எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு & திருமண விழா

 எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு  & திருமண விழா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு விழா மற்றும் அவரது இல்ல திருமண விழா கோலகலமாக நடந்தது.

திருமணம் நிகழ்விற்காக முதல் நாளே நாங்கள் சென்ற பொழுது அங்கு அத்தனை பேரும் இரவு விருந்துக்காக வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

சுவையான சிக்கன் கிரேவி உடன் பரோட்டா, ஊத்தாப்பம் மற்றும் பாயசத்துடன் சுவையான இரவு விருந்து தயாராக இருந்தது. அனைவரும் விருந்து உபசரித்து, எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் தங்க வைத்து விட்டு, பிறகு இரவு சந்திப்பில் உரையாட ஆரம்பித்தோம்.

கிட்டதட்ட ஒரு இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை. எப்படித் தான் கதை எழுதுவது பற்றிய விரிவான உரையோடு சேர்த்து, தான் முன்னேறி வந்த நிகழ்வையும் எங்களோடு பகிர்ந்து உரையாடியது, நெகிழ்வான தருணமாயிருந்தது.

ஒவ்வொரு நொடியும் யுகம் யுகமாய் கடந்து போன உணர்வோடு அந்த அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சுகமான நினைவுகள் உடன் உறங்கச் சென்றோம்.

காலையில் திரு. ஆர்னிகா நாசர் அவர்களும் திருமதி. வகிதா நாசர் அவர்களும் தங்கள் கரங்களாலேயே சுவையான டீ எடுத்து வந்து எங்களை எழுப்பி, அந்த நாளை இனிக்க செய்வதற்கான முதல் படியாக இருந்தது நெகிழ்ந்து போனோம்.

உபசரிப்பு நமது பாரம்பரியத்தின் இன்னொரு பரிமாணம் என்பது அடையாளமாக அந்த உபசரிப்பு எங்களை நெகிழ வைத்தது என்றேதான் சொல்ல வேண்டும். அடுத்து நாங்கள் தயாராகி காலை உணவுக்காக சென்ற பொழுது சுவையான உணவு உண்டு அன்பையும் சேர்த்து சரி மாறியதோடு அனைவரையும் பார்த்து பார்த்து கவனித்து, இப்படித்தான் ஒரு நிகழ்ச்சி நிகழ்த்த வேண்டும் என்ற படிப்பினையை அங்கு சொல்லாமல் அனைவருக்கும் சொல்லி அதிர வைத்தார்கள் என்பதை இங்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

அங்கிருந்து ஒரு சில மீட்டர் தொலைவில் இருந்த திருமண மண்டபத்திற்கு சென்றோம். திருமணத்திற்கு தனியாக ஒரு அரங்கும், புத்தக வெளியீட்டிற்கு தனியாக ஒரு அரங்கும் அலங்காரம் செய்து வரிசையாக இருக்கைகள் வரிசையாக அடுக்கி இருந்ததை பார்த்ததும் மிக சரியான திட்டமிடல். புதுமையான விஞ்ஞான கதை எழுதும் நாவலாசிரியர் அல்லவா அதை ஒவ்வொரு நிகழ்விலும் ஏற்பாடு மிக நிறைவாக நெகழ்வாக என்று சொல்ல முடிகிறது.

மிக சரியாக 10 மணியளவில் மணமகனும் மணமகளும் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று அங்கு விமர்சையாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் நிகழ்ந்தது. அனைவரும் திருமண மண்டபத்திற்கு திரும்பினோம். 10.35 மணி அளவில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எழுத்தாளர் கமலகண்ணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக மேடையேறி அனைவரையும் மேடைக்கு அருகில் வருமாறு அழைத்து நிகழ்ச்சியை முறைப்படி தொடங்கினார்.

தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவரான எழுத்தாளர் திருமயம் பெ.பாண்டியன் அவர்கள் ஒருவரையும் விடாமல் அத்தனை பேரையும் அழைத்து சிறப்பாக வரவேற்புரை ஆற்றினார்.

அடுத்ததாக விஞ்ஞான சிறுகதைகள் புத்தகங்களை எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் வெளியிட, ‘பாக்கெட் நாவல்’ பதிப்பக பேராசான் திரு. ஜி. அசோகன் அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசியதாவது- கடந்த எட்டு மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அனைவரையும் முடக்கி விட்டது. ஒரு கட்டத்தில் உலகமே அழிந்து விடும் என்ற அச்சம் வந்து விட்டது. அதிலிருந்து வெற்றிகரமாக நாம் மீண்டு வந்து கொண்டு இருக்கிறோம்.

உடலில் செல்கள் இல்லாமல் போகலாம் என்றாலும், செல்போன் இல்லாமல் இருக்க முடியாது. மொபைல்போனிடம் நம்மை விற்று விட்டோம். தற்போது வசிப்பு திறன் குறைந்து விட்டது. எழுத்தாளர் சுஜாதாவிற்கு பின், விஞ்ஞானத்தை பற்றி ஆர்னிகா நாசர் எழுதி வருகிறார். இவரது எழுத்தில் விஞ்ஞானம், மெய்ஞானம் கலந்து இருக்கும்.

திரு. அசோகனை பற்றி இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஆர்னிகா நாசர் அவர்கள் எழுதிய நிறைய நாவல்களை பாக்கெட் நாவலில் வெளியிட்டது. நான் ருத்ர வீணை என்ற தொடர் நாவலை எழுதினேன். தொடர் கதை எழுதலாம், ஆனால் தொடர் நாவல் வெளியிடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். மிக சரியாக செயல் முறை படுத்தி வெளியிட்டவர் திரு அசோகன் அவர்கள்.

பாக்கெட் நாவல் பதிப்பாளர் அசோகன் பேசியதாவது- ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுதைகள் தரம்வாய்ந்த கதைகளாக உள்ளன. நட்புக்கு இலக்கணமாக விளங்கி வருகிறார். இதனால், ‘தினமலர்’ அந்துமணி அவர்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது ஆசியுடன், தற்போது நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அசோகன் பேசினார்.

எழுத்தாளர் தஞ்சை தாமு அவர்கள் பேசியதாவது- காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றினால்தான் நாம் உயிரோடு நீண்ட நாள் நிலைத்திருக்க முடியும். மாற்றம் ஒன்றே மாறாதது. பழைய விஷயங்களை எல்லாம் எடுத்து ஓரு பக்கம் வைத்து விட்டு புதுமையாக யோசிப்பதற்கு நிகர் அவருக்கு நிகர் அவரேதான். அவர் எழுதுகின்ற கதைகள் அத்தனையும் புதுமையான முறையில் இருக்கும். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் கூட குறையாது என்று பேசினார்.

ஆடிட்டர் ராஜ பாலு அவர்கள் பேசியதாவது- சேலம் வாசகர் பேரவை என்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த போது, நாங்கள் ஒரு அஞ்சல் அட்டையில் திரு ஆர்னிகா நாசர் அவர்களுக்கு, எங்கள் நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று கடிதம் எழுதினோம். நாங்கள் முன் முன்பின் பார்த்ததில்லை என்றாலும் எங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்.

அன்று முதல் எங்களது நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறந்த மனிதர் ஆனால் அவர்களைப் போல் நான் பார்த்ததில்லை. இன்றும் அவருடைய பல பல நட்பு வட்டாரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிகச்சிறந்த மாமனிதர் என்னையும் மேடையேற்றி ஒரு சில வார்த்தைகள் பேச வைத்ததற்காக இந்த தருணத்தில் நான் பெருமைப்படுகிறேன், என்று பேசினார்

திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள், திரு.ஜி. அசோகன் அவர்கள், திருமயம் பெ. பாண்டியன் அவர்கள், கவிஞர் தஞ்சை. தாமு அவர்க, நிகழ்ச்சிகளை தொகுத்த திரு. கமலகண்ணன் அவர்கள், நண்பர் ஆடிட்டர். கே. ராஜபாலு அவர்கள், டாக்டர் நிலாமகன் படிப்புக்கு உதவிய பெரியவர் ஹாஜி. பி. அகமது ஷரீப் அவர்கள், நிலாமகனின் படிப்புக்கு உதவிய மச்சான் ஜனாப். கருணைராஜா காத்தமநபி அவர்க, சம்பந்தி ஹாஜி. ரபீக் முகமது அவர்கள், ஜனாப். சையது இப்ராகீம் அவர்கள், காரைக்குடி சாச்சா ஜனாப் அப்துல் ஜப்பார் அவர்கள், நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி நிர்வாகி திரு. குருவாயூரப்பன் அவர்கள், சம்பந்தி வீட்டார் ஆலிம் ஏ. ஹாஜாமைதீன் மிஸ்பாகி அவர்கள் நன்றியுரை நிகழ்த்திய ஜாபார் சாதித் அலி அவர்கள் மற்றும் தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின்; நிர்வாகி எழுத்தாளர் வைகை ஆறுமுகம் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து அந்த மாமன்றத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இறுதியாக திருமதி வஜிதா நாசர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வசீகரமான வாழ்விற்கு தனது துணைவியாரும் ஒரு முக்கியமான அரண் என்று சொல்லி அந்த மாமன்றத்தின் பெருமையுடன் அறிமுகப்படுத்தியது நிகழ்வான ஒரு நிகழ்வாகும் அதைத் தொடர்ந்து,

எழுத்தாளர் ஆர்னிகா நாசர் பேசியதாவது: ஆன்மிகம், விஞ்ஞானம் ஆகியவற்றை உச்சத்தில் போய் பார்த்ததால், அந்த கதைகள் எழுதினேன். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என, ஈ.வெ.ரா., சொன்னார். ஆனால், ‘கடவுளை நம்பாதவன் முட்டாள்’ என, நான் சொல்கிறேன். கடவுள் இல்லாமல் அணுவும் அசையாது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ‘திருக்குரான் படித்து இருக்கிறாயா’ என, தினமலர் ஆசிரியர் கேட்டார். நான் படிக்க வில்லையென்று சொன்னேன். நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் உள்ள விழுமியம், கோட்பாட்டை படித்து பின்பற்ற வேண்டும். அதை முதலில் போய் படி என்று கூறினார். அதன்பிறகு, திருக்குரான் படிக்க தொடங்கிய போது, அதில் பல நல்ல கருத்துகள் இருப்பது தெரிந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

இறுதியாக,

புது கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜாபர் சாதிக் அலி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். அத்துடன் விழா மன நிறைவாக நிறைவு பெற்றது.

தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்து மடல் குழுமத்தின் நிர்வாகிகள் எழுத்தாளர் திருமயம் பெ.பாண்டியன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் வைகை ஆறுமுகம் அவர்கள் அளித்தார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் பிரியாணியுடன் விருந்து பரிமாறப்பட்டது. திரு. ஆர்னிகா நாசர் அவர்களிடமும் திருமதி. வகிதா நாசர் அவர்களிடமும் விடைபெற்று நிகழ்விடத்தை விட்டு நிறைவாக கிளம்பியதும் மனதுக்கு நிறைவாக இருந்தது.

திரு. ஆர்னிகா நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்களும், மணமக்கள் நிலாமகன்-பஹிமா ஆப்ரின் இருவரும் நீடூடி வாழ பிரார்த்திக்கிறது மின்கைத்தடி.காம்.

கமலகண்ணன்

3 Comments

  • சுருக்கமாகவும் சிறப்பாகவும் தொகுத்து தந்த நண்பர் கமலக்கண்ணன் அவர்களுக்கு நன்றிகள்
    -கீழை அ.கதிர்வேல்.

  • அருமையான தொகுப்புரை வழங்கினீர்கள்.
    இப்போதும் முழுமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். – தஞ்சை தாமு

  • முழுமையான பதிவு.

    சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றி கமலக்கண்ணன் சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...