சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் கலை நுணுக்கத்துடன் வடிவமைத்த ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) ராமர் சிலை, ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
கேதார்நாத்தில் ஆதிசங்கராச்சாரியார், டெல்லியில் இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திரபோஸ் சிலை ஆகியவற்றை கலை நயத்துடன் வடிவமைத்து புகழ்பெற்றவர் அருண் யோகிராஜ். தற்போது, பகவான் ராமரின் தெய்வீக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் மூன்று சிற்பிகளில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அருண் யோகிராஜ் புகழ்பெற்ற சிற்பிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை யோகிராஜும் ஒரு திறமையான சிற்பி. அருண் யோகிராஜின் தாத்தா பசவண்ணா ஷில்பி, மைசூர் மன்னரால் ஆதரிக்கப்பட்டவர். எம்பிஏ பட்டம் பெற்ற பிறகு, அருண் யோகிராஜ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தனது ஆர்வமான சிற்பி பணி காரணமாக 2008ம் ஆண்டில் தனியார் நிறுவன வேலையை கைவிட்டு, சிற்பி பணியில் முழு மூச்சாக இறங்கினார்
தான் வடிவமைத்த ராமர் சிலை மூலவர் சிலை குறித்து அருண் யோகிராஜ் கூறுகையில், “ராம் லல்லா சிலையை செதுக்க நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிற்பிகளில் நானும் ஒருவன் என்பதி பெருமிதமே.. இந்த சிலை ஒரு குழந்தையின் உருவமாக இருக்க வேண்டும். அதுவும் தெய்வீகமானது. ஏனெனில் அது கடவுள் அவதாரத்தின் சிலை. அதைப் பார்க்கும் மக்கள் தெய்வீகத்தை உணர வேண்டும். குழந்தை போன்ற முகத்துடன் தெய்வீக அம்சத்தையும் மனதில் வைத்து, சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பு எனது பணியைத் தொடங்கினேன். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிலை தேர்வைவிட, மக்கள் அதைப் பாராட்ட வேண்டும். அப்போதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்” அப்படீன்னார்