வரலாற்றில் இன்று – 21.03.2021 உலக காடுகள் தினம்

 வரலாற்றில் இன்று – 21.03.2021 உலக காடுகள் தினம்

வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக பொம்மலாட்ட தினம்

உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக 2003ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 21ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உலகின் பல்வேறு இடங்களில் பொம்மலாட்டம் மரபுவழி கலையாக, உயிரற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி பேசும் உணர்வில் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.

நா.மகாலிங்கம்

ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 1923ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தார்.

இவர் தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர். இவர் பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.

சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்ஜியத்தை தனது உழைப்பால் விரிவுப்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி 1952, 1957, 1962ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார்.

இவரது சமூக சேவையைப் பாராட்டி பத்ம பூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளை செய்த ‘அருட்செல்வர்’ என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தியன்று மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

இன்று உலக கவிதைகள் தினம், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம், உலக டவுன் சிண்ட்ரோம் தினம், சர்வதேச நவ்ரூஸ் தினம் ஆகியவையும் கடைபிடிக்கப்படுகிறது.

1916ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசைமேதை ‘பாரத் ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் பிறந்தார்.

1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பாண்டித்துரை தேவர் இராமநாதபுரத்தில் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...