வரலாற்றில் இன்று (பிப்ரவரி 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 28 (February 28) கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது.

628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

1525 – அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

1700 – சுவீடனில் இன்று மார்ச் 1. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படையினர் எல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

1784 – ஜோன் உவெசுலி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.

1844 – பொட்டாமக் ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

1867 – வத்திக்கானுக்கான தூதர்களுக்கான நிதிகளை அமெரிக்க காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.

1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.

1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.

1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

1948 – கானாவில் பிரித்தானியக் காவல்துறையினன் ஒருவன் முன்னாள் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒன்றை நோக்கிச் சுட்டதில் மூவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அக்ரா நகரில் பெரும் கலவரம் மூண்டது.

1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1954 – என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

1980 – அந்தாலூசியா பொது வாக்கெடுப்பு மூலம் தன்னாட்சியை அங்கீகரித்தது.

1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.

1997 – வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.

1997 – ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான காம்மா கதிர்கள் 80 செக்கன்களுக்கு பூமியைத் தாக்கியது. இதன்மூலம் காமா கதிர் வெடிப்புகள் பால் வழிக்கப்பால் நிகழ்கின்றன என எடுத்துக்காட்டப்பட்டது.

1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.

2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.

பிறப்புகள்

1893 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. 1984)

1901 – லைனசு பாலிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)

1904 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005)

1921 – தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (இ. 1982)

1926 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)

1927 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (இ. 2010)

1928 – டி. ஜெ. அம்பலவாணர், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997)

1929 – பிராங்க் கெரி, கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்

1929 – ரங்கசாமி சீனிவாசன், இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்

1930 – லியோன் கூப்பர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)

1931 – சி. நாகராஜா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008)

1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)

1948 – பேர்ணாடெற்றே பீட்டர்சு, அமெரிக்க நடிகை, பாடகி

1953 – பால் கிரக்மேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1957 – ஜான் டர்டர்ரோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1969 – உ. ஸ்ரீநிவாஸ், தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)

1976 – அலி லார்டேர், அமெரிக்க நடிகை

1979 – ஸ்ரீகாந்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1980 – பத்மபிரியா ஜானகிராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1790)

1936 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899)

1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884)

2003 – மேஜர் சுந்தரராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நடிகர் (பி. 1925)

2006 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1920)

2010 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920)

2016 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)

2016 – குமரிமுத்து, தமிழ்த் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)

கலேவலா நாள், (பின்லாந்து)

தேசிய அறிவியல் நாள்

ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)

One thought on “வரலாற்றில் இன்று (பிப்ரவரி 28)

  1. நாடு, மனிதர்கள் பெயர்களை அசல் முறையில் தெரிவிக்கவும். (உம்) சிவாஜி..என்பது சிவாசி என எழுதக்கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!