ஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்

 ஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்

உணவில் சிக்கன் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு. அதிலும் வருவல் என்றால் இன்னும் தனி சுவைதான். ஒவ்வொரு பகுதிகளிலும் பல வகைகள் இருக்கிறது.

குறிப்பாக தென்னிந்தியாவில் செட்டிநாடு வருவல் என்றாலே, ஒரு அதீதமான ருசி இருப்பது யாராலும் மறுக்க முடியாது. அப்படியே கொஞ்சம் மதுரை பக்கம் வந்தால் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் இன்னுமொரு மகத்துவமான வறுவல் கிடைக்கும்.

அப்படியே இந்தப்பக்கம் பயணித்தால் கோயம்புத்தூரில் கொங்கு பாணியில் ஒரு வறுவல் கிடைக்கும். அப்படியே தென் மாவட்டங்களுக்கு சென்றால், திருநெல்வேலியில் காரசாரமாக ஒரு சிக்கன் வறுவல் கிடைக்கும்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுவையோடு கிடைப்பதை மறுக்க முடியாது. வட இந்தியாவில் தந்தூரி என்ற ஒரு புகழ் பெற்ற உணவு வகை இருக்கிறது. அதில் அடுப்பை பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட ஒரு நான்கடியில் தோண்டி, அதனுள் நெருப்பு உருவாக்கி, அந்தத் அனலில் வாட்டி எடுக்கப்படுகின்ற சுவையான உணவு வகைகள் இருக்கின்றன.

அதில் ரொட்டி, பராத்தா, நாண் போன்ற வகைகள், எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படுகின்ற உணவில் மிகவும் ருசியானது.

அதில் சிக்கனை மசாலை போட்டு வாட்டி எடுக்கப்படுகின்ற ஒரு சுவைமிகு உணவும் அதில் பிரசித்தி பெற்றது.

அது குறிப்பாக ஓட்டல்களில் அதிகமாக அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தந்தூரி அடுப்பில் தயாரிப்பு செய்து நமக்கு அளிப்பார்கள்.

அதை வீட்டில் செய்தால் எப்படி இருக்கும் அப்படிப்பட்ட ஒரு உணவுவகைகளை யூடியூபில் உங்களுக்காக பதிவேற்றம் செய்ய பட்டு இருக்கிறது இதை பார்த்து நீங்கள் சமைத்து உங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவார்கள் என்று நம்பிக்கையோடு,

உங்கள் மின் கைத்தடி

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...