கடன் சுமையை ஏற்படுத்தும் வாஸ்து அமைப்புகள்..!!
ஒவ்வொரு மனிதனும் தனக்காக ஒரு சொந்த வீடு இருப்பதை வாழ்நாள் லட்சியமாக கொள்கிறான். புதிதாக கட்டிய வீட்டில் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழும்போது வீடு கட்ட வாங்கிய கடன் அதிகமாகி, அந்த கடனுக்காக வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அவ்வாறு கடன் அதிகமாக உயர்வதற்கு கீழ்க்கண்ட வாஸ்து காரணங்களாக இருக்கலாம்.
உங்களுடைய வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருப்பது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது.
வீட்டிற்கு நான்கு புறமும் மதில் சுவர் இல்லாமல் இருப்பது.
வீட்டிற்கு வடக்கு அல்லது வடமேற்கு பகுதியில் நுழைவாயில், கேட், கிணறு, ஆள்துளை கிணறு, குளம் போன்ற அமைப்புகள் இருப்பது.
மேலும், வடமேற்கில் கழிவுநீர்த்தொட்டி அமைக்கும்போது வீட்டை ஒட்டியோ அல்லது வீட்டிற்கு உள்ளே வரும் வகையில் இருப்பது.
வீட்டின் உள்ளே படி அமைக்கும்போது ஈசான்ய பகுதி, வடமேற்கு அல்லது தென்கிழக்கில் உள் மூலைப்படி அமைப்புகளுடன் இருப்பது
வீட்டின் போர்டிக்கோ அமைக்கும்போது பில்லர் போன்ற அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் இருப்பது. அப்படி போர்டிக்கோ அமைக்கும்போது வெட்டுப்பட்ட அமைப்புடன் வருவது.
பூஜையறை வடக்கிழக்கு அல்லது தென்மேற்கில் வருமாறு அமைத்து இருப்பது.
மேற்கண்ட சில அமைப்புகளுடன் மேலும் சில தவறுகள் இருக்கும்போது வீட்டில் உள்ள ஆண்களின் வருமானத்தில் தடை, கடன் அதிகமாக இருத்தல் போன்ற விளைவுகள் ஏற்படும்.
சிலர், நான் வாஸ்து முறைபடிதான் வீட்டை கட்டி உள்ளேன் எனவும், அதனால் வாஸ்து பாதிப்புகள் இல்லை எனவும் கூறுவார்கள். ஆனால், தங்களையும் அறியாமல் சில தவறுகளை செய்து இருப்பார்கள். அதுவே கடன் ஏற்பட காரணமாகிவிடும். ஒரு தேர்ந்த வாஸ்து நிபுணர் மட்டுமே நீங்கள் செய்த தவறுகளை கண்டறிவார். அவைகளை திருத்தி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.