2. கண்ணாடி ஆங்காங்கு கிழிந்து தைத்திருந்ததைப் போன்று ஜீன்ஸ். விலையுயர்ந்த டீ-ஷர்ட். முதுகில் திம்மென்று ஏறியிருந்த பேக்-பேக். கையில் அதக்கியிருந்த ஐஃபோன். ஒற்றைக் காதில் அணிந்திருந்த ப்ளூடூத். உச்ச டெஸிபலில் பேச்சு. கண்ணைவிட்டு அகலாத குளிர்கண்ணாடி. இளம்பெண்களை மட்டுமே கவனிக்கும் பார்வை. வெளிநாட்டு இறக்குமதிக் காரில் சென்னை சென்ட்ரலுக்கு வந்து இறங்கிய அந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்சொன்ன அடையாளங்கள் பொருந்தின. அவர்களில் நடுநாயகமாக வந்துகொண்டிருப்பவன் ப்ரிஜேஷ். ப்ரிஜேஷ்? சங்கரின் மகன். அவனோடு வரும் இருவரும் – அஜய், […]Read More
கொதி நிலையில் இருந்தார் பூதம்! வீட்டுக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்! அஞ்சு, அப்பா வந்த முதலே கவனித்து விட்டாள்! அவர் முகம் அக்கினிப் பிழம்பாக இருப்பதை பார்த்தாள். “ என்னப்பா, ஏதாவது பிரச்னையா?” “இது ஆஃபீஸ் விவகாரம்மா! நீ உன் வேலையை பாரு!” பண்ணை வீட்டுக்கு அவர் போன நேரம், அருள், ஒரு பெண்ணுடன் வேகமாக பைக்கில் செல்வதைப் பார்த்து விட்டார். ஏற்கனவே ஆட்கள் தகவல் தந்து விட்டதால், அவனை அடிச்சு தூக்குங்க என உத்தரவு […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் குறித்து பல வகையான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் ‘ராகு-கேது’ என்கிற இரண்டு கிரகங்களின் இருப்பை வைத்தே அவரின் வாழ்க்கை அமைப்பை கணித்து விடலாம்.திருமணமான ஒரு பெண்ணுக்கு விரைந்து குழந்தை பிறக்க நாக வழிபாடு துணைபுரிகிறது. திருமணமான பெண்கள் ‘அரச மரத்துடன் வேப்ப மரம்’ பின்னி பிணைந்திருக்கும் இடத்தை தினமும் 21 சுற்றுகள் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சுற்றி வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும்.அதுமட்டுமின்றி, அரசும் வேம்பும் […]Read More
சிறிது தூரம் சென்றதும் அந்த டூவீலர்க்காரன் மெல்லக் கேட்டான். “ஏன் சார் நான் வந்து பார்க்கும் போது ரெண்டு பேரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டிருந்தீங்க!…அப்புறம் திடீர்னு.. “அண்ணா…தம்பி”ன்னு பாசத்தோட பேசிக்கறீங்க!…அந்தாளு என்னடா…ன்னா அன்னியன் பட விக்ரம் மாதிரி மாறி மாறி ஆக்ட் பண்றாரு!….என்ன சார் விளையாட்டு இது?” “அது…வந்து…நான் சொன்னா உங்களுக்குப் புரியாது!…ஏன்னா புரியற மாதிரி எனக்குச் சொல்லத் தெரியாது” என்று கோவிந்தன் சொல்ல, வண்டியை நிறுத்தி, “கொஞ்சம் கீழே இறங்கறீங்களா?” என்றான் அந்த டூவீலர்க்காரன். […]Read More
இந்தக் கலியுகத்தில் உத்தமராக இருப்பவருக்கே ஏகப்பட்ட சறுக்கல்கள் வலி என்றால்? தீய செயலை செய்து கொண்டிருப்பவரின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்? தீயோர்க்கு எதுவும் எளிதாகக் கிடைத்து விடும். ஆனால், அது நிலைக்காது நிலைத்து நிற்காது. ‘அரசன் அன்று கொலவான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற ஒரு பழமொழி உண்டு. இன்று தெய்வம் கொல்கிறதோ? இல்லையோ? அவரவருக்கு உண்டான கர்ம வினைப்படி இந்தக் கலியுகத்திலே தண்டனை கிடைத்து விடுகிறது. கஸ்தூரி இந்த வழி வந்தால் அனேகமாக மீனா […]Read More
“என்ன மது பார்க்கறீங்க..? நீங்க கூட வெறும் பியருக்கு அலற்றுகிற பிறவிதானா…?” சித்ரா கேட்டாள். “நோ… நோ… அப்படியில்லை…” என்று தயங்கினான் மது. “பின்ன என்ன தயக்கம்..? நான் போய் கார்லேருந்து பியர் டின்களைக் கொண்டு வரட்டுமா…?” மது மெதுவாகத் திரும்பி ஷைலஜாவைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த மிரட்சி அவனை உடனே பதில் சொல்ல விடவில்லை. “என்ன அவளைப் பார்க்கறீங்க…? அவ அனுமதிச்சால்தான் சரி சொல்லுவீங்களா…?” “இல்லை… அதுக்கில்லை…ஷைலஜாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவளை விட்டுவிட்டு நாம் […]Read More
29. நாலும் தெரிந்த நாயகன் “கெலவர் குகை என்றால் வௌவால் குகையாமே..! அங்கே என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது..?” –யோசனையுடன் நடந்தாள், மயூரி. “நமக்கு , எல்லாம் தெரியும்னு இறுமாந்து உலகமே நம்ம பாக்கெட் உள்ளேன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் . இந்த பத்து மலை எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகள் பழமையானது. பத்து-னா மலயா மொழியில சுண்ணாம்பு னு சொல்லியிருக்கேன். இந்த சுண்ணாம்புக்குப் பின்னாடி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு தெரியுமா ? அகஸ்தியர்,போகர், கோரக்கர், எல்லாம் ஏன் இங்கே வந்து வாசம் செய்தாங்க னு நினைக்கிறே..? அமைதியா […]Read More
இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மகனே!” ..என வாழ்த்தினார். “தாங்ஸ்ப்பா!..” என்றவன் அம்மாவையும் மனைவியையும் தேடி சமையலறைக்கே ஓடினான். “வாங்க மை பர்த்டே பேபி!..” என சுதா கிண்டலடிக்க… வடையைத் தட்டி கொண்டிருந்த தனலட்சுமி.. “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் […]Read More
தொடரின் அறிமுகத்தைத் தவற விட்டவர்களுக்காக… அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் நளினா, ஒரு மர்ம நபரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறாள். அவர் கேட்கும் கவருக்குப் பதிலாக போலிக் கவரைத் தருகிறாள். அவர் எதிர்பாராதவிதமாக அவளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவள் உடைமைகளை ஆராய்ந்து உண்மையான கவரைக் கைப்பற்றுகிறார். சரியான ஓரிடத்தில் அவள் உடலை ரயிலிலிருந்து வீசியெறிகிறார். அவள் உடைமைகளை சேகரித்துக் கொண்டு அதே ரயிலிலேயே பயணிக்கிறார். சென்னையில் அவளை கம்பார்ட்மெண்ட்டில் காணாமல் ஏமாற்றமடைகிறான் ஓர் இளைஞன். நாட்டியத் தாரகையான நளினாவை […]Read More
1வது அத்தியாயத்தைத் தவற விட்டவர்களுக்காக…. சிதம்பரம் – கௌசல்யா தம்பதியின் மகள்கள் பாரதி, வாசுகி, மேகலா. பாரதி, பெயருக்கேற்றபடி அழகான, அறிவான, துணிவான பெண். மேகலாவுக்கு அன்று பிறந்ததினம். தன் தோழிகளை அழைத்து பார்ட்டி வைக்க அனுமதி வாங்கி சந்தோஷமாக காலேஜ் போகிறாள். அவளுக்காக அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வரும் பாரதி, தொழிலதிபர் மாத்ருபூதம் செய்யும் தவறைக் கண்டிக்கிறாள். பொதுவில் நடந்ததால் பணிவாக மன்னிப்பு கேட்கும் மிஸ்டர் பூதம், அவளது குடும்ப விவரங்களைச் சேகரிக்க தன் உதவியாளனிடம் […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )