கோவில் சுற்றி
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னை கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர் வர காரணமாக இருக்கும் அன்னை குடி கொண்டிருக்கும் தலம். வீர சிவாஜியும், மஹா கவி பாரதியாரும் வழிபட்ட தலம், விஸ்வ கர்மாவிற்கு தனி சன்னதி உள்ள தலம், ஆதி சங்கரர் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்த தலம் என்ற அனைத்து பெருமைகளையும் […]
‘மாணிக்கவாசகர்’ யூடியுப் சேனல் தொடக்க விழா
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று இறைவனை எண்ணி எண்ணி, இறைஞ்சி இறைஞ்சி பாடிப் பரவமடைந்தவர் மாணிக்கவாசகப் பெருமான். அன்னாரது பாடல்களைப் படித்து தமிழின் அருமையை உணர்ந்தவர் ஜி.யு.போப் கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த ஆங்கிலேயப் பாதிரியாரான ஜி.யு.போப் என்பார் மாணிக்கவாசகரது திருவாசகத்தை வெளிநாடுகளில் சென்று பேசி அனுமதி பெற்று திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்நிய மதத்தவரையே சிவ பக்திக்கும் தமிழ் உணர்வுக்கும் ஈர்த்தவர் மாணிக்கவாசகர். “வான்கலந்த மாணிக்கவாசக! நின் […]
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு கோவில் […]
‘திருவாசகம்’ தந்த மாணிக்கவாசகர் குரு பூஜை இன்று
மாணிக்கவாசகர் சைவ மயக்குரவர்கள் நால்வரில் ஒருவர். குன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் பாடியது. இது எட்டாம் திருமுறையாகும். 9ஆம் நுற்றாண்டில் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (863-911) இவர், அரிமர்த்த பாண்டியன் அமைச்சரசையில் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். உயர்ந்த பதவி, செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த மணிவாசகர் சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவவழிபாடு மேற்கொண்டு வந்தார். ஞானநெறியைப் பின்பற்றிய மணிவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து […]
250வது உழவாரத் திருப்பணி HASSIM அமைப்பு சாதனை
“நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களின் சிறப்பு அளவிட முடியாதது. அதன் பெருமையைக் காப்பாற்றப் பாடுபடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். அவர்களின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கும்” என்கிறார் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் தலைவர் எஸ். கணேசன். பண்டைய காலங்களில் மன்னர்கள் கோயில்களைக் கட்டி மக்கள் வழிபாடு செய்ய வழிவகுத்தார்கள். அதோடு நில்லாமல் அக்கோயில்களுக்கு நிரந்தரமாக பூசைகள் செய்வதற்கு நிலங்களை எழுதி வைத்தார்கள். அதிலிருந்து வரும் வருவாயை வைத்துக்கொண்டு கோயில் பூசைகளையும் […]
மனிதர்களுக்கு உகந்த மகாசிவராத்தியின் மகிமைகள்
மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில் மகாசிவராத்திரி விரதம்தான் சிறப்பானது. மகா சிவராத்திரி என்பது ‘சிவனின் சிறந்த இரவு’. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியில் விரதம் இருப்பது குடும்பத்திற்கு நல்லது. நினைத்த காரியங்கள் கைகூடும். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் குறைந்து, வசந்த காலமும் கோடை […]
தைப்பூசத் திருவிழாவும் வள்ளலார் ஜோதி வழிபாடும்
அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்றான தைப்பூசம் தமிழகம் […]
தை அமாவாசையும் முன்னோர் வழிபாடும்
ஒரு உண்மையான மகன் அமாவாசைதோறும் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யவேண்டும். அமாவாசையன்றுதான் எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால் அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் உறவுகளைப் பார்ப்பதற்காக பூலோகத்துக்கு வருவார்கள். அவர்கள் மேலோகத்திலிருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. அதனால் அவர்களுக்கு அன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம் முன்னோர்கள் திரும்பவும் மேலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அவர்களை வழியனுப்பும் விதமாக […]
ஆருத்ரா தரிசனம் இரண்டாம் நாள் திருவாதிரைக் களி படையல்
மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விவாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானது. சிவ ஆலயங்களில் திருவிழாக்கள் வெவ்வேறு நாட்களில் நடந்தாலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி மட்டும் ஒரே நாளில் நடத்தப்படும். அன்றைய தினம் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி அலங்காரமும் […]
ஏரி நடுவில் ஒரே கல்லில் மிகப்பெரிய புத்தர் சிலை
நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம். பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். இதில் முக்கியமான வெற்றிக்குக் காரணம் திட்டமிடல்தான். திட்டமிட்டால் வெற்றி பெறலாம். எங்களுடைய […]