இன்றைய தினப்பலன்கள் (18.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (18.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உடலமைப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். செய்தி நிறுவனங்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : ஆர்வம் ஏற்படும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம் :

கலை தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். புதிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.

மிதுனம் :

இரவுநேர வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மறந்து போன சில பொருட்கள் பற்றிய நினைவுகள் ஏற்படும். சுயதொழில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாகும். சேவைப் பணியில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப சன்மானம் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : தனலாபம் உண்டாகும்.

கடகம் :

தொழில் நிறுவனங்களை உருவாக்குவது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகளின் மூலம் மதிப்புகள் உயரும். மனைவிவழி உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மதிப்புகள் உயரும்.
ஆயில்யம் : முடிவுகள் சாதகமாகும்.

சிம்மம் :

நீண்டதூர பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பணப்புழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். தாயிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரம் : கவனத்துடன் செயல்படவும்.
உத்திரம் : ஆதரவான நாள்.

கன்னி :

நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியின்மைக்கான சூழ்நிலை உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம் :

எந்தவொரு செயலையும் வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆபரணம் தொடர்பான தொழில்களில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.
சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் :

தந்திரமான செயல்பாடுகளின் மூலம் சில காரியங்களை அலைந்து நிறைவேற்றிக் கொள்வீர்கள். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கவனத்துடன் கேட்கவும். கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். குழந்தைகளிடம் கனிவுடன் பழகவும். வீடு மாற்றம் தொடர்பான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : காரியங்கள் நிறைவேறும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : கனிவுடன் பழகவும்.

தனுசு :

சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : வேறுபாடுகள் நீங்கும்.
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.

மகரம் :

கால்நடைகளின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் இருந்துவந்த தடைகள் அகலும். கிடைக்கும் சிறு முதலீடுகளையும் நல்ல முறையில் பாதுகாத்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : தடைகள் அகலும்.

கும்பம் :

மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அண்டை வீட்டாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் அமையலாம். தினசரி வியாபாரிகளுக்கு சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் மேம்படும்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

மீனம் :

சகோதரர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். இயந்திர பணியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தோட்டம் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அரசு தொடர்பான அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். ஆயுதம் தொடர்பான புதிய பயிற்சிகளை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...