வரலாற்றில் இன்று – 22.10.2020 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்

 வரலாற்றில் இன்று – 22.10.2020 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்

உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 1% மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கிளிண்டன் ஜோசப் டேவிசன்

அமெரிக்க இயற்பியல் அறிஞர் கிளிண்டன் ஜோசப் டேவிசன் 1881ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி பிறந்தார்.

மின்னணுக்கள் ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டுபிடிப்பிற்காக 1937ஆம் ஆண்டு கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினை பகிர்ந்துகொண்டார். இவர் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி மறைந்தார்.

அ.மாதவையா அவர்களின் நினைவு தினம்……!

தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.

இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை மூன்று ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே இவருடைய உயிர் பிரிந்தது.

முக்கிய நிகழ்வுகள்

2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைக்கோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது.

1900ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரர் அஷ்பகுல்லா கான் பிறந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...