அப்பா சிதம்பரம், கொஞ்சம் சோர்வுடன் இருந்தார்! அம்மா கௌசல்யா அதைக் கவனித்தாள்! பொதுவாக கண்டிப்பும் கறாரும் இருந்தாலும், குடும்பம் என்று வந்தால் உருகும் மனிதர் சிதம்பரம்..! இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுயநலவாதியும் கூட. தன் மனைவி, மூன்று மகள்களை தவிர அவருக்கு எந்தச் சிந்தனையும் இல்லை! அவர்கள் நன்றாக இருந்தால் போதும்! தன் உடன்பிறப்புகள், மனைவியின் உறவுகள் என யாரையும் மதிக்க மாட்டார்..! யார் வீட்டு விசேஷங்களுக்கும் போகவும் மாட்டார்..! “இது சரியில்லீங்க..! நமக்கும் நாலு மனுஷங்க […]Read More
Tags :குடும்பத் தொடர்கதை
திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை நேரப் பரபரப்புடன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த வேதமூர்த்தி, “என்ன தனா… உன் பிள்ளை எழுந்தானா இல்லையா..? காலேஜ் போகலையா..?” என்றார் நக்கலுடன். “அவனை வம்புக்கிழுக்காட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே!.. இன்னைக்கு சனிக்கிழமை. கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு வந்து […]Read More
சிதம்பரம் லேசான பதட்டத்துடன், உள்ளே நுழைந்தார்! ஒன்பது மணியே ஆகியிருந்ததால் ஆஃபீசில் யாரும் வந்திருக்கவில்லை! தன் அறைக்கு வந்த சிதம்பரம், கம்ப்யூட்டரை இயக்கி, மேஜையைச் சுத்தம் செய்து, தன் வேலைகளை தொடங்கி விட்டார்! சிதம்பரம் அலுவலக ஆட்களை பெரும்பாலும் வீட்டுக்கு அழைப்பதில்லை! இங்கே முப்பது வருஷங்களாக வேலை பார்க்கிறார்! ஆரம்பம் முதலே குடும்பம் வேறு, ஆஃபீஸ் வேறு என தனித்தனியாகப் பிரித்து விட்டார்! ஆஃபீசில் நடக்கும் விழாக்களுக்கு கூட குடும்பத்தை அழைத்துப் போவதில்லை! நாலு குடும்பங்கள் ஒன்று […]Read More
“சந்தோஷமா இருக்க போல” என்ற வார்த்தை முகேஷின் மனதை நெருஞ்சி முள்ளாக நெருடியது. யாராயிருக்கும் என மனதைத் துளைத்தது கேள்விகள்.. தற்போது எல்லாம் தன்னை யாரோ தொடர்வது துரத்துவது போல் தோன்றுகிறதே! நிஜமாக இருக்குமா அல்லது மனப்பிரமையா? சுதாவிடம் எதையும் காட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றாலும் முகத்தில் கவலை ரேகைகள் ஓடியது. சுதா..ஆர்வமாக, “ஏங்க எனக்கொரு ஆசை..கல்யாணத்துக்கு முன்பே இருந்தது தான்…உங்ககிட்ட சொன்னா என்ன நினைப்பீங்களோன்னு…” என்றாள் தயங்கியவாறு. “நீ இதுவரையில் எதுவுமே ஆசைப்பட்டு கேட்டதில்லை […]Read More
கொதி நிலையில் இருந்தார் பூதம்! வீட்டுக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்! அஞ்சு, அப்பா வந்த முதலே கவனித்து விட்டாள்! அவர் முகம் அக்கினிப் பிழம்பாக இருப்பதை பார்த்தாள். “ என்னப்பா, ஏதாவது பிரச்னையா?” “இது ஆஃபீஸ் விவகாரம்மா! நீ உன் வேலையை பாரு!” பண்ணை வீட்டுக்கு அவர் போன நேரம், அருள், ஒரு பெண்ணுடன் வேகமாக பைக்கில் செல்வதைப் பார்த்து விட்டார். ஏற்கனவே ஆட்கள் தகவல் தந்து விட்டதால், அவனை அடிச்சு தூக்குங்க என உத்தரவு […]Read More
இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மகனே!” ..என வாழ்த்தினார். “தாங்ஸ்ப்பா!..” என்றவன் அம்மாவையும் மனைவியையும் தேடி சமையலறைக்கே ஓடினான். “வாங்க மை பர்த்டே பேபி!..” என சுதா கிண்டலடிக்க… வடையைத் தட்டி கொண்டிருந்த தனலட்சுமி.. “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் […]Read More
1வது அத்தியாயத்தைத் தவற விட்டவர்களுக்காக…. சிதம்பரம் – கௌசல்யா தம்பதியின் மகள்கள் பாரதி, வாசுகி, மேகலா. பாரதி, பெயருக்கேற்றபடி அழகான, அறிவான, துணிவான பெண். மேகலாவுக்கு அன்று பிறந்ததினம். தன் தோழிகளை அழைத்து பார்ட்டி வைக்க அனுமதி வாங்கி சந்தோஷமாக காலேஜ் போகிறாள். அவளுக்காக அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வரும் பாரதி, தொழிலதிபர் மாத்ருபூதம் செய்யும் தவறைக் கண்டிக்கிறாள். பொதுவில் நடந்ததால் பணிவாக மன்னிப்பு கேட்கும் மிஸ்டர் பூதம், அவளது குடும்ப விவரங்களைச் சேகரிக்க தன் உதவியாளனிடம் […]Read More
காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்.. அவனின் உறக்கம் பிடிக்காத டைம்பீஸ் அலறியது. அதன் அலறிய தலையில் ஓங்கி குட்டியவன் மறுபடியும் போர்வைக்குள் முடங்கினான். “அப்பாவும் மகளும் தூங்கியது போதுமா? எழுந்திருக்க மனசு வர்லையா அய்யாவுக்கு-” என கைகளை இடுப்பில் ஊன்றியவாறு முறைத்து கொண்டே சத்தமிட்டாள் சுதா.. போர்வைக்கு […]Read More