இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.12.2024)

உலக வயலின் தினமின்று

உலகம் முழுவதும் வயலின் இசை கருவியையும் வயலின் இசை கருவிகளையும் போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற ஒப்பற்ற மற்றும் கேட்கும் நேரத்தில் மனத்திற்கு வருடலை தரும் இசை கருவியை கொண்டாடாமல் எப்படி இருக்க முடியும். வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான ஒரு அமைப்பாகும். இந்த தந்திக் கருவியின் அமைப்பை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிடில் (Fiddle) என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய நாளில் மேலை நாடுகளில் வயலின் மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் இசை நிகழ்ச்சி நடத்தி வயலின் தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இன்பம் துன்பம் எதுவாயினும் இசை எப்போதும் நம் மனதை வருடிக் கொடுக்கும் அதில் முக்கிய பங்கு வகிக்கும் வயலின் தினத்தை கொண்டாடுவோமாக!

லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நாள்

2001ஆம் வருஷம் டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்ற கட்டிடத்தின் மீது பாகிஸ்தானின் ராணுவத்தினரால் பயிற்சியளிக்கப் பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர் . அத்தாக்குதலை நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர. அதில் 8 பாதுகாவலர்களும் ஒரு தோட்டக்காரரும் உயிரிழந்தனர். . இத்தனைக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் வளாகத்தில் நின்றிருந்த எம்.பி.க்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த நேரத்தில் மாநிலங்களவையும், மக்களவையும், 40 நிமிட நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.. இந்தத் தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. அச்சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்பு காவலர்களின் உயிர்தியாகத்தை போற்றும் விதமாக, ஆண்டுதோறும், அவர்கள் உயிரிழந்த பகுதியில் டிசம்பர் 13-ஆம் தேதி மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.

சதாம் உசைன் அமெரிக்க ராணுவப் படையால் கைது செய்யப்பட்ட நாள் 

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன் அமெரிக்க ராணுவப் படையால் கைது செய்யப்பட்டார். பேரழிவு ஆயுதங்களை ஈராக்கில் பதுக்கி வைத்திருந்ததாக அமெரிக்காவால் பொய்யான குற்றம் சாட்டி 2003ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஈராக்கின் மீது கூட்டாக போர் தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றின. ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் தப்பியோடி தலை மறைவானார். . டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் ஹுசைனுக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டது.

ரிச்சர்ட் ஆல்புரூக் நினைவு நாள்

 ரிச்சர்ட் சார்லசு ஆல்பர்ட் ஆல்புரூக் (Richard Charles Albert Holbrooke) – அமெரிக்காவின் ஓர் தலைசிறந்த வெளியுறவு அதிகாரியும் இதழியல் ஆசிரியரும் நூலாசிரியரும் விரிவுரையாளரும் அமைதிப்படை அதிகாரியும் முதலீட்டாளரும் ஆவார். உலகின் இருவேறு பகுதிகளுக்கு வெளியுறவுத் துணைச்செயலராகப் பணியாற்றிய ஒரே அமெரிக்க அதிகாரி என்ற பெருமை இவருக்குண்டு. 1977ஆம் ஆண்டு முதல் 1981 வரை கிழக்காசிய மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் 1994ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஐரோப்பிய மற்றும் கனடிய பகுதிகளுக்கான துணைச்செயலராகவும் பணியாற்றினார். பராக் ஒபாமா அரசில் ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் நாடுகளுக்கானச் சிறப்புத் தூதராகப் பணியாற்றினார். 1993ஆம் ஆண்டு முதல் 1994வரை ஜெர்மனிக்கான அமெரிக்கத்தூதராகப் பணியாற்றினார். முன்னரே வெளியுறவுத்துறையிலும் இதழியல் துறையிலும் பிரபலமடைந்திருந்த போதிலும் இந்தப் பணியில் இருந்தபோது இவரும் சுவீடனின் பிரதமர் கார்ல் பில்ட்டும் இணைந்து 1995ஆம் ஆண்டு போசுனியாவின் உள்நாட்டுப் போரில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்படுத்திய டேடன் அமைதி உடன்பாட்டை அடுத்து உலகளவில் கவனிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு முதல் 2001வரை ஐ.நா அவைக்கான அமெரிக்கத்தூதராக பணியாற்றினார்.

