எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன்
இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் ‘சிம்பொனி’ அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம். இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில் கம்போசிங்கின் போதும், சென்னையில் யேசுதாஸின் முதல் ஸ்டீரியோ, ஸ்டுடியோவில் ரிக்கார்டிங்கின்போதும் – ஆர்வமுள்ள, முன்னேறத் துடிக்கும், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன். இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் சின்தஸைஸர் மிக […]Read More