இந்த மாத பெண்மணி/ஏழை பிள்ளைகளின் கல்விக்கு உதவி வரும் அமுதா முருகேசன்

இந்த மாத பெண்மணி யாக மின் கைத்தடி இதழில் நாம் பார்க்க போவது
ஐ டி பணியில் 28 ஆண்டுகள் அனுபவம் உள்ள அமுதா முருகேசன் அவர்களைப்
பற்றி தான்.

சென்னையில் வசித்து வரும் இவர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களிடம் வில்லுப்பாட்டு கற்றுத் தேர்ந்தவர், இவர் தற்காப்புக் கலையான கராத்தேவில் கறுப்புப் பட்டை பெற்றவர்.

இவர் தனிப்பட்ட முறையிலும் மற்றும் அலுவலகத்தின் மூலமாக வும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார்
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டிருப்பது நமக்கு தெரியாத விஷயம் விளம்பரம் இல்லாமல் பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.
இவர்
BCS (Corporate secretaryship), MCom, MA (Political science), MBA (Operations Management), Diploma in Labour Law உள்ளிட்ட படிப்புகளை படித்து இருக்கிறார். மற்றும் computer programming languages பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறார்

இவருடைய கணவர் சுரேஷ்பாபு-வும் ஐடி துறையில்தான் பணி புரிகிறார். மகன் பிரசன்னா பொறியில் இரண்டாம் ஆண்டும், மகள் பவித்ரா 12 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்.

இவர் பள்ளியில் பயிலும் போதே பணி செய்ய ஆரம்பித்து தொலைத்தொடர்பு மற்றும் ஐடி துறையில் 28 வருடங்களாக பணி புரிந்து இருக்கார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தொழில்நுட்ப அலுவலகத்தில் இயக்குநராக இருந்துள்ளார்.. கடந்த ஓராண்டாக “Mind Altitudes” என்ற ஒன்றை நிறுவி அதன் வாயிலாக, Training, Couselling and Career Coaching, Business Consulting செய்து வருகிறார். ஆங்கிலத்தி Plus Factor என்ற புத்தகத்தை வெளியிட்டு தற்போது அதனை தமிழிலும் வெளியிடயிருக்கிறார்.

எப்போதும் சுறு சுறுப்புடன் பணி சார்ந்த திறமைகளை எப்போதும் வளர்த்துக் கொண்டேயிருப்பதால் இவர் தான் செய்து வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்
இவருக்கு இலக்கிய ஆர்வம் அதிகம், தனிப்பட்ட முறையில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுகிறேன், சில நாளிதழ்களிலும், மாத பத்திரிகையில் மற்றும் ஆன்லைன் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது,
சமையல் செய்வது இவருக் கு பிடித்தம். ஆகவே புதிது புதிதாக சமைப்பதில் விருப்பம். பலவகை புதிய உணவுவகைகளை கண்டு பிடித்து அதனை சமைத்து எல்லோருக்கும் தருவதும் உண்டு, இதை த் தவிர ஓவியத்திலும் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உண்டு!

இவர்

ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார். இது எப்படி வந்தது என்பதற்கு தானேஒரு ஏழை மாணவியாக இருந்ததால்தான் அந்த எண்ணம் மேலோங்கி ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறேன் என்கிறார்
தான் படித்த பள்ளியில் கல்வி, கலை மற்றும் விளையாட்டில் எப்போதும் முதலாவதாக தேறி இருக்கிறார். இதனால் மெரிட் ஸ்கலார்ஷிப்பில் படித்து இருக்கு ம் இவருக்கு அறிவியலில் மிகுந்த ஆர்வம். ஆனால் பணப்பிரச்சனையால் விரும்பிய அறிவியல் சம்பந்தமான படிக்க முடியாமல் வணிகவியல் மற்றும் கணக்கை விருப்பபாடமாக தேர்ந்தெடுத்து பிறகு அதைச்சார்ந்த கல்லூரி படிப்பை அதே பணப்பிரச்சனையால் எடுக்க முடியாமல், பணியில் சேர்ந்துள்ளார். உழைத்த அந்த பணத்தைக்கொண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் ரெகுலர் வகுப்பில் சேர்ந்து பட்டங்களை பெற்றுள்ளார். படிப்பின் ஆர்வம் காரணமாக எம்பிஏ முதலான படிப்பின் செலவை இவருடைய அலுவலகம் ஏற்று கொண்டு இருக்கிறது.

படிக்கும் ஆர்வம் இருந்தும் படிப்பிற்கான இந்த கடின உழைப்பும், கடந்து வந்த ஏமாற்றமுமே கல்வியை ஏழை மாணவர்களுக்கு சாத்தியப்படுத்தவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட காரணம் ஆகும்.
ஆகவே இவர், பெற்றோர் இல்லாத பிள்ளைகள், ஏழைப்பிள்ளைகள் என்று தேர்ந்தெடுத்து பள்ளிக்கல்வி, அவர்கள் விரும்பும் கல்லூரி கல்வி என்று அவர்கள் முடித்து பணியில் சேரும்வரை பார்த்துக்கொள்கிறார்.இவரால், 30க்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக கல்வியை முடித்திருக்கிறார்கள், அவர்கள் தொழில்நுட்பம், மருத்துவம் என்று பல துறைகளில் இருக்கிறார்கள். குறைந்தப்பட்சம் 100 பிள்ளைகளின் கல்வியே இவருடைய இலக்கு!

இதைத்தவிர

ஏழைகளுக்கு மருத்துவ உதவி, இதய நோய்,பெண்களுக்கான கர்ப்பப்பை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான உதவிகளை செய்து வருகிறார், நாய் பூனை முதலியவைகளுக்கு உணவுக்கொடுத்தல், தெருவில் அடிபடும் விலங்குகளை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தல், மரம் நடுதல் போன்ற பல விஷயங்களைச் செய்து வருகிறார்
இயற்கை யின் மேல் இவருக்கு அபார பிரியம். இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டிருக்கிறார்.

மற்றதுறைகளிலும் இவருக்கு ஆர் வம் அதிகம்

இவரது பள்ளியின் முதல்வர் திருமதி சுப்புலஷ்மி அவர்கள், கல்வி மட்டுமல்லாமல் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர், இவர் மறைந்த வில்லிசை கலைஞர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் மூத்த புதல்வி, இந்த வழியில் பள்ளி விழாக்களில் வில்லுப்பாட்டு மேடை கிடைத்து இருக்கிறது. பிறகு அதையே கவிஞரிடம் ஒரு வருட படிப்பாக பயின்று ள்ளார், சென்னை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை கொடுத்து கொண்டு இருக்கின்றார்.

கராத்தே மீதும் இவருக்கு ஆர்வம். அது தற்காப்புக் கலை, இவர் தாய்வழித் தாத்தா ஆதிமூலம், அந்தக்காலத்தில் குத்துச்சண்டை ஆசிரியராக இருந்ததால் அந்த வழியில் இவருக்கு போர்க்கலைகளில் ஆர்வம் உண்டாகி கராத்தேவில் பிளாக் பெல்ட் செகண்ட் டான் வரை பயின்ருள்ளார்.. மாவட்ட சேம்பியனாக போட்டியில் பங்குகொண்டு பரிசும் பெற்று இதுவும் பிறகு பணப்பிரச்சனையால் தொடர முடியாமல் போயிற்று எனவும் வருத்தபடுகிறார்.
இதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வியின் மூலம் கொடுக்கும் நம்பிக்கை மட்டுமே இவருடைய சிந்தனை யில் மேலோங்கி ஓயாத பணிகளி னால் இதைத்தொடரவோ கற்றுக்கொடுக்கவோ இயலவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

அலுவலக ரீதியில் பல்வேறு கவுரவங்கள், ஆங்கீகாரங்கள் இவருக்கு கிடைத்துள்ளன, பொதுவெளியில் தான் செய்யும் எந்தச் சமூகப்பணியையும் விளம்பரப்படுத்தியதில்லை என்கிறார், நான் இவரை ப் பற்றி கேள்வி ப் பட்ட பிறகு எங்களது இணைய மின் கைத்தடி பத்திரிகை யில் இவரது சமூக சேவை களை பதிவிட கேட்டு கொண்ட பிறகு சம் மதித்தார்.
, உதவி செய்ய டாட்டா பிர்லாகவாக இருக்கத் தேவையில்லை, சாப்பிடும் உணவில் ஒரு கைப்பிடி சோறை காக்கைக்கும் குருவிக்கும் வைப்பதும் கூட உதவிதான், இருப்பதை பகிர்வது உதவி, இந்த உணர்வு நம்மில் சிலருக்கேனும் வந்தால் நலம், அதுவே விருது! என்கிறார் இவர்.உண்மை தானே

இவருடைய மிகப்பெரிய கனவு என்னவெனில், அவருடைய வார்த்தை களில் “விரும்பும் கல்வியை விரும்பிய வண்ணம் எல்லா பிள்ளைகளும் அடைய வேண்டும், மருத்துவக்கல்வியை நூறு மாணவர்கள் படிக்க விரும்பினால் நூறு இடங்களை நாம் உருவாக்க வேண்டுமே தவிர நூறு இல்லை, இருபதுதான் இருக்கிறது, அதற்கு ஆயிரம் பேரிடம் நுழைவுக்கட்டணம், தேர்வு கட்டணம் வாங்கி பரீட்சை வைக்கிறேன், இருபது பேரை தேர்நதெடுக்கிறேன், மீதம் 80 பேரின் பொருளாதாரத்தையும் கனவையும் குழிதோண்டி புதைக்கிறேன் என்ற நிலை மாற வேண்டும்.
சிறந்த பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க வேண்டும், நல்ல கல்வியே நல்ல மனிதர்களை தருவதில் பங்கு வகிக்கிறது, இதையெல்லாம் என்னால் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் முடிந்த வரையில் சில நூறு மாணவர்களின் கனவுக்கு என்னுடைய பங்களிப்பை தரமுடியும், தருவேன்! “

மேலும் அவர் “இதைத்தவிர விலங்குகளின் நலனிற்காக ஒரு விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும், எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உண்டு என்ற உண்மையை மக்கள் புரிந்துக்கொண்டு உதவ வேண்டும் என்பதும் என் வேண்டுகோள்!”

உன்னதமான லட்சியம். உண்மை யான சமூக அக்கறை. தன்னலம் இல்லாத தொண்டு. சேவை

அமுதா முருகேசன் அவர்களை இங்கே வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மின் கை த் தடி பெருமை கொள்கிறது.
இவரின் சேவை தொடர நமது வாழ்த்துக்கள்

by umakanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!