எல்லா பேக்கர் பிறப்பு மற்றும் நினைவு தினம்

1986 கறுப்பின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவர் நார்போரக் நகரில் பிறந்தார். இளம் வயதிலேயே கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறை தகர்க்கப்பட வேண்டும், வெள்ளையர்க்கு நிகராகக் கறுப்பின மக்களும் பார்க்கப்பட வேண்டும் என்று நினைத்தார். 1927ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவுடன் நியூயார்க் நகரில் குடி பெயர்ந்தார். 1940ல் எல்லா ‘இளம் நீக்ரோக்களுக்கான கூட்டுறவுக் கழகத்தில்’ சேர்ந்து கறுப்பின மக்களின் பொருளாதார முன்னேற்றம், அரசியல், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கான முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்தார். 1904ல் கறுப்பின மக்களுக்கான தேசிய முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அதன் செயலாளராகவும் பல்வேறு கிளைகளின் இயக்குனராகவும் பணியாற்றினார். 1946ல் நியூயார்க் நகரப் பள்ளிகளில் கறுப்பினக் குழந்தைகளும் வெள்ளையர் குழந்தைகளுக்கு நிகரான கல்வி கற்பதற்காகப் போராடினார். 1957ல் அட்லாண்டா நகருக்குச் சென்று மார்டின் லூதர் கிங்யின் ‘தென் கிறித்துவர்களின் தலைமை மாநாட்டை’ முன்னின்று நடத்தினார். 1960ல் ‘மாணவ சத்யாகிரக ஒருங்கிணைப்பு சபை’ என்ற அமைப்பை உருவாக்கி வெள்ளையர்க்கு எதிராகச் செயல்படும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். 1957ல் அட்லாண்டா நகருக்குச் சென்று மார்டின் லூதர் கிங்யின் ‘தென் கிறித்துவர்களின் தலைமை மாநாட்டை’ முன்னின்று நடத்தினார். 1986 ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் 13 ஆம் நாள், தன் 83 ஆவது பிறந்த நாளில் காலமானார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அவர் நினைவாகத் தபால் தலை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.

அறிஞர் அல்-பீரூனி நினைவு தினம்

புவியலுக்கு பெரும் பங்காற்றிய மற்றும் நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என்று போற்றப்படும் அறிஞர் அல்-பீரூனி நினைவு தினம் -1048 வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். 1017இல் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பயணித்து இந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களை கூர்ந்து நோக்கி, தாரிக்-அல்-ஹிந்த் (இந்தியாவின் வரலாறு) என்ற நூலை எழுதியதால், இவரை இந்தியவியல் நிறுவனர் என்று பாராட்டப்பட்டார். மேலும் பல இந்தியத் துணை கண்டத்தின் பல நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்கள், சமயப் பழக்க வழக்கங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவை விளக்கும் வகையில் அல்-உஸ்தாத் (“The Master”) என்ற நூலை வெளியிட்டார். மொத்தத்தில் 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் புவி அறிவியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்ததால், அல்-பரூனீயை நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என என்று போற்றப்பட்டார்.

சாமுவேல் ஜோன்சன் காலமான நாள்

டிசம்பர் 13 ஆங்கிலேய இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய ஆங்கிலேயக் கவிஞரும், எழுத்தாளரும், கட்டுரையாளரும், இலக்கியத் திறனாய்வாளரும், வாழ்க்கை வரலாற்றாளரும், இதழாசிரியரும், அகராதியியலாளரும் ஆவார். இங்கிலாந்தின் லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்த ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆனாலும், பண உதவி கிடைக்காமையால், ஓராண்டில் படிப்பை இடைநிறுத்தி, பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றினார். அங்கு அவர் Gentleman’s Magazine என்ற இதழை வெளியிட்டார். 1755 ஆம் ஆண்டில் ஜோன்சனின் ஆங்கில அகராதியை வெளியிட்டார். இவ்வகராதி பெரும் வரவேற்பைப் பெற்றது. 150 ஆண்டுகளின் பின்னர் “ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி” வெளிவரும் வரை, ஜான்சனின் அகராதியே பிரித்தானியாவில் முதன்மை அகராதியாக விளங்கி வந்தது.

பன்னாட்டு நீதிக்கான நிரந்தர நீதிமன்றம்’ என்ற அமைப்பிற்கான ஒப்பந்தம் ஜெனீவாவில் ஏற்கப்பட்ட நாள்

1920 – உலக நீதிமன்றம்’ என்று பொதுவாகக் குறப்பிடப்படுகிற, ‘பன்னாட்டு நீதிக்கான நிரந்தர நீதிமன்றம்’ என்ற அமைப்பிற்கான ஒப்பந்தம் ஜெனீவாவில் ஏற்கப்பட்ட நாள் டிசம்பர் 13. முதல் உலகப்போருக்குப்பின், உலக அமைதியைக் காப்பதற்காக உருவான ‘நாடுகளின் சங்கம்’ என்ற அமைப்பால் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. உண்மையில் ஒரு பன்னாட்டு நீதிமன்றம் தேவை என்பதை 1305இல் பியரி டுபாய்ஸ் என்ற ஃபிரெஞ்சு செய்தியாளரும், 1623இல் எமரிக் க்ரூஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளரும் சுட்டிக்காட்டினர். 1899, 1907 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஹேக் ஒப்பந்தங்களில், இத்தகைய நீதிமன்றம் அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான வரைவும் உருவாக்கப்பட்டது. ஆனாலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்து நாடுகளிடையே நிலவிய கருத்து வேற்றுமையால் இது உருவாக்கப்படவில்லை. ஆனால், ஏதாவதொரு பன்னாட்டு சமாதான அமைப்பு தேவை என்பதை முதல் உலகப்போர் உணர்த்தியது. பன்னாட்டு நீதிமன்றம் அமைக்க, நாடுகளின் சங்கத்திற்கு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை அனுமதி அளித்ததன் அடிப்படையில், 1920 ஜூனில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு, டிசம்பர் 13இல் ஏற்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் முதல் அமர்வு 1922 ஜனவரி 30 அன்று நடைபெற்றது. தங்களுக்குத் தொடர்புடைய வழக்குகளில் தங்களுக்கு வீட்டோ அதிகாரம் வேண்டும் என்ற அமெரிக்காவின் வேண்டுகோள் ஏற்கப்படாததால், அது இந்த நீதிமன்றத்தில் இணையவேயில்லை. முதல் 10 ஆண்டுகளில் இந்த நீதிமன்றம் நிறைய வழக்குகளைச் சந்தித்தது. 1925இல் 210 நாட்கள் செயல்படுமளவுக்கு வழக்குகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 1930களில் உலக நாடுகளிடையேயான உறவுகளில் ஏற்பட்ட பதற்றங்கள், இரண்டாம் உலகப்போர் ஆகியவை இந்த நீதிமன்றத்திடம் வழக்குகள் வராமல் முடக்கின. 1941இலிருந்து 1944 வரை இந்த நீதிமன்றம் கூடவேயில்லை. நாடுகளின் சங்கம் 1946 ஏப்ரல் 18இல் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி இந்த நீதிமன்றம் கைவிடப்பட்டு, அந்த இடம் ஐக்கிய நாடுகளின், பன்னாட்டு நீதிக்கான நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...