சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள். பல்லுயிர் பெருக்கம் என்பது புவியின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு சூழ்நிலை முறைகளில் வாழும் உயிரினங்கள் ஆகும். இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றது. இந்த உயிரினங்களின் தற்போதைய நிலைகளை அளவிடவும், அவைகளின் பெருக்கத்தையும் மதிப்பிடுகிறது. எதற்காக இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்?. நாம் உண்ணும் உணவில் 80 சதவீதம் இந்த உலகில் வாழும் தாவரங்களையும், விலங்குகளையும் சார்ந்து தான் இருக்கின்றன.இப்போது உள்ள வாழ்க்கைமுறையில் நோயில்லாமல் வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று, இந்த நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காக்க உபயோகப்படுத்தும் மருந்துகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த உயிரினங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள்தான்.இருப்பிடங்கள் மற்றும் ஆடைகள் உருவாக்குவதற்கும் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதையெல்லாம் நினைவூட்டவும், அதற்குரிய முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இத்தினம்.
முதலாம் கான்ஸ்டன்டைன் காலமான நாள் ரோமானியப் பேரரசின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேரரசர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். முதலாம் கான்ஸ்டன்டைன் பற்றிய சில முக்கிய தகவல்கள்: ஆட்சி காலம்: கி.பி. 306 முதல் 337 வரை ரோமானியப் பேரரசராக ஆட்சி செய்தார். கிறிஸ்தவத்தின் சட்டபூர்வ அங்கீகாரம்: கிறிஸ்தவ மதத்தைத் துன்புறுத்துவதை நிறுத்தி, கி.பி. 313 இல் மிலன் ஆணை (Edict of Milan) மூலம் கிறிஸ்தவத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் ரோமானியப் பேரரசர் இவரே. இது ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கான்ஸ்டான்டினோபில் உருவாக்கம்: ரோமானியப் பேரரசின் தலைநகரை ரோமில் இருந்து பைசாண்டியம் என்ற இடத்திற்கு மாற்றி, அதற்கு தனது பெயரால் கான்ஸ்டான்டினோபில் (Constantinople) என்று பெயரிட்டார். இது பின்னர் கிழக்கு ரோமானியப் பேரரசு அல்லது பைசாந்தியப் பேரரசின் தலைநகராக நீண்ட காலம் விளங்கியது. இறுதிக்காலம்: மரணத்திற்கு சில காலம் முன்பு, அவர் ஞானஸ்நானம் பெற்றார் என்று கூறப்படுகிறது. அவர் கி.பி. 337 ஆம் ஆண்டு மே 22 அன்று அச்சிரோனில், பாஸ்கா பண்டிகையைத் தொடர்ந்து பெந்தகோஸ்து ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் இறந்தார். முதலாம் கான்ஸ்டன்டைனின் ஆட்சி, அரசியல் மற்றும் மத ரீதியாக ரோமானியப் பேரரசில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
சேர் சா சூரி நினைவு நாள் சேர் சா சூரி (Sher Shah Suri) பற்றிய சில முக்கிய தகவல்கள்: சூர் பேரரசின் நிறுவனர்: முகலாயப் பேரரசர் உமாயூனைத் தோற்கடித்து, சூர் பேரரசை நிறுவினார். சிறந்த நிர்வாகி: இவரது ஆட்சி மிகக் குறுகிய காலமே (1540-1545) நீடித்தாலும், இந்திய வரலாற்றில் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் பல நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ரூபாய் அறிமுகம்: “ரூபியா” என்ற புதிய நாணய முறையை அறிமுகப்படுத்தினார், இது இன்றும் “ரூபாய்” என்ற பெயரில் இந்திய நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. சாலைகள் மேம்பாடு: “கிராண்ட் டிரங்க் சாலை” (Grand Trunk Road) போன்ற முக்கியமான சாலைகளை மேம்படுத்தினார், இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு பெரிதும் உதவியது. நில வருவாய் சீர்திருத்தங்கள்: அறிவியல் பூர்வமான நில அளவீடு மற்றும் வருவாய் வசூல் முறையை அறிமுகப்படுத்தினார். தபால் சேவை: தபால் அமைப்பை சீரமைத்தார். மரணத்திற்கான காரணம்: கலிஞ்சர் கோட்டையை முற்றுகையிட்டபோது, அங்கு ஏற்பட்ட ஒரு வெடிமருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிகழ்வு கி.பி. 1545 மே 22 அன்று நடந்தது. சேர் சா சூரியின் நிர்வாக சீர்திருத்தங்கள் பின்னர் முகலாயப் பேரரசர் அக்பர் போன்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. சசாரம், பீகாரில் உள்ள அவரது கல்லறை, அவரது ஆட்சிக் காலத்தின் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அகஸ்டா, லேடி கிரிகோரி – மறைந்த நாள் அகஸ்டா, லேடி கிரிகோரி பற்றிய சில முக்கிய தகவல்கள்: அயர்லாந்து எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர்: இவர் அயர்லாந்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். அயர்லாந்து இலக்கிய மறுமலர்ச்சியில் (Irish Literary Revival) முக்கியப் பங்காற்றினார். அபே தியேட்டர் (Abbey Theatre) இணை நிறுவனர்: வில்லியம் பட்லர் யீட்ஸ் (William Butler Yeats) மற்றும் எட்வர்ட் மார்ட்டின் (Edward Martyn) ஆகியோருடன் இணைந்து அபே தியேட்டரை (அயர்லாந்தின் தேசிய நாடக அரங்கம்) நிறுவினார். இது அயர்லாந்து நாடகங்களுக்கு ஒரு முக்கிய மையமாக விளங்கியது. நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாடகங்கள்: அயர்லாந்து நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள் மற்றும் விவசாய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல நாடகங்களையும், கதைகளையும் எழுதினார். இவரது நாடகங்கள் அவற்றின் யதார்த்தமான வசனங்களுக்காகவும், கதாபாத்திரங்களுக்காகவும் அறியப்பட்டன. மொழிபெயர்ப்பாளர்: அயர்லாந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலக அளவில் அயர்லாந்து கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். மறைவு: லேடி கிரிகோரி 1932 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் தனது 80 ஆம் வயதில் காலமானார். அவரது பணிகள் அயர்லாந்து இலக்கியத்திற்கும், நாடக உலகிற்கும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
விக்டர் ஹியூகோ காலமான நாள் பிரெஞ்சு எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் மற்றும் கலைஞர்: 19 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ரொமாண்டிக் இயக்கத்தின் முன்னோடி: பிரெஞ்சு ரொமாண்டிக் இயக்கத்தின் (Romantic Movement) மிக முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். புகழ்பெற்ற படைப்புகள்: லெஸ் மிசராபிள் (Les Misérables): பிரெஞ்சு சமுதாயத்தின் ஏழ்மை, நீதி, அன்பு, தியாகம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட ஒரு காவிய நாவல். நோட்ரெ டேம் ஆஃப் பாரிஸ் (The Hunchback of Notre-Dame): பாரிஸில் உள்ள நோட்ரெ டேம் தேவாலயத்தைப் பற்றிய ஒரு வரலாற்று நாவல். தி ஹியூமன்ஸ் ஆஃப் தி சீ (The Toilers of the Sea): கடலின் சக்தியையும், மனிதர்களின் போராட்டத்தையும் விவரிக்கும் நாவல். எர்னானி (Hernani): ஒரு பிரபலமான நாடகம். அரசியல் செயல்பாடுகள்: ஹியூகோ ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் இருந்தார். குடியரசு, சமூக நீதி மற்றும் மரண தண்டனைக்கு எதிரான தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். இரண்டாம் நெப்போலியன் ஆட்சிக்காலத்தின் போது நாடுகடத்தப்பட்டு, பல ஆண்டுகள் பிரான்சிற்கு வெளியே வாழ்ந்தார். மறைவு மற்றும் மரியாதை: 1885 மே 22 அன்று தனது 83 வயதில் பாரிஸில் காலமானார். அவரது மரணம் பிரான்சில் ஒரு தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. அவரது உடல் பாரிஸில் உள்ள பந்தியனில் (Panthéon) தேசிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது, இது பிரான்சின் மிகச்சிறந்த குடிமக்களின் இறுதி ஓய்வு இடமாகும். விக்டர் ஹியூகோவின் படைப்புகள் இன்றும் உலகின் பல மொழிகளில் வாசிக்கப்பட்டு, நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சின்னக்குத்தூசி காலமான நாளின்று : அவர் குறித்த நினைவலைகள் திருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார். முன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை. காட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி. பிறப்பால் பிராமணர். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தின் வைரி. பெரியாரின் கொள்கை முரசம். இவர் வாழ்க்கையும் பயணமும் இன்றைய தலைமுறை அவசியம் அறியவேண்டிய பெரும் செய்தி. இயற்பெயர் தியாகராஜன். திருவாரூரில் ஏழ்மையான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையை சுவைத்தவர். மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பிராமணர்கள் தி.க வில் உறுப் பினராக முடியாது என்ற அன்றைய விதி காரணமாக உறுப்பினராக வில்லை. ஆயினும் திராவிடர் கொள்கைகளில் தீவிரமாய் செயல்படலானார். மணலூர் மணியம்மா என்கிற கம்யூனிஸ்ட் போராளி, இடதுசாரி புத்தகங் களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவரது உதவியாளராக சிறிது காலம் செயல்பட்ட போது புத்தகங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.வாழ்க்கைப் பயணத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். அக் காலத்தில் திமுக அரசியலோடு இவரது நெருக்கம் அதிகரித்தது. ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என தனி ஆவர்த்தனம் செய்த போது அவரைப் பின் தொடர்ந்தார். சம்பத் காங்கிர கட்சிக்குப் போன போது இவரும் காங்கிரஸோடு இணைந்து நின்றார். அப்போதும் பெரி யாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமூக நீதி கருத்துகளையும் உரக் கப் பேசிக் கொண்டே இருந்தார். காமராஜருக்குப் பின் திமுக அரசியலில் ஆர்வம் காட்டினார். மாதவி என்ற ஏட்டில் எழுதத் துவங்கி தமிழ்ச் செய்தி, அலையோசை, நவசக்தி, எதிரொலி, முரசொலி, நக்கீரன் என பல பத்திரிகைகளில் கூர்மை யான அரசியல் விவாதக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். இறக் கும் தருவாயிலும் மருத்துவமனையில் இருந்த படி அரசியல் விமர்சனக் கருத்துக்களை இவர் சொல்ல, மற்றொருவர் எழுத, பின்னர் அதுக் கட்டு ரையாக வெளிவந்தது என்பது தாம் மேற்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும். தீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் வாதங்களில் சின்னக் குத்தூசி எழுத்துகள் முக்கிய இடம் பெறும். பொதுவாக ஆதாரமோ மேற் கோளோ காட்டாமல் எதையும் எழுதமாட்டார். பழைய ஏடுகளில் தேடித் துருவி சில செய்திகளை சுட்டிக் காட்டி அரசியல் விவாதம் செய்யும் இவரது பாணி தனித்துவம் ஆனது. முதல் நாள் இவரைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டு மறுநாள் நேரில் சென்று பார்க்கும் போது, தோழர் ரொம்ப நல்லா எழுதி இருந்தீங்க எனப் பாராட்டுவார். நமக்குத் தான் கூச்சமாக இருக்கும். கருத்துச் சண்டை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் கறாராக வாழ்ந்தார். தன் நிலைபாட்டில் வழுவ மாட்டார்; ஆனால் எதிராளி சொல்வதை காது கொடுத்துக் கேட்பார்; படிப்பார். இந்த ஜனநாயகப் பண்பு இப்போது எத்தனை பேரிடம் காண முடியும்? இவரது எழுத்துகள் புதையல் கருவூலம் களஞ்சியம் பவளமாலை வைரமாலை பொற்குவியல் பூக்கூடை இடஒதுக்கீடு அன்று முதல் இன்று வரை என பல்வேறு தொகுதிகளாக ஒரு பதிப்பகதால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அவ்வப்போது எழும் அரசியல் தேவையை ஒட்டி அவர் பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. அவற்றில் பல கட்டுரைகள் அன்றைய சூழ்நிலை சார்ந்தது மட்டுமே. ஆயினும் பாபர் மசூதி இடிப்பு இட ஒதுக்கீடு மாநில உரிமை மதவெறி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு சமூக நீதி ஜனநாயக உரிமைகள் நதி நீர் பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் காலத்தை மீறி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.தொகுக்கப்பட்ட இவரது எழுத்துகள் நிகழ்கால திராவிட இயக்க அர சியல் சார்ந்த வரலாற்றை பேசும். அதே சமயம் இடது சாரி இயக்கம் சார்ந்த அரசியலைப் பேசும் வரலாற்று தொகுப்புகள் இதுபோல் இல் லையே என்ற ஏக்கமும் எழுகிறது. பத்திரிகையாளர்கள் உரிமை பறிக்கப் படும் போது, அதனை பாதுகாக்க முன்வரிசைப் போராளியாக நின்றவர் சின்னக்குத்தூசி. திருமணமே செய்து கொள்ளாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் எழுத்துத் தவம் நோற்ற இவரின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாறாகும். ஊடக உலகம் தார்மீக விழுமியங்களை இழந்து காசுக்கு விலை போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எழுத்துக்காக வாழ்ந்தவரின் இறப்பு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகப் பெரியது. ஆயினும்…. சின்னக் குத்தூசியைப் போலவே வளரும் தலை முறை மீது நம்பிக்கை கொள்வோம்.
தூத்துக்குடி படுகொலைகள் தினம்- மே 22, 2018 அன்று தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை முறியடித்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர். அதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 102 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்தனர் இந்த துப்பாக்கி சூடு குறித்து மறுநாள் சட்டமன்றத்தில் பேசியபேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த சம்பவம் குறித்து தொலைகாட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று விளக்கம் அளித்தார்.
ராஜா ராம்மோகன்ராய் பிறந்த நாளின்று, – நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். இவர்1772 இல் மே மாதம் 22ம் நாள் வங்கத்தில் பிறந்தார் ராஜாராம் மோகன் ராயின் அண்ணன் இறந்தபோது அண்ணனுடைய சிதையில் அவரது மனைவியையும் தள்ளினார்கள். அதைத் தடுக்க ராஜா ராம்மோகன்ராய் முயன்றபோது அவரை ஓர் அறையில் வைத்து பூட்டிவிட்டார்கள். அண்ணியின் ஓலக்குரல் அவர் செவிகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. அதுதான் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க அவர் முயற்சி மேற்கொள்ள காரணமாய் அமைந்தது.பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை. இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் இந்திய நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்
