இறைவனின் கோபம்..!

புழுவின் கோபம்
திமிர்தலோடு சரி…
பறவையின் கோபம்
கீறுதலோடு சரி…
மிருகத்தின் கோபம்
முட்டுதலோடு சரி…
மனிதனின் கோபம்
அன்றோடு சரி….
இறைவனின் கோபம்
என்று முடியுமோ..?

இறைவா….!

உன் கோபத்தின் உச்சம்-
கோயிலை மூடினாய்…
மசூதியை மூடினாய்..
ஆலயத்தை மூடினாய்…
வீடுகளை மூடினாய்….
உலகையே மூடினாய்…!

ஆம்;

உழைப்பை நிறுத்தினாய்….
ஊதியத்தை நிறுத்தினாய்…
பழகுதலை நிறுத்தினாய்…
ஒருவரை ஒருவர்-
பார்த்தலையும் நிறுத்தினாய்..
மொத்தத்தில்-
இயக்கத்தையே நிறுத்தினாய்…!

இறைவனே…!
தவறுதான்…!

ஆணவம் அடைந்தோம்..
கர்வத்தில் மிதந்தோம்…
உண்மையை மறந்தோம்…
நன்மையை மறந்தோம்….
பொதுநலம் மறந்தோம்….
சுயநலம் மிகுந்தோம்…
தவறுதான்…!

இறைவா….!

புனிதம் துறந்தோம்…
மனிதம் மறந்தோம்…
ஊரை மறந்தோம்..
உறவை மறந்தோம்…
பெற்றோரையே-
மதிக்க மறந்தோம்..
இறைவா உன்னையே-
துதிக்க மறந்தோம்…!

தவறுதான்….
தவறேதான்…!

கூட்டுக்குள் முடங்கிய
புழுவினைப் போலே
வீட்டுக்குள் முடங்கினோம்..

கண்ணுக்குத் தெரியா இறைவனே…!
உள்ளுக்குள் எங்களை சிறை வைத்தாயே….
மண்ணுக்குள் எங்களைப்
புதைத்தது போலே….!

இறைவா…!

இதுபோல தண்டனையை
நீ தந்ததில்லை…
முந்தைய
இதுவரை கண்டதில்லை…!

உணர்கிறோம்…
கொரோனாவின்காரணத்தை
உணர்கிறோம்…

எம்–
பாவத்தை மன்னித்துக் கொள்….!
உன்-
கோபத்தை முடித்துக் கொள்..!

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...