்தியாயம் அதில் சற்றே வருத்தம். தொடரட்டும் வாகினியின் பயணம். வாழ்த்துக்கள்

  • மிக சிறப்பாக உள்ளது…..

    • நன்றிகள் பல அடுத்தடுத்த அத்தியாயங்களை தாங்கள் தவறாமல் படியுங்கள். தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் அது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்

  • All the best mr Ravi sir story very well

  • நன்றி குமார் சார்

  • வித்தியாசமான தொடக்கம்.வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா.

    • நன்றிகள் பல அடுத்தடுத்த அத்தியாயங்களை தாங்கள் தவறாமல் படியுங்கள். தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் அது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்

  • super

  • super super

  • super super

  • very nice

  • super arumai

  • நன்றி அம்மா தங்கள் கருத்துக்கு கதையைத் தொடர்ந்து படியுங்கள்

  • வாகினி என்று பெயர் வைத்துவிட்டு அம்மாவை ஏன் கொன்றீர்கள். மனது கஷ்டமா இருக்கு

    • கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருந்தால்தான் கதை அடுத்த அத்தியாயத்திற்கு நகரும்

  • அந்தி நேர தென்றல் காற்று

    அள்ளி தந்த தாலாட்டு…

    தங்கமகன் வரவைக் கேட்டு

    தந்தை உள்ளம் பாடும் பாட்டு…

    அந்தி நேர தென்றல் காற்று

    அள்ளி தந்த தாலாட்டு…”

    – என்ற பாடல் ஒரு வீட்டிலிருந்து மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. Ravi sir super continue with story….

    • நன்றி. அடுத்தடுத்து கதைக்களத்தை தொடர்ந்து படியுங்கள்!

  • முதல் பகுதியே சற்று கனத்த இதயத்துடன் நகர்கிறது. அடுத்துவரும் பகுதியில் என்னவென்று பார்ப்போம். நன்றி.

    • நன்றி தோழர் தங்களுடைய பாதிப்பை இப்பொழுதுதான் கண்டிப்பு மிக்க மகிழ்ச்சி

  • நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், ஐயா!

Leave a Reply to Pennagadam pa. prathap Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...