பிருந்தா காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )என்பார்வை
பிருந்தா
காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )
என்பார்வை
பிருந்தா
.
பிருந்தா (தெலுங்கு )
காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்.. திகிலூட்டும் பிருந்தா இணைய தொடரின்( Sony LIV )Web Series
என்பார்வை
பிருந்தா
.
நடிகை த்ரிஷா, முதன் முதலாக இணையத் தொடரில் நடித்துள்ளார். பிருந்தா என பெயரிடப்பட்ட இந்த தொடரில்,: த்ரிஷா கிருஷ்ணன், இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மௌலி மற்றும் பலர் நடித்துள்ளனர்
. சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கி உள்ள இந்த வெப் தொடருக்கு சக்தி காந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு நகரில் ஒரு கூர்மையான போலீஸ் அதிகாரியாக பிருந்தா (த்ரிஷா கிருஷ்ணன்) இருக்கிறார்.
. இந்த நேரத்தில், அந்த ஏரியாவில் ஒரு உடல் கிடைக்கிறது. இது தற்கொலை என போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் முடிக்கப்படுகிறது. ஆனால், பிருந்தாவின் உள்ளுணர்வு இது தற்கொலை இல்லை என்று சொல்ல. அந்த உள்ளுணர்வை நம்பி, அவள் தோண்டி தோண்டி விசாரிக்க அது ஒரு கொலை என்பது தெரிய வருகிறது.
இதுகுறித்து உயர் அதிகாரியிடம் அவள் சொல்ல , அதை காதில் வாங்கிக் கொள்ளாத நிலையில், அதே போன்று அடுத்தடுத்து கொலைகள் நடக்க, இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி த்ரிஷாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த தொடர் கொலை குறித்து பிருந்தா ஆழமாக ஆராயும்போது, கொலைக்கான காரணம், கொலையாளியின் நோக்கம் என, பல உண்மைகள் உடைகின்றன. இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது யார்? இந்த வழக்கில் பிருந்தா ஏன் இவ்வளவு ஆழமாக கவனம் செலுத்த காரணம் என்ன? என பல கேள்விகளோடு பிருந்தா தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடும் முக்கால் மணி நேரமாக உள்ளது. இதில் முதல் நான்கு எபிசோடுகள் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் விறுவிறுப்பாக இருந்தன. ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒவ்வொரு சஸ்பென்சை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்து ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது என சொல்லாம்.
: நடிகை த்ரிஷா முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடரில் வரும் பிருந்தா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல, அமைதியான, நேர்மையான, புத்திசாலியான ரோலில் முத்திரை பதித்துள்ளார். அதே போல,உடன் பணியாற்றும் ரவீந்திர விஜய்யும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனந்த் சாமியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அவரது சித்தரிப்பு அழுத்தமானது, அவரது வெளிப்பாடுகள் தொடருக்கு பலமாக அமைந்துள்ளது எனலாம்.
வன்முறை காட்சிகள், ரத்தம் போன்றவை அப்பட்டமாக இந் த தொடரில் காட்டப்பட்டுள்ளதால், குழந்தைகள் இதைப்பார்க்கும் வகையில் இல்லை.
பெரும்பாலான எபிசோட்கள் விறுவிறுப்பாக சென்றாலும், சில எபிசோடுகள் மிக ஸ்லோ.
ஆரம்ப அத்தியாயத்தில் உள்ள முன்னுரை நம்மை ஒரு எதிர்பார்ப்புக்கு தள்ளுகிறது
. 1990 களின் நடுப்பகுதியில், காட்டில் உள்ள ஒரு கிராமத்தில், கோபமடைந்ததாகக் கூறப்படும் தேவியை சமாதானப்படுத்த ஒரு இளம் பெண் நரபலி கொடுப்பதாக காட்சி
சிறுமியின் அண்ணன் மற்றும் அம்மாவின் அழுகை , கிராமத்தில் யாரும் மூடநம்பிக்கை, சடங்கு முறைகளை கேள்வி கேட்பதில்லை
இறுதி எபிசோடுகளில் இயக்குனர்
. சமகால சமூகத்தில், மதங்கள் கடந்து, கடவுளின் பெயரால் தொடர்ந்து நடக்கும் நடைமுறைகளை சொல்லி
, இத்தகைய பழக்கவழக்கங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு என்ன நேரிடும் என்பதை ஆராய்கிறார். ஒரு அடைக்கலமான குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட ஒருவர், சில போராட்டங்களுடன், தார்மீக திசைகாட்டியின் வலது பக்கத்தில் இருக்கக்கூடும்என்கிறார்
. விளிம்புகளில் விடப்பட்டு, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டால், இன்னும் சிலர் தங்கள் ஆற்றலை இருண்ட மண்டலங்களுக்குள் செலுத்தலாம். நம்பிக்கையின் பெயரால் நடைமுறைகளுக்குப் பழிவாங்குவதாக கதையை கொண்டு செல்வது மூலமாக
பிருந்தாவின் பின்னணியை பலப்படுத்துகிறார்
கதைக்களம் இது என்ன மாதிரியான கதை என நம்மை யூகிக்க வைக்க முடியல.சைக்கோ திரல்லர் போல தோன்றினாலும் அது இல்லை என நகர்கிறது
குற்றவாளிகள் யாரென தெரிந்தாலும் அவர்களை பிடிக்க ஆதாரம் இல்லாததால் பிருந்தா இறுதி எபிசொட் வரை பயணிக்க வைக்கிறாள்
அண்ணன் தங்கை சென்டிமண்ட் வேற இருக்கு
திரிஷா தவிர தாக்குராக ஆனந்த் சாமி சுருதி கச்சிதமாக இருக்கிறார், அதே போல் இந்திரஜித் சுகுமாரன் கபீர் ஆனந்தாக மிக சிறப்பு
, பிருந்தா அனைவரையும் கவரும், க்ரைம் த்ரில்லரான இருக்கு,, இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கலா ஒரு மிக சிலிர்ப்பான அனுபவத்தை கொடுத்து இருக்கிறார்.என சொல்வேன்
ஒளிப்பதிவாளர் தினேஷ் பாபு, இசையமைப்பாளர் சக்தி காந்த் கார்த்திக் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா ஆகியோரை உள்ளடக்கிய ஒரு திறமையான தொழில்நுட்பக் குழு பிருந்தாவுக்கு அதன் நேர்த்தியை அளிக்கிறது .
சில யூகிக்கக்கூடிய காட்சிகள் இருந்தபோதிலும், பிருந்தா தெலுங்கு வெப் சீரிஸ் நம்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.
.
, முதல் சில எபிசோட்களின் முன்னுரைகள் புள்ளிகளை இணைத்து, யாருக்கு எதி யார் போட்டியிடுவார்கள் என்பதை யூகிப்பதை எளிதாக்குகிறது. ஆனால் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் குற்றத்தின் வலையில் சிக்கலை சேர்த்த்து தொடரை விறு விறுப்பா கொண்டு செல்கிறது
சோனி லிவ்வில் வெளியாகி உள்ள இந்த தொடரை பார்த்து இந்த வார வீக் எண்டை கொண்டாடுங்கள்
பிருந்தா தற்போது சோனி எல்ஐவியில் ஸ்ட்ரீமிங் செய்கிறார்
by #umatamiz#minkaithadi