போற்றுவோம் பெண்மையை…………!
பெண்கள் அனைவரும் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறி நாம் கேட்டு இருக்கின்றோம் ஏன் நாமும் அதை சொல்லி ரசித்திருக்கின்றோம் ஆனால் ஒரு சில இடங்களின் மின்னலை பார்க்க துடிக்கும் கண்களில் நீர் சுரப்பதை போல் பெண்கள் துடித்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது
ஆம் பிறந்த நொடியே பெண்களுக்கு நிபந்தனைகளை ரத்தத்தில் கலந்து விடுகிறார்கள் , இவ்வளவு ஏன் பெண் குழைந்தைகள் வளர வளர கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஒரு அரக்கனும் உடன் வளர்கிறான். ஆண் பிள்ளைகள் பக்கம் பாக்கவே கூடாது, இங்கு செல்ல கூடாது அங்கு செல்ல கூடாது அதிகமாக பேச கூடாது , அப்பாவின் முன் கூட உட்கார கூடாது அட பிடித்த உணவை கூட அதிகம் சாப்பிட கூடாது அசைவ உணவை ஹய்யையோ சொல்லவே வேண்டாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது இன்னும் பல உண்டு இதை யார் தான் உருவாக்கினார் என்பது ஆதி காலத்தின் முதல் இன்று முறை ஒரு கேள்வி குறியே ?
இப்படி கூடாது என்பது நம்புடன் நாள் தோறும் நமது இன்னொரு நிழலை பயணித்து கொண்டுதான் கடக்கிறது. ஆம் பெண்கள் நாட்டின் கண்கள் ஆனால் அவர்களுக்கு கண் இருளில் தான் இருக்கிறது. சாதித்த பெண்களின் வாழ்க்கையிலும் இந்த கட்டுப்பாடே உடைக்க முடியாமல் உடன் கூடி செல்பவர்கள் தான் பலர், சாதாரணமாக பெண்கள் மிகவும் பலகினமானவர்கள் என்று கூறுவார்கள், அம்மா வீட்டில் மகளை வாழும் போது அவள் தான் அந்த வீட்டிற்க்கு ராணி கண்களில் இருக்கும் கருவிழியின் கருமை கூட அவளை பார்த்து நடுங்கும் அளவுக்கு தைரியம் கம்பீரம் இதனை போர்த்தி கொண்டு இருக்கிறாள்.
அதே கணவன் புகுந்த வீடு என்று ஆனதும் தனது நட்பு வட்டம் மட்டுமல்லாது சின்ன சின்ன சந்தோஷங்களையும் அவள் தொலைத்து விடுகிறாள். அதற்காக திருமணம் தண்டனை என்று நான் சொல்லவில்லை . அம்மா வீட்டில் காபி மேஜை மீது கொஞ்சம் சத்தத்துடன் வைத்தால் போதும் அவளவுதான் நான் என்ன பணிபெண்ணா என்று ஏக வசனம் சிவாஜி சார்ரே திரும்பி பார்க்கும் அளவுக்கு பேசுவோம் . ஆனால் புகுந்த வீட்டில் கணவன் மாமியார் மற்றும் புது உறவுகள் யாரேனும் காபியா நீயே போட்டுக்க சொல்லும் போது கண்களில் நம்மை அறியாது கண்ணீர் தாண்டவமாடும் இது பெண்களுக்கு மட்டுமே புரிந்த வலி.
பலகினமானவளும் பெண் தான் பல ஆயுதமாகுபவளும் பெண் தான் போற்றுவோம் பெண்மையை…………!