பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா?
எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம்.
தென்மேற்கு பகுதியும், பணமும் :
குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது.
வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது.
தென்மேற்கு பகுதியை விட வடகிழக்கு பகுதி தாழ்வாக அமைவது.
தென்மேற்கில் உள்ள அறையில் மட்டுமே பணப்பெட்டியை வைக்க வேண்டும். பணத்தை தேக்கு மரப்பெட்டியில் வைப்பது மேலும் சிறப்பு. எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.
வடமேற்கு பகுதியும், பணமும் :
வீட்டின் வடமேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் பணம் விரயமாகும் வாய்ப்புகள் இருக்கும்.
பணம் எப்படி விரயமாகிறது? என்று பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதோ அல்லது ஜாமீன் கையெழுத்து போன்று ஏதேனும் இருந்தால் அதுவும் விரயமே. இது நிச்சயம் உங்கள் வீட்டில் வடக்கும், மேற்கும் சந்திக்கக்கூடிய வடமேற்கு மூலையில் தவறு இருக்கலாம். உதாரணமாக, வடமேற்கு கூரை பகுதி தாழ்வாக இருப்பது.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பணம் என்பது மிக முக்கியமானது. சுப செலவுகளான திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவுகள் செய்ய நேர்ந்தால் நல்லது. அதுவே மருத்துவ செலவுகள், கோர்ட் கேஸ் செலவுகள் போல விரைய செலவாகவும், வீண் செலவாகவும் இருக்கக்கூடாது.
செல்வம் குறைய வேறு முக்கிய காரணங்கள் :
வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள பணம் விரயமாகும்.
குழாய்களில் தண்ணீர் சொட்டுவது இருந்தால் வீணாகும் நீரைப் போல வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது.
வீட்டில் குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பது.
வீட்டில் அதிக குப்பைகள் மற்றும் ஒட்டடை இருப்பது.
சூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது.
தேவையில்லாத பொருட்களை வீட்டின் பரண் மேல் வைத்திருக்கும்போது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.
பறவைகளுக்கு, தெரு நாய்களுக்கு உணவு வழங்கினால் பண விரயம் குறையும்.