இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 28-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மாசி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.02.2025 சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.17 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று மாலை 03.04 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்வீர்கள். சிக்கலான விஷயங்களை சுமூகமாக முடிப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அள்ளுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட வெளியூர்ப் பயணங்களில் பலனடைவீர்கள். நீண்டகாலமாக இருந்த உடல் பிரச்சனை நீங்கி மன நிம்மதி பெறுவீர்கள்.

மிதுன ராசி அன்பர்களே!

என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள். குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். நீண்டகாலமாக மழலைச் செல்வத்திற்கு ஏங்கியவர்கள் நல்ல செய்தி பெறுவீர்கள். பணியாளர்கள் உழைப்பிற்குத் தகுந்த மரியாதையும் ஊதியமும் பெறுவீர்கள். .ஆன்மிகப் பெரியோர்களை சந்திப்பீர்கள்.

கடக ராசி அன்பர்களே!

வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் அலட்சியமாக திரும்பாதீர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். புதிய நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிறியோரின் பழக்கங்களால் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம நாள்.

சிம்ம ராசி அன்பர்களே!

அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அமைதி இழந்த குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள். புதிய வாகனம் வாங்க முடிவெடுப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலில் இடைவெளி இல்லாமல் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்ப்பீர்கள். எதிர்கால நலன் கருதி நிலத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை தக்க சமயத்தில் பயன்படுத்துவீர்கள்.

கன்னி ராசி அன்பர்களே!

நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் பாதிக்கப்படுவீர்கள். மாமியார் மருமகள் சண்டையால் மன நிம்மதி கெட்டு தூக்கத்தை தொலைப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நெருக்கமான உறவுகளில் ஏற்பட்ட விரிசலால் வேதனைப்படுவீர்கள். யாரிடமும் கோபமாகப் பேசாதீர்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே!

கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பார்ப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல பலனை பெறுவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள்‌. நினைத்தது நிறைவேற நண்பர்களிடம் உதவி கேட்பீர்கள். ஆஸ்துமா நோயால் அவதிப்படும் தாய்க்கு ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்க நிலையை காண்பீர்கள். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையைக் கோட்டை விட்டு விடாதீர்கள்.

மகர ராசி அன்பர்களே!

வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் சாதனை படைப்பீர்கள். பங்குப் பரிவர்த்தனை தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். காதலியோடு உல்லாச பயணம் செல்வீர்கள். வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அதையும் தாண்டி வரும் அவமானத்தால் மனம் சுருங்குவீர்கள். வேலை விஷயமாக ஓய்வில்லாமல் அலைவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். வாகனக் கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

மீனராசி அன்பர்களே!

ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனைகளில் சிக்க மாட்டீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் சங்கடப்படுவீர்கள். சகோதரியின் திருமணத்தை நடத்த மும்முரமாக வரன் தேடுவீர்கள். மனக் கவலை நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!