அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள் தெய்வானைப் பாட்டி. ”ம்…சொல்லுங்க!: ரவி சொன்னதும் தொண்டையைக் கனைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தாள் தெய்வானைப்பாட்டி. ”பாட்டி…நீங்க தான் அதிகமா கதை சொல்லியிருக்கீங்க, நீங்க தான் வின்னர்.!” ”எங்க கதையக் கேட்டு என்ன பண்ணப் போறீங்க…?” […]Read More
Tags :ஐரேனிபுரம் பால்ராசய்யா
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார். அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார். அன்று அவரைப் பார்க்க வந்திருந்தார். ”ஆவடி பக்கத்துல ஒரு கிரவுண்ட் இடம் இப்பத்தான் கிரயம் பண்ணினேன்,,,!” ”ரொம்ப சந்தோசம்…!” மகிழ்ந்தார் ஏகாம்பரம். ”நீயும் இருக்கியே…எப்பப் பாத்தாலும் புத்தகம் வெளியிட்டு காச கரியாக்குற…!” ”நீ வாங்கின […]Read More
காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். ”என்ன விஷயம்…!” கேட்டார் உயர் அதிகாரி. ”சார்…எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு, இன்னும் ஒரு வாரத்துல டூட்டியில ஜாயின் பண்ணணும்…!” ”டிரான்ஸ்பர்ல விருப்பம் இல்லையா…?” ”அப்படி எதுவும் இல்ல சார்…அரசு ஊழியர்ன்னா மூணு வருஷத்துக்கொரு தடவ டிரான்ஸ்பர் ஆகுறது சகஜம் தான். என் டிரான்ஸ்பர நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்..!” ”சரி…எதுக்காக […]Read More
கூந்தலை வடிகட்டிய பிறகும் இறங்க மறுத்து அடர்ந்திருந்தன அவள் தேகமேறிய ஒன்று. அவள் நிர்வாண உடம்பில் உருண்டோடிய திமிரில் விலகிக் கொள்ள விருப்பம் இன்றி கூந்தலுக்குள் மறைந்திருந்து வேடிக்கை காட்டியது பருத்தி ஆடையால் கூந்தலை போர்த்திக் கொண்டபோது இடம் மாற மனமின்றி பள்ளிக்கூடம் செல்ல அழுது அடம்பிடிக்கும் மாணவனைப் போல் அடம் பிடித்தது இறுதியாக அவள் கூந்தல் எனும் தூக்குக் கயிறில் தற்கொலை செய்து கொள்ள தயாராகி கொண்டன அவள் உடல் ருசித்த நீர்த்துளிகள். —ஐரேனிபுரம் பால்ராசய்யாRead More