ரைம்ஸ் வித் கிட்ஸ் மா………..
குழைந்தைகள் குதூகலம் அவர்களை போல் நாம் மாறி அவர்கள் முன் நிற்பதே ………..
ஆம் இப்பொழுது இருக்கும் கடுமையான சூழ்நிலையில் குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிறு புன்னகையை பார்த்தல் போதும் நமக்கு ஒரு லிட்டர் பூஸ்ட் குடித்ததற்கு சமமாகும். அதிலும் அந்த குழந்தைகளுக்கு பிடித்த பாடல்கள் ரைம்ஸ் என்று பாடினால் போதும் அவர்கள் தான் அந்த குழைந்தைகளின் நெருங்கிய நண்பராகி விடுகிறார்கள்.
ஆம் ஒரு மாத குழைந்தையிலிருந்து அறுபது வயது முதியவர் வரை பாடல்கள் கதைகள் என்றால் மயங்காதவர்களே இல்லை…..
சரி அப்படிப்பட்ட அருமையான ரைம்ஸ் ஒன்றை இப்போது கண்மணி பாப்பா வில் காண்போம் வாருங்களேன்…………..
“அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.”