வரலாற்றில் இன்று – 01.07.2020 டாக்டர் பி.சி.ராய்
மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜூலை 1ஆம் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மருத்துவர் பி.சி.ராய் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பீகாரில் உள்ள பான்கிபூரில் பிறந்தார்.
பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2வது முதல்வராக பதவி வகித்தார். இவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமில்லாமல், சிறந்த மருத்துவராகவும் சேவை புரிந்துள்ளார்.
இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப்படுகிறது. இவர் தனது 80ஆவது வயதில் (1962) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி வேல்ஸ் இளவரசி டயானா பிறந்தார்.
1929ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா பிறந்தார்.
1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமரான சந்திரசேகர் உத்திர பிரதேசத்தில் பிறந்தார்.
2002ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி நிறுவனத்தின் வாக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.