எழுத்தாளர் பேனாமுனை
நரிக்குறவர் வாழ்க்கை முறை எப்படி?
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத் தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர். நரிக்குறவர் தமிழர்கள் அல்ல. அவர்கள் வக்ரிபோலி என்ற குஜராத், மராத்தி மாநிலத்தில் உள்ள இந்தோ ஆரியன் இனத்தின் ஒரு மொழி பேசுகிறவர்கள். அவர்கள் மன்னர் சிவாஜி படையில் போர் வீரர்களாக, குதிரைப்படை வீரர்களாக இருந்ததாகவும் அவரது இறப்பிற்குப் பின்னர் முகலாயர்களின் கொடுமைக்குப் பயந்து தமிழ்நாட்டிற்கு […]
பாரதியின் இறுதி நாட்கள்
கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை. பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். வறுமை அவர் குடும்பத்தை வாட்டியது. ஒரு நாள், தன் பெண் பிள்ளைகளை அழைத்தார். தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் அடங்கிய தகரப் பெட்டியைக் காட்டினார். பிள்ளைகளே, உங்களுக்காக, நான் எதுவும் சேர்த்துவிட்டுப் போக வில்லையே, […]
சாகித்ய அகாதமி விருது பற்றி ஜெயமோகன்
சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் ப.காளிதாஸ் பற்றியும், அவரது கவிதை நூல் குறித்தும், அகாதெமி குறித்தும் விமர்சித்து முக நூலில் பக்கத்தில் எழுதினார் எழுத்தாளர் ஜெயமோகன். அது சர்ச்சை யாகியது. ஜெமோ 2014, டிசம்பர் 24 அன்று சாகித்ய அகாதெமி விருது குறித்த தன் கருத்தை தன் வலைப்பக்கத்தில் எழுதியவை இங்கே… விஷ்ணுபுரம் வெளிவந்தது 1997ல். அப்போது எனக்கு முப்பத்தைந்து வயதுதான். அன்றெல்லாம் வயோதிகர்கள்தான் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள். ஆனாலும் ஒவ்வொருமுறை சாகித்ய […]
உள்ளதைச் சொல்லும் நல்ல மனிதர் விஜயகாந்த்
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் என்றால் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தார். நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆக் ஷன் ஹீரோவாக அதிரடி வசனங்கள் பேசி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. ஆக் ஷன் படமாக இருந்தாலும் தங்கை, மனைவி, தாய் பாசம் கொண்ட குடும்பக் கதையாக வும் இருக்கும் என்பதால் பெண் ரசிகர்களும் அவரது […]
ZOHO -முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் தாரக மந்திரம்
தமிழகம் மற்றும் ஆந்திர கிராமங்களில் உள்ள பட்டம் பெறாத இளைஞர்களை யும் இளைஞிகளையும் வேலைக்கமர்த்தி, பல பில்லியன் (100 கோடி) ஐ.டி வர்த்தகத்தை உலகெங்கிலும் வெற்றிகரமாகச் செய்து பலருக்கு முன்னுதாரண மாகத் திகழ்கிறார் (ZOHO) ஜோஹோ நிறுவனர், பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு. 1968 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் தமிழ் குடும்பத்தில் வேம்பு பிறந்தார். 1989 ஆம் ஆண்டில் மெட்ராஸின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பட்டம் […]
லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணமும் அவரது சாட்சிகளும் அடுத்தடுத்து இறந்தனர் ஏன்?
இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர். 1965-ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் வெற்றியால் நாட்டின் ஹீரோவாக மாறியவர். போரின் முடிவாக ரஷியாவின் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப்கான் ஆகியோர் ஜனவரி10, 1966 அன்று கையெழுத்திட்டனர். அதற்கு அடுத்த நாள் இந்திய பிரதமர் சாஸ்திரி தாஷ் கண்டில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. சாஸ்திரியின் […]
கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரில் ஹைக்கூ விருது வழங்கவேண்டும்
திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் கடந்த வாரம் ‘தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022’ சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ‘தூண்டில் – இனிய நந்த வனம் -தமிழ்க் கவிதையாளர்கள் இயக்கம்’ ஆகியவை இணைந்து நடத்தின. கல்வியாளர் செளமா ராஜரத்தினம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். காலை10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு […]
தியாகத்தின் வரலாறு தமிழ்நாடு பெயர் சூட்டிய நாள் இன்று
பேரறிஞர் அண்ணாவால் 18.7.1967-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட தைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு நாள் இன்று கொண்டா டப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தமிழ்நாடு நாள் விழா நடந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமாகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் முதலமைச்சர் இந்தக் கூட்டத்தில் நேரில் […]
மூன்று முன்னாள் முதல்வர்களின் சொத்துக் கணக்கு
முதல்வர் 1 இன்றைய காலத்தில் மக்கள் சேவை செய்ய வரும் ஒரு மாநகராட்சித் தலைவ ரின் சொத்து மதிப்பே எவ்வளவு என்பது பரலாகத் தெரியும். ஆனால் மாநகராட் சித் தலைவராக ஆவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தார் என்பது தெரியும். அதிலும் எம்.எல்.ஏ., எம்.பி. என்றால் அவர்களின் சொத்து மதிப்பு தேர்த லில் நிற்கும்போது காண்பிக்கப்படுவதே கண்ணை மறைக்கும் உண்மை சொத்து மதிப்பு எவ்வளவு என்றால் மக்களில் பாதிப்பேருக்கு மாரடைப்பு வந்துவிடும். அதிலும் மந்திரியாக இருப்பவரின் சொத்து […]
முதல் திராவிட இயக்கத் தளபதி
திராவிட இயக்க மூன்று முக்கியத் தூண்களில் ஒருவர், முதல் திராவிட இயக்கத் தளபதி, பெரியாரால் ‘திராவிட லெனின்’ எனப் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம்.நாயர் “இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று, இந்நாட்டின் சொந்தக்காரர்களான நம் திராவிடர் இனம். மற்றொன்று, நாம் அசட்டையாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம். இத்தகைய திருட்டு இனங்கள் நுழைவதற்கென்றே அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே அமைக்கப்பட்டுவிட்டனவோ என்று எண்ணும்படியான வடஇந்திய மலைப்பிரதேசங்களான இமயமலை இந்து குஷ்மலைகளின் இடையேயுள்ள கைபர் பாஸ், போலன் […]