உலகம் முழுதும் தைப்பூச விழா
உலகம் முழுதும் தைப்பூச விழா;
சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கையில் கோலாகலம்.
தைப்பூச விழா தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலை எனும் பட்டு குகைகளில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல லட்சக்ணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவைக் கண்டுகளிக்கவே பல்லாயிரக்காணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
கோலாலம்பூரில் இருக்கும் மகாமாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பக்தர்கள் பலவகையான காவடிகளை ஏந்தி சுமார் 15 கிமீ நடந்து பட்டு குகையை அடைந்தனர்.
பக்தர்கள் 272 படிகள் ஏறி வந்து கந்தனை தரிசித்து பக்திப் பெருக்கோடு வழிபட்டு சென்றனர், அங்கு நடப்பட்டிருக்கும் வேல்தான் மிக முக்கியமான வழிபாட்டுச் சின்னம் .
இலங்கையில் தைப்பூசத்தன்று வீட்டை நன்கு சுத்தம் செய்து, வயலில் விளைந்த புது நெல்லைக் குத்தி அரிசியாக்கி அதனை சாதமாக வடித்து அதோடு பால், பழங்கள், சர்க்கரை சேர்த்து இறைவனுக்குப் படைத்து தாங்களும் உண்ணுகிறார்கள்.
இங்கு கொழும்பில் உள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் தைப்பூச விழா மிகவும் சிறப்பாககொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் கூட உண்டு என்பது இதன் சிறப்பு.
சிங்கப்பூரில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம் மிகவும் விசேஷம்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தைப்பூசத்துக்கு முதல் நாள் முருகன் வெள்ளிரதத்தில் லயன்சித்தி விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். நேற்று முதல் பக்தர்கள் காவடிகள் எடுத்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதை செட்டிப்பூசம் என்று அழைக்கிறார்கள். உலகம் முழுதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது