மொட்டை கடுதாசி

-மொட்டை கடுதாசி

———–சிறுகதை by ரவிகீதா

பிரியமான ராமுவுக்கு ,

சென்ற முறை நீ அனுப்பிய கடிதம் கண்டு ரொம்ப சந்தோஷம்.

இப்போ இங்கு யாவரும் நலம்.

எனக்கு மட்டும் தேஹம் தளர்ந்து கிடக்கிறதானாலே சீர்காழியில் இருந்தும் உன் பெண் சீமந்தகத்திற்கு வர முடியாமல் போய்விட்டது..

ஆனாலும் என் ஆசீர்வாதம் அவளுக்குஎப்போதும் உண்டு.

உன் தோப்பனார் ஸ்ரீ மான் புண்ணி யகோடியும் உன் தாயாரும் எனக்கும் தாய் போன்றவளுமான மாதா விசாலாட்சி க்கும் என் நமஸ்காரம்.

உனக்கு அத்தையும் என் பிரியசகியுமான மங்களாம்பாள் காலமான சமாசாரம் உனக்கு தெரிவிக்க நான் மெத்த பிரயத்தனம் செய்தும் உனக்கு தெரிவிக்க முடியாமற் போனதொரு துர்பக்கிய நிலையைஎன்னவென்று சொல்லி நான் துக்கிப்பது…..

நிற்க,

இப்பவும் என் பிரியசகியும் என் மனையாளும் ஸ்ரீமதி மங்களாம்பாள் காலமாகி

மிந்தாநாள்,வருஷாப்த்திகமும் அதனுடனே செய்விக்க வேண்டிய ஸுபஸ்ரீ கரணங்களும் தான தர்ம அனுஷ்ட்டானங்களும் ஆத்து வாத்தியார் செய்வித்து முடித்து விட்டப்படியால்….. எங்காத்து வழக்கப்படி சுமங்கலி பொண்டுகள் அதன் கூடவே பராக்கிராமமாக நடந்தேறியது.

சென்ற வருடம் என் பேர பிள்ளைக்கு திருப்பதியில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு அந்தத் திருக்காரியம் பல க்ஷிணங் களுக்கிடையே நடைபெறாமல் போய்விட்டபடியாலும் குழந்தைக்கு தலையில் ஜடா முடிமாதிரி நீண்டு வளர்ந்து விட்ட படியால் உள்ளுர் நாவிதபண்டிதர் கைங்கரியத்தில் சிகையை சிரைத்து பத்திரமாக ஒரு காகிதக சிரட்டையில் முடித்து வைத்து இருக்கிறது.

நீ இன்னுஞ்சில நாட்களில் நீ பெருமாளை சேவிக்க திருப்பதி பட்டிணம் போகப் போவதாக தெரிவித்து இருந்த படியால் இந்த கடிதாசியில் சிரைத்து வைத்த சிகையை அனுப்பிவைக்கிறேன்.

நீ சிரமம் பார்க்காமல் திருப்பதியில் சேர்த்து விட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பின்னாடி முடியும் போது நாங்கள் குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு கொள்ள அபிப்பிராயம்.

ஷேமம்.

சீமாச்சு.

story by –ரவிகீதா

4 thoughts on “மொட்டை கடுதாசி

  1. கதையின் பெயர்
    மொட்டைகடுதாசி என்று தலைப்பில் வரவேண்டும்.
    எழுதியவர்
    ரவிகீதா என்றும் போட வேண்டுகிறேன்
    ரவி கீதா

  2. Super Sh Ravi Geetha sir.. mottai kaduthasi padikum tharunathai seevi vidumbadi irundhathu. Jada mudiyum illai, sikkalum illai. Importantly no Vazhukai…H(a)ippy thaan.

  3. அந்தக்கால போஸ்ட் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதிய கடிதத்தைப் படித்த உணர்வு. மனைவி காலமாகி ஒரு வருஷமானதைக் கூட யதார்த்தமாகச் சொல்லியது அருமை. அமெரிக்காவில் போனது முடியை அங்கே கோவில் முன்னால் கத்தரித்து எடுத்துண்டு வந்து திருப்பதியில் கொண்டு சேர்த்தோம். காலங்கள் மாறினாலும் திருப்பதி மொட்டை போடுவது மாறுவதில்லை. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!