‘நகை’ அணிவியுங்கள் உதடுகளுக்கு!!!

‘மின் கைத்தடி’ வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் ஏப்ரல் 14 முதல் பல புதிய அம்சங்களுடன் நம் தளம் ஜொலிக்க இருக்கிறது. அதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இப்போது இந்த நகைச்சுவைச் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம்.

மேலே உள்ள படம் சொல்லும் சூழ்நிலையை, கதாபாத்திரங்களை கவனியுங்கள். இவற்றை வைத்து கலகலவெனச் சிரிக்க வைக்கும் படியான ஒரு நகைச்சுவைச் சிறுகதையை எழுதுங்கள். எழுதிய சிறுகதையை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தளத்தில் பிரசுரிக்கப்படும். தவிர, புத்தகப் பரிசையும் பெறும்.

என்ன… கை பரபரக்கிறதா எழுத..? ஆரம்பியுங்கள்…. காத்திருக்கிறோம்!!

போட்டியின் நிபந்தனைகள் என்பவை இவைதான்….

  1. சிறுகதைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

2. சிறுகதைகளை ‘நகைச்சுவை சிறுகதை போட்டிக்கு’ என்று தலைப்பில் குறிப்பிட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எம்எஸ் வேர்ட் ஃபைலாக இணைத்து அனுப்ப வேண்டும். மெயிலில் பேஸ்ட் செய்யப்படும் கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

3. மின்னஞ்சலில் உங்கள் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் உங்கள் சொந்தக் கற்பனை என்பதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.

4. கதைகளை இப்போது துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை அனுப்பலாம். அனைத்தும் பரிசீலிக்கப்படும்.

5. கதைகளைத் தேர்வு செய்வது குறித்த விஷயத்தில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. அதுகுறித்த எந்த விமர்சனங்களும், கருத்துக்களும் ஏற்கப்படாது.

6. கதைக்கு நீங்கள்தான் தலைப்பு வைத்து அனுப்ப வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்.

பங்கேற்கவிருக்கும் அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஆல் த பெஸ்ட்.

4 thoughts on “‘நகை’ அணிவியுங்கள் உதடுகளுக்கு!!!

  1. இதோ கிளம்பியாச்சு….கதை எழுத…

    1. வெல்கம் சார். சிரிக்கக் காத்திருக்கிறோம்.

    2. தோ…. வந்துட்டேன்!….. நானும் கதை எழுத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!