சூடிக் கொடுத்தசுடர்க்கொடி
சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி
வெண்டளை விரவிய
எட்டடிக் கொச்சகம்
மூடி மறைக்கும்
முனங்கலில் மூழ்காமல்
தேடித் திரியும்
திகைப்பினில் தேயாமல்
ஓடி ஒளியும்
உணர்வினில் ஒன்றாமல்
வாடி வதங்கி
வருந்திடும் வாய்ச்சொல்லார்
கோடிக் கவிகள்
குவித்திடும் கூர்மைக்கு
நாடி வருவீர்
நறுந்துணை நாமேற்போம்
சூடிக் கொடுத்த
சுடர்கொடிச் சொல்லாலே
பாடிப் பணிவோம்
பசுவென எம்பாவாய்!
ஆடிப்பூரத்தில்
ஆண்டாளின் பேரருள்
அனைவருக்கும்
அமையட்டும்
வாழ்க வளமுடன்
வளங்கள் நிறைவுடன்
குகனருள் கூடட்டும்
முனைவர்
பொன்மணி சடகோபன்
1 Comment
“அருமை. “சூடிக் கொடுத்தாள்;
பாவை படித்தாள்;
சுடராக எந்நாளும்
தமிழ் வானில்,
ஜொலித்தாள்…
கவியரசு பாடலும் நினைவில்..