வாசமில்லாத சாமந்தியில் வருவாய் மணக்கிறது:
வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ:
வாசமில்லாத வெண் நிற சாமந்தி பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மாணிக்கம் கூறியதாவது:வாசமில்லாத வெண் நிற சாமந்தி, மூன்று மாத பூப்பயிர். இந்த பூச்செடியை, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களுக்கு, வருவாய் இல்லாத பனிக்காலங்களில், சாகுபடி செய்வோம். இது, 45வது நாள் பூ பூக்க ஆரம்பிக்கும்.
தொடர்ந்து, 35 நாட்கள் பூ பறிக்கலாம்.நோய் மற்றும் பூச்சி தாக்குதலை முறையாக கையாண்டால், நல்ல வருவாய் ஈட்டலாம். நான், 8 சென்ட் நிலத்தில், 14 ஆயிரம் ரூபாய் வருவாய் பார்த்தேன். இதுவே, 1 ஏக்கரில் சாகுபடி செய்தால், 1.40 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.நெல்லில் கிடைக்கும் சாகுபடியைவிட, இதில் வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.