இன்றைய தினப்பலன்கள் (19.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (19.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

நெருங்கிய உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தொண்டையில் ஏற்பட்டிருந்த சில உபாதைகள் குறையும். பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

ரிஷபம் :

திட்டமிட்ட காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். நண்பர்களிடத்தில் எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். கற்ற வித்தைகளின் மூலம் சில வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமாக சில முடிவுகளை உறுதி செய்வீர்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம் :

மனதில் புதுவகையான சிந்தனைகள் தோன்றும். எதிலும் திருப்தி என்பது இல்லாமல் செயல்படுவீர்கள். பிரியமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நெருப்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். செயல்திறனில் வித்தியாசமான அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : விருப்பங்கள் நிறைவேறும்.
புனர்பூசம் : கவனத்துடன் இருக்கவும்.

கடகம் :

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். நெருக்கமானவர்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் நேரிடலாம். வாதம் புரிவதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : நெருக்கடிகள் நேரிடலாம்.
ஆயில்யம் : எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம் :

அணிகலன்கள் சேர்க்கைக்கான தனவரவு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். கலைஞர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நலீ ம்
மகம் : தனவரவு உண்டாகும்.
பூரம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் : மனவருத்தங்கள் நீங்கும்.

கன்னி :

அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நயமாகப் பேசுவதன் மூலம் பாக்கிகள் வசூலாகும். பணிபுரியும் இடங்களில் சில ஏற்ற தாழ்வுகள் தோன்றி மறையும். தெய்வீக ஈடுபாடு மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சித்திரை : தொடர்புகள் அதிகரிக்கும்.

துலாம் :

வியாபாரத்தில் செய்யும் புதிய அதிரடியான மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்துவது மேன்மையை உண்டாக்கும். மனதில் இருந்துவந்த பழைய சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் :

முன் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். இனம் புரியாத கவலை மற்றும் பய உணர்வினால் சோர்வு உண்டாகும். திறமைக்கான அங்கீகாரம் காலதாமதமாகும். மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
அனுஷம் : சோர்வு உண்டாகும்.
கேட்டை : பழிச்சொல் ஏற்படலாம்.

தனுசு :

தொழிலில் கூட்டாளிகளால் ஆதரவான நிலை உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணியில் இலாபம் உண்டாகும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திராடம் : புதிய நட்பு கிடைக்கும்.

மகரம் :

வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். பெண் தோழிகளால் ஆதாயம் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : சுமூகமான நாள்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

கும்பம் :

பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இலாபகரமான முடிவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : இலாபகரமான நாள்.
சதயம் : ஆதாயம் ஏற்படும்.
பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

மீனம் :

வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் நன்மை உண்டாகும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். திடமான சிந்தனைகளின் மூலம் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். பட்டப்படிப்பு தொடர்பான செயல்பாடுகள் மேம்படும். உறவினர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : தெளிவு உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...