8. வில்லங்க விமானி மகாபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில். ‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி நடிகை கனிஷ்காவின் கூந்தலுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர் ஹேர் ட்ரையரரைப் போட்டுக் கொண்டிருந்தார். கனிஷ்காவின் எதிரே நின்று, உதவி டைரக்டர் செந்தில் அன்றைய காட்சியை கனிஷ்காவுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். “காட்சிப்படி முதன்முறையா நீங்களும் ஹீரோ மிதுன்-னும் […]Read More
Tags :ஆன்மீக மர்மத் தொடர்
7. ஒன்று இரண்டானதென்ன..? பீஜிங்..! மில்லினியம் கிராண்ட் ஹோட்டல்-லில் இருந்து ஷுன் யீ பகுதியை நோக்கிக் கார் புறப்பட, மயூரியின் மனம் அன்று மாலை தான் காரிடாரில் பார்த்திருந்த குகன்மணியையே சுற்றி வந்தது. “எரிக்..! எனக்கு அந்த ஆளை பார்க்கறப்ப, மனசுல எதோ நெருடல் ஏற்படுது. அவனோட பார்வையும் நடவடிக்கையும் சந்தேகமா இருக்கு..! நாம பீஜிங் வந்த விமானம் ரெண்டு மூணு முறை அப்படியே குலுங்கி கீழே இறங்கின போது பயணிகள் எல்லோரும் அலறினாங்க..! ஏன்… நாங்களே […]Read More
6. மர்ம வளையம்..! நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண்தான் போனை எடுத்தாள். “அம்மா, அய்யா இரண்டு பெரும் வெளியே போயிருக்காங்க..!” –என்றதும் சலிப்புடன் போனை வைத்தார். “என்னோட அவசரம் பிள்ளைங்களுக்கு எங்கே புரியுது..? ரெண்டு பேரும் மொபைல் போனை அணைச்சு வச்சிருக்காங்க..!” […]Read More
5. மயங்குகிறாள் மயூரி!! பீஜிங் நகரம்..! மலேசியன் ஏர்லைன்ஸ் தனது ஏர் ஹோஸ்டஸ்-களைத் தங்க வைக்கும் கிராண்ட் மில்லினியம் ஹோட்டலில், தனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஆறாவது மாடி, ஆறாவது அறையான, எண் 600-ல் தான் மயூரி தங்கியிருந்தாள். நான்ஸி உள்பட மற்ற ஏழு விமானப் பணிப்பெண்களும் ஹோட்டலில் பல்வேறு வசதியான அறைகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், மயூரி மட்டும் எப்போதும் இந்த அறையில்தான் தங்குவாள். அதைத் தெரிந்துதான், ரிஸப்ஷனில் பணிபுரியும், நோரா ஜிங், கூடிய வரையில் அறை எண் 600-ஐ […]Read More
4. தங்கத்திற்குத் தங்கமுலாம் பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தானசொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்றதொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்தசிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலேநண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு! சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின் மீது நின்றிருந்த சிலையை வருடிக்கொண்டிருக்க, நல்லமுத்து எரியும் தீயின் ஒளியில், அந்தச் சிலையையே வெறித்துக்கொண்டிருந்தார். வெளியே அருவி பொழியும் ஓசையும், அது பாறையில் மோதித்தெறிக்கும் ஒலியும்தான் கேட்டன. நல்லமுத்துவின் முகத்தில் கவலை தாண்டவமாடியது. சஷ்டி […]Read More
3. நவவிஷ நாயகன் பள்ளங்கி சாலையில் வில்லம்பட்டி கிராமத்தை கடந்து மலைப்பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினார், நல்லமுத்து. பூம்பாறை, பள்ளங்கி, குறிஞ்சியாண்டவர் ஆலயம், போகர் பாசறை அனைத்துமே வெள்ளகவி காட்டின் பகுதிகளாகும். போகர் பாசறை தொடங்கி பழனி ஆண்டவன் கோவில் வரை, வெள்ளகவி காடு அடர்ந்திருக்கும். மனிதர்கள் காலடி பதிய இந்த வானமும், மலைகளும்தான் சித்தர்களுக்கு, குறிப்பாக போகரின் சீடர்களுக்கு வாசஸ்தலம். புராணகாலத்தில் இந்தப் பகுதிக்கு ‘ஸ்வேத வனம்’ என்று பெயர். அதற்கேற்றாற்போல், பசுமை மரங்களை மறைக்கும் […]Read More
2. விமானத்தில் கேட்ட அலறல்..! மார்ச் எட்டாம் தேதி, 2021. மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..! அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு வருடங்களுக்கு முன்பாக, இதே நாளில்தான், மலேசிய விமானம், எம்எச் 370 மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது. அது குறித்துப் பேசவும் யாரும் விருப்பப்படாமல், அவரவர் தங்களது பணிகளை இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தனர். புறப்படுவதற்குத் […]Read More
1. பள்ளங்கி பவனம் பள்ளங்கி– கொடைக்கானல் மலை ஏறும் வழியில், நிலப்பகுதியாகவும் இல்லாமல், மலைப்பகுதியாகவும் இல்லாமல், இரண்டுங்கெட்டானாக, சோம்பலுடன் மலைப்பகுதியின் மேடான பகுதியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் கிராமம். கொடைக்கானல் செல்லும் பாதையில், இந்த கிராமத்தின் எல்லையில்,அடர்ந்த மரங்களிடையே பிரம்மாண்டமான ஒரு நீல மூன்றடுக்கு கட்டடத்தை காணாமல் இருக்க முடியாது. ”பள்ளங்கி போகர் தலையாய சித்த வைத்தியசாலை” — என்று நீல வளைவில், பெரிய வெள்ளை எழுத்துகளில் காணப்படும். அந்த பிரம்மாண்ட நுழைவாயிலுக்கு கேட் எதுவும் இல்லை. இருபக்கமும் அடர்ந்த […]Read More