வரலாற்றில் இன்று – 28.11.2020 வில்லியம் பிளேக்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞர், ஓவியர் மற்றும் அச்சு உருவாக்குநருமான வில்லியம் பிளேக் (William Blake) 1757ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி லண்டனில் பிராட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் பிறந்தார்.
இவருடைய எழுத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சிந்தனைகள் ஆகியவை, எண்ணிலடங்கா எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றன.
1783ல் “Poetical Sketches” என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. மேலும் தன் கவிதைகளை விளக்கும் வகையில் வண்ணச் சித்திரங்களைச் செதுக்கினார்.
ஓவியம் வரைதல் மற்றும் கவிதை எழுதுவதில் தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட வில்லியம் பிளேக் 1827ஆம் ஆண்டு மறைந்தார்.
ஜோதிராவ் புலே அவர்களின் நினைவு தினம்
இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.
சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார். கல்விதான் அனைத்திற்கும் தீர்வு என்பதை உணர்ந்து, 1842ஆம் ஆண்டு மகளிருக்கான பள்ளியை தொடங்கினார்.
இவர் சத்ய ஷோதக் சமாஜ் என்ற அமைப்பை 1873ஆம் ஆண்டு தொடங்கினார். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாக திகழ்ந்த ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 1890ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் மறைந்தார்.
1964ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 என்ற விண்கலத்தை ஏவியது.