மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் என்பது பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும் பாலின சமத்துவத்திற்கு தொடர்ந்து போராடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய நாளாகும். 1900 ஆண்டுகளில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பெண்களுக்கான சம உரிமையும் சுயமரியாதையும் வேண்டும் என்ற உணர்வு வித்திட்டது. 1911 இல் ஆஸ்திரியா டென்மார்க் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து பெண்கள் முதன்முதலில் மகளிர் தினத்தை கொண்டாடினர். ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆண்டுகளில் பெண்கள் அறிவியல் அரசியல் மற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சம அங்கீகாரம் கிடைக்க வேண்டி சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. மகளிர் தினத்தை கொண்டாட தனிநபர் அமைப்புகள் கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடத்துகிறார்கள் மேலும் பள்ளிகள் கல்லூரிகள் பணியிடங்கள் மகளிர் அருமையான பங்களிப்புகளை சிறப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றன மகளிர் தினம் ஒரு திருவிழாவாக இருந்தாலும் அது பெண்கள் உலகெங்கும் எதிர்கொள்ளும் சவால்வுகளை நினைவூட்டுவதற்கும் பயன்படுகிறது. ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பு பாலின வேறுபாடுகளை மீறி அனைவரும் செழிக்க கூடிய எதிர்காலத்தை உருவாக்க ஆவண செய்கிறது.
மகளிர் தினம் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கான தளமாகும் இன்னும் சமத்துவம் வேண்டிய இடங்களை மையமாக வைத்து நடவடிக்கைகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது பெண்களின் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையான பங்களிப்புகள் அறிவியல் அரசியல் கல்வி மருத்துவம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன பல பிரச்சனைகள் மற்றும் சவால்களைத் தாண்டி வெற்றி கண்ட பெண்களை போற்றும் என்னால் உலகளாவிய செயல் திறன்களின் அடையாளமாக விளங்குகிறது.
உலகம் முழுவதும் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களை எடுத்துரைக்கும் நெடுங்கால பணியை அடையாளப்படுத்துகிறது.
யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம் சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய்
– Divanya பிரபாகரன்.

இன்று நாம் இங்கே பெண் சாதனை யாளர் சிலரை பற்றி பார்ப்போம்.
1.திருமதி சசிகலா அவர்களை பற்றி பார்ப்போம்
இவருடைய பெயர் சசிகலா. இவர் பிகாம் மற்றும் மாஸ்டர்ஸ் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார்.
இவருடைய கருத்து பெண்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அது அவர்களது குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். இவர் சஷ்டி என்கின்ற சிறு ஸ்தாபனம் நடத்தி வருகின்றார். ஊத்துக்குளி வெண்ணெய், நெய், வத்தல்,பப்படம், இன்ஸ்டன்ட் சமையல் கலவை பொடிகள், ஊறுகாய் ஊறுகாய், இனிப்பு பலகாரங்கள், மற்றும் சீர் பட்சணம் ஆர்டரின் பெயரில் செய்து தருகின்றார். சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார்கள். சென்னையை தாண்டி உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தியா முழுவதும் கொரியர் மூலம் அவர்களது ஆர்டர்களை கொண்டு சேர்க்கின்ற து. அயல்நாடுகளில் உள்ள அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சிப்மட் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கப் படுகிறது. இல்லத்தரசி ஆகிய இவர் த னது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு எப்படி உணவு சுவையான முறையில் கொடுப்பது அதுபோலவே வாடிக்கையாளர்களுக்கும் சுவையான தரமான உணவுப் பொருட்களை கொடுத்து வருகின்றார்கள். வாடிக்கையாளரின் திருப்தி மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஆதரவினால் மிகவும் மேலும் வேகமாக இயங்கிக் கொண்டிருக் கின்றார்.மேலும் விவரங்களுக்கு
வெப்சைட். Www.Shasti food product. Com. மூலம் தொடர்பு கொள்ளலா ம்.
மொபைல்: 9363032727

2.
நளினி,இவர்
மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தினசரி தமிழ் நாளிதழ்களில் வீடு வீடாகச் சென்று கொடுக்கும் வேலை செய்து வருகிறார் அதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கும் த னது பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் போதுமானதாக இல்லாததால் சுய உதவி குழு மூலம் அழகுக்களை நிபுணராக பயின்று தேர்ச்சி பெற்று அதில் 15 வருடங்களுக்கு குறையாமல் அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகின் றார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளின் நல்ல முறையில் படிக்க வைக்க இந்த தொழில் உதவிகரமாக உள்ளது என்கிறார். இவரது முதல் மகள் மருத்துவத்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் இரண்டாவது மகள் +2 படித்து வருகிறார்
பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இல்லாமல் இதுபோன்று சிறு சிறு பணிகளை சுயமாக செய்து வந்தால் குடும்ப பொருளாதாரம் உயரும் என்பது கருத்தாகும் என்கிறார்

3.மதுவந்தி
மதுவந்தி ஜெய்.இவர் வேலூர் இல்லத்தரசி மற்றும் பெண் தொழில் முனைவோர். கடந்த 15 வருடங்களாக வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் ஆக மூலிகை குளியல் பொடி நலங்கு மாவு மூலிகை ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக் தயாரிப்பு விற்பனை செய்ய ஆரம்பித்தார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளதால் அவள் விகடன் மூலம் சிறு தொழில் செய்ய ஆர்வம் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக ரூபாய் 200 முதலீட்டில் மூலிகை ஹேர் ஆயில் ஹரிணி ஹெர்பல்ஸ் என்ற பெயரில் தொடங்கினார்.பல இன்னல்கள் அவமானங்களை கடந்து 15 வருடங்காலமாக மூலிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன் என்கிறார். அது மட்டும் இன்றி கோல்ட் கவரிங் நகைகள் புடவை குர்தி ஆகியவை விற்பனை செய்ய பின்பு படிப்படியாக உயரர் ந்து தற்பொழுது அமெரிக்கா மொரிஷியஸ் ஜெர்மனி சிங்கப்பூர் லண்டன் நியூ யார் ஆகிய நாடுகளுக்கு குளியல் சோப்பு புடவை கோல்டு கவரிங் நகைகளை ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தார். இதற்கு குடும்ப உறவுகள் குறிப்பாக தனது மகள் உறுதுணையாக உள்ளார் என்றும் வரும் காலங்களில் கடின உழைப்பால் மென்மேலும் உயர விரும்புகிறேன் என தனது எண்ணங்களை மின் கைத் தடி வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார்.

4.
ஜெயசித்ரா
இவரது
கணவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலையை எடுத்து செய்து வருகின்றார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் அவர்களின் நல்லபடியாக படித்து நல்ல நிலையை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இவர் அரும்பாடு பட்டு இந்த தண்ணீர் கேன் சப்ளை செய்யும் சுயதொழிலை செய்து அதன் மூலம் வரும் வருவாயில் த னது பிள்ளைகளை வளர்த்து வருகின் றார். தனது மூத்த மகள் குயின் மேரிஸ் கல்லூரியில் பிகாம் பயின்று வருகிறார். அவர் பென்காக் சிலாட் என்ற தற்காப்பு கலையில் நேஷனல் கோல்ட் மெடல் லிஸ்ட் பெற்றுள்ளார்.மற்ற இரு மகள்களும் டெல்லியில் உள்ள ஒரு கால்பந்தாட்ட கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றுக்கொண்டு அங்கேயே பள்ளி படிப்பையும் படித்து வருகின்றனர். த னது குறிக்கோள் தனது பிள்ளைகள் அவரை போல் சமூகத்தில் அவதிப்படாமல் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதே ஆகும் என்கிறார்.

Super information Tq sir