கடலூரில் சர்வதேச சிறார் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை புக்ஸ் தமிழ்(வாசகர்கள் குழுமம்),மகிழ் (வாழ்வியல் உணர்வோம் ) நடத்திய விழாவில் Shree SK Vidhya Mandhir CBSE பள்ளி குழந்தைகள் இணைந்து இயற்கையுடான(Mindfulness) புத்தக வாசிப்பு விழிப்புணர்வை கண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சண்முகா இயற்கை விவசாயப் பண்ணையில் நடைப்பெற்றது.



இந்நிகழ்வை திருமதி.ர.ரம்யா ( உளவியல் ஆலோசகர்) அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து திரு.பி.கீர்த்தனா அவர்கள் குழந்தைகளிடம் புத்தகங்கள் வாசித்தல் பற்றியும் ஓரிகாமி பயிற்சிகளையும் வழங்கினார்.

பறவைகளை நோக்குதல்( Bird Watching) சார்ந்து திருமதி.ரா.கவிதா அவர்கள் தகவல்களையும் போட்டிகளையும் குழந்தைகளிடம் பரிமாறிக் கொண்டார்.
மேலும்,குழந்தைகள் தாங்கள் வாசித்த புத்தகங்களுக்கும் இயற்கைக்குமிடையேயான தொடர்பை குழுவில் விவாதித்தார்கள்.
இதைத்தொடர்ந்து மனதெளிநிலை (Mindfulness) சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
பி.கீர்த்தனா